தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 116

மார்ச் 24, 2023

மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள். மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிவுக்கு வந்தபின், கிருபையின் யுகத்திலிருந்து, தேவன் இரட்சிப்பின் கிரியையைத் தொடங்கினார், இது கடைசிக் காலம் வரை தொடர்கிறது, மனுஷ இனத்தை அவர்களின் கலகத்தன்மைக்காக அவர்களை நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சைக்கு உட்படுத்தி, அவர் மனுஷகுலத்தை முழுமையாகச் சுத்திகரிப்பார். அப்போதுதான் தேவன் தம்முடைய இரட்சிப்பின் கிரியையை முடித்துவிட்டு ஓய்வெடுப்பார். ஆகையால், கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே நிறைவேற்ற இரண்டு முறை மட்டுமே மாம்சமாகியிருக்கிறார். ஏனென்றால், கிரியையின் மூன்று கட்டங்களில் ஒன்று மட்டுமே மனுஷரை தங்கள் ஜீவிதத்தை வழிநடத்த வழிகாட்டும், மற்ற இரண்டுமே இரட்சிப்பின் கிரியைகளைக் கொண்டிருக்கும். மாம்சமாவதன் மூலம் மட்டுமே தேவன் மனுஷனுடன் இணைந்து ஜீவிக்கவும், உலகின் துயரங்களை அனுபவிக்கவும், சாதாரண மாம்ச சரீரத்தில் ஜீவிக்கவும் முடியும். இவ்வாறாக மட்டுமே அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தேவையான நடைமுறைப் பாதையை வழங்க முடியும். மாம்சமாகிய தேவன் மூலம்தான் மனுஷன் தேவனிடமிருந்து முழு இரட்சிப்பைப் பெறுகிறான், அவனுடைய ஜெபங்களுக்கு பதில் பரலோகத்திலிருந்து நேரடியாக வருவதில்லை. ஏனென்றால், மனுஷன் மாம்சமாகவும் இரத்தமாகவும் இருப்பதால், அவனுக்கு தேவனுடைய ஆவியானவரைக் காணவும் வழி இல்லை, அவருடைய ஆவியானவரை அணுகவும் முடியாது. மனுஷன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே விஷயம் மாம்சமாகிய தேவன் மட்டும்தான், மேலும் இதன் மூலம் மட்டுமே மனுஷன் எல்லா வழிகளையும் எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்டு முழு இரட்சிப்பைப் பெற முடியும். தேவன் இரண்டாவது முறை மாம்சமாவது மனுஷனின் பாவங்களை நீக்குவதற்கும் அவனை முழுமையாக சுத்திகரிப்பதற்கும் போதுமானதாக இருக்கும். ஆகையால், தேவன் இரண்டாவது முறை மாம்சமாவதுடன், மாம்சத்தில் தேவனின் முழுக் கிரியையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் முழுமையாக்கப்படும். இதன்மூலம், மாம்சத்தில் தேவனின் கிரியை முற்றிலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவன் இரண்டாவது முறையாக மாம்சமாகியதற்குப் பிறகு, அவர் தமது கிரியைக்காக மூன்றாவது முறையாக மாம்சமாக மாற மாட்டார். அவருடைய முழு நிர்வகித்தலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவனின் கடைசிக் காலத்திற்கான மாம்சம் அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களை முழுமையாகப் பெற்றிருக்கும், கடைசிக் காலத்தின் மனுஷத்தன்மை அனைத்தும் வகையின்படி வகைப்படுத்தப்படும். அவர் இனியும் இரட்சிப்பின் கிரியையைச் செய்யமாட்டார், எந்தக் கிரியையும் செய்ய மாம்சத்திற்குத் திரும்பமாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (4)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க