தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 117

பிப்ரவரி 25, 2021

மனுஷன் இப்போது அடைந்திருப்பவை—அவனது தற்போதைய சரீர வளர்ச்சி, அறிவு, அன்பு, விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் நுண்ணறிவு—இவை வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஆகும். நீ விசுவாசத்தைக் கொண்டிருப்பதும், இந்த நாள் வரை தாக்குப்பிடித்திருப்பதும் வார்த்தையின் மூலமாகவே அடையப்பட்டிருக்கின்றன. மாம்சமாகிய தேவனின் கிரியை உண்மையில் அசாதாரணமானது என்பதையும், அதில் மனுஷனால் அடைய முடியாதவை நிறைய உள்ளன என்பதையும், அவை மறைபொருட்களும் அதிசயங்களும் தான் என்பதையும் இப்போது மனுஷன் காண்கிறான். எனவே, பலர் கீழ்ப்படிந்திருக்கின்றனர். சிலர் பிறந்ததிலிருந்து எந்தவொரு மனுஷனுக்கும் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை, ஆனால் இந்த நாளில் தேவனின் வார்த்தைகளை காணும்போது, அவர்கள் அவ்வாறு செய்திருப்பதை அறியாமலேயே முழுமையாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்கள் வேறு எதையும் ஆராய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ துணிவதில்லை. மனுஷத்தன்மையானது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, வார்த்தையினுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறது. தேவனுடைய ஆவியானவர் மனுஷனிடம் நேரடியாகப் பேசியிருந்தால், மனுஷகுலம் அனைவரும் அந்தக் குரலுக்கு அடிபணிந்து, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் பவுல் தரையில் விழுந்த விதத்தில், வெளிப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் கீழே விழுந்துவிடுவார்கள். தேவன் இவ்வாறாக தொடர்ந்து கிரியை செய்தால், மனுஷன் ஒருபோதும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் தனது சொந்தச் சீர்கேட்டை அறிந்து கொள்ள முடியாது, அதன் மூலம் இரட்சிப்பையும் அடைய முடியாது. மாம்சமாக மாறுவதன் மூலம்தான் தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய செவிகளிலும் தனிப்பட்ட முறையில் தனது வார்த்தைகளைச் சொல்ல முடியும், இதனால் செவிகள் உள்ள அனைவருமே அவருடைய வார்த்தைகளை கேட்டு, அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் பெற முடியும். மனுஷனை அடிபணியச் செய்ய ஆவியானவர் வெளிப்படுவதை விட, அவருடைய வார்த்தையால் அடையப்படும் விளைவு இதுதான். இந்த நடைமுறை மற்றும் அசாதாரணக் கிரியையின் மூலம்தான், மனுஷனின் பழைய மனநிலையை, பல ஆண்டுகளாக ஆழமாக மறைந்திருக்கும் மனநிலையை, முழுமையாக அம்பலப்படுத்த முடியும், இதனால் மனுஷன் அதை அடையாளம் கண்டு அதை மாற்றியமைக்க முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் மாம்சமாகிய தேவனின் நடைமுறைக்கான கிரியைகளாகும், அதில், நியாயத்தீர்ப்பை ஒரு நடைமுறைக்கான முறையில் பேசுவது மற்றும் செயல்படுத்துவது ஆகிய முறைகளில், அவர் மனுஷனுக்கான நியாயத்தீர்ப்பின் முடிவுகளை வார்த்தையால் அடைகிறார். இதுவே மாம்சமாகிய தேவனின் அதிகாரம் மற்றும் தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் ஆகும். மாம்சமாகிய தேவனின் அதிகாரத்தை அறிவதற்கும், வார்த்தையினுடைய கிரியையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கும், ஆவியானவர் மாம்சத்தில் வந்துள்ளார் என்பதையும், வார்த்தையால் மனுஷனை நியாயந்தீர்ப்பதன் மூலம் அவருடைய அதிகாரத்தை நிரூபிக்கிறார் என்பதைக் காட்டுவதற்கும் இது செய்யப்படுகிறது. அவருடைய மாம்சம் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷகுலத்தின் வெளிப்புற வடிவம்தான் என்றாலும், அவர் அதிகாரம் மிக்கவர் என்றும், அவரே தேவன் என்றும், அவருடைய வார்த்தைகள் தேவனின் வெளிப்பாடு என்றும் மனுஷனுக்கு காண்பிக்கும் அவருடைய வார்த்தைகள் அடையும் முடிவுகள் தான் அது. இதன் மூலம் மனுஷர் அனைவருக்கும் அவர் தான் தேவன் என்றும், அவர் தான் மாம்சமாக மாறியவர் என்றும், அவர் யாராலும் இடறலடையக்கூடாது என்றும், அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் யாராலும் மிஞ்ச முடியாது என்றும், அந்தகாரத்தின் எந்த சக்தியும் அவருடைய அதிகாரத்தைத் தாண்டி மேலோங்க முடியாது என்றும் காட்டப்பட்டுள்ளது. அவர் தான் மாம்சமாகிய வார்த்தை என்பதால், அவரது அதிகாரத்தினால், மற்றும் அவரது வார்த்தையின் நியாயத்தீர்ப்பினால் மனுஷன் அவருக்கு முழுக்க முழுக்க கீழ்ப்படிகிறான். அவருடைய மாம்சத்தால் கொண்டுவரப்பட்ட கிரியையே, அவர் வைத்திருக்கும் அதிகாரம் ஆகும். அவர் மாம்சமாகியதன் காரணம் என்னவென்றால், மாம்சத்திற்கும் அதிகாரம் இருக்க முடியும், மேலும் அவரால் மனுஷரிடையே ஒரு நடைமுறைக்குரிய முறையில் கிரியையைச் செய்ய முடியும், அதை மனுஷனுக்குத் தெரியும் வகையிலும் மற்றும் உறுதியான முறையிலும் செய்ய முடியும். எல்லா அதிகாரங்களையும் கொண்ட தேவனின் ஆவியால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையை விட இந்தக் கிரியை மிகவும் யதார்த்தமானது, மேலும் அதன் முடிவுகளும் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், மாம்சமாகிய தேவனால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் பேசவும் கிரியை செய்யவும் முடியும். அவருடைய மாம்சத்தின் வெளிப்புற வடிவம் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, மேலும் மனுஷனால் அதனை அணுக முடியும், அதேசமயம் அவருடைய சாராம்சமானது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அவருடைய அதிகாரம் யாருக்கும் தெரிவதில்லை. அவர் பேசும் போதும், கிரியை செய்யும்போதும், மனுஷனால் அவரது அதிகாரத்தின் இருப்பைக் கண்டுபிடிக்க முடிவதில்லை; இது ஒரு நடைமுறைக்குரிய இயல்புடைய கிரியையை செய்வதற்கு அவருக்கு உதவுகிறது. இந்த நடைமுறைக்குரிய கிரியைகள் அனைத்தாலும் முடிவுகளை அடைய முடியும். எந்தவொரு மனுஷனும் அவரிடம் அதிகாரம் இருப்பதை உணருவதில்லை, அல்லது அவர் இடறலடையப்படக்கூடாதவர் என்பவர் என்பதை, அல்லது அவரது கடுங்கோபத்தைக் காண்கிறான் என்றாலும், அவர் மறைத்து வைத்திருக்கும் அதிகாரம், மறைக்கப்பட்ட கோபம் மற்றும் அவர் வெளிப்படையாக பேசும் வார்த்தைகள் ஆகியவற்றின் மூலம் அவன் வார்த்தைகளின் திட்டமிடப்பட்ட முடிவை அடைகிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய குரல், அவரது பேச்சின் கடினத்தன்மை மற்றும் அவரது வார்த்தைகளில் இருக்கும் அனைத்து ஞானத்தின் மூலமும் மனுஷன் முற்றிலும் சமாதானப்படுத்தப்படுகிறான். இவ்வாறாக, மனுஷன், மாம்சமாகிய தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறான், அவனுக்கு அதிகாரமே இல்லை, இதன் மூலம் மனுஷனைக் இரட்சிப்பதற்கான தேவனின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இது அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தின் மற்றொரு அம்சமாகும்: இன்னும் யதார்த்தமாக பேசுவதும், அவருடைய வார்த்தைகளின் யதார்த்தம் மனுஷனுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிப்பதும், இதன்மூலம் மனுஷனால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையைக் காணக்கூடும். எனவே, இந்தக் கிரியை மாம்சமாகிய தேவன் மூலம் செய்யப்பட்டிருக்காவிட்டால், அது சிறிதளவு முடிவுகளைக் கூட அடைந்திருக்காது, மேலும் பாவிகளை முழுமையாக இரட்சிக்கவும் முடிந்திருக்காது. தேவன் மாம்சமாகி இருக்காவிட்டால், அவர் மனுஷனின் கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவனால் தொட்டுணர முடியாத ஆவியானவராக இருந்திருப்பார். மனுஷன் மாம்சத்திலான சிருஷ்டியாக இருப்பதால், அவனும் தேவனும் இரண்டு வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக, வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தாலான மனுஷனுடன் இணக்கமில்லாதவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்த எந்த வழியும் இல்லை. மனுஷனால் ஒரு ஆவியாக மாற இயலாது. இது அவ்வாறு இருப்பதால், தேவனுடைய ஆவியானவர் அவருடைய உண்மையான கிரியையைச் செய்ய ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக மாற வேண்டும். தேவனால் மிக உயர்ந்த இடத்திற்கு ஏறி, ஒரு மனுஷ ஜீவனாக மாறுவதற்கு தம்மைத் தாழ்த்திக் கொள்ள முடியும், மனுஷரிடையே கிரியை செய்து, அவர்கள் மத்தியில் வாழவும் முடியும், ஆனால் மனுஷனால் உயர்ந்த இடத்திற்கு ஏறி ஒரு ஆவியாக மாற முடியாது, மேலும் மிகவும் தாழ்ந்த இடத்திற்கு இறங்கவும் முடியாது. இதனால்தான் தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அதே அடையாளத்தின் மூலம், தேவன் முதல்முறை மாம்சமாகியபோது, மாம்சமாகிய தேவனின் மாம்சத்தால் மட்டுமே மனுஷனை மீட்டெடுக்க சிலுவையில் அறையப்பட முடியும், அதேசமயம் தேவனுடைய ஆவியானவர் மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக சிலுவையில் அறையப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய தேவன் நேரடியாக மாம்சமாகியிருக்க முடியும், ஆனால் தேவன் தனக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பாவநிவாரணப்பலியை எடுக்க மனுஷனால் நேரடியாக வானத்திற்கு ஏற முடியாது. அப்படியானால், சாத்தியமானதெல்லாம், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு சில முறை முன்னும் பின்னுமாக ஓடும்படி தேவனிடம் கேட்பது மட்டுமே, இந்த இரட்சிப்பை எடுக்க மனுஷன் வானத்திற்கு ஏற அல்ல, ஏனென்றால் மனுஷன் விழுந்துவிட்டான், மேலும், மனுஷனால் வெறுமனே வானத்திற்கு ஏற முடியாது, பாவநிவாரணப்பலியைப் பெறவும் முடியாது. ஆகையால், இயேசு மனுஷகுலத்தின் மத்தியில் வந்து மனுஷனால் வெறுமனே செய்ய முடியாத கிரியையை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தேவன் மாம்சமாக மாறும்போதும், அது முழுமையாக தேவையற்றதாக இருப்பதில்லை. எந்தவொரு கட்டமும் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், மாம்சமாகும் இழிநிலைக்கு அவர் கீழ்படிந்திருக்க மாட்டார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க