தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 115

மே 4, 2023

தேவன் மாம்சத்தில் வருவது மனுஷனை தமது மாம்சத்தை அறிய அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்லது தேவனின் மாம்சத்திற்கும் மனுஷனின் மாம்சத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை வேறுபடுத்திப் பார்க்க மனுஷனை அனுமதிக்கும் நோக்கத்திற்கோ அல்ல; மனுஷனின் பகுத்தறியும் சக்திகளைப் பயிற்றுவிக்கவும் தேவன் மாம்சமாக மாறவில்லை, மேலும் மாம்சமாகிய தேவனை வணங்க மனுஷனை அனுமதித்து அதன் மூலம் பெரும் மகிமை அடையும் நோக்கத்தோடும் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவன் மாம்சமாவதன் நோக்கம் அல்ல. மனுஷனைக் கண்டிக்கவோ, வேண்டுமென்றே மனுஷனை வெளிப்படுத்தவோ, அவனுக்கு விஷயங்களை கடினமாக்கவோ தேவன் மாம்சமாகவில்லை. இந்த விஷயங்கள் எதுவும் தேவனின் நோக்கம் அல்ல. ஒவ்வொரு முறையும் மாம்சத்தில் வரும்போது, அது தவிர்க்க முடியாத ஒரு கிரியையாக இருக்கிறது. மனுஷன் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அல்ல, ஆனால் அவருடைய பெரிய கிரியைக்காகவும், அவருடைய பெரிய ஆளுகைக்காகவும் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். தமது கிரியைக்கு தேவை என்பதாலும், அவசியம் என்பதாலும்தான் தேவன் பூமிக்கு வருகிறார். அவர் வெறுமனே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பூமிக்கு வருவதில்லை, ஆனால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வருகிறார். வேறு எதற்காக அவர் இந்த கிரியையைச் செய்ய இவ்வளவு பெரிய சுமையை ஏற்றுக்கொண்டு இவ்வளவு பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டும்? தேவன் அவர் மாம்சமாக வேண்டியபோதுதான் மாம்சமாகிறார், எப்போதும் தனித்துவமான முக்கியத்துவத்துடன் மாம்சமாகிறார். ஜனங்கள் அவரைப் பார்க்கவும், அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும் அனுமதிப்பதற்காக மட்டுமே தேவன் மாம்சமாக வருவதாக இருந்திருந்தால், அவர் நிச்சயமாக ஜனங்களிடையே ஒருபோதும் இவ்வளவு எளிதாக வந்திருக்கமாட்டார். அவர் தமது ஆளுகைக்காகவும், அவருடைய பெரிய கிரியைக்காகவும், அதன் மூலம் அவர் மனுஷகுலத்தை அதிகம் ஆதாயம் செய்வதற்காகவும் பூமிக்கு வருகிறார். அவர் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வருகிறார், அவர் சாத்தானைத் தோற்கடிக்க வருகிறார், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக அவர் மாம்சத்தை அணிந்துகொள்கிறார். அதற்கும் மேலாக, முழு மனுஷகுலத்தையும் அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்துவதற்காக அவர் வருகிறார். இவை அனைத்தும் அவருடைய நிர்வகித்தலையும், முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் பற்றியது. மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்ளவும், ஜனங்களின் கண்களைத் திறக்கவுமே தேவன் மாம்சத்தில் வந்திருந்தால், அவர் ஏன் ஒவ்வொரு தேசத்திற்கும் பயணிக்கவில்லை? இது மிகவும் எளிதான விஷயமாக இருந்திருக்காதா? ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, அதற்குப் பதிலாக அவர் செய்ய வேண்டிய கிரியையைத் தொடங்கவும் அதற்கானப் பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்தார். இந்த மாம்சம் மட்டும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு முழு யுகத்தைப் பிரதிநித்துவப்படுத்துகிறார், மேலும் ஒரு முழு யுகத்தின் கிரியையையும் செய்கிறார்; அவர் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய யுகத்தைத் தொடங்குகிறார். இவை அனைத்தும் தேவனின் நிர்வகித்தல் பற்றிய ஒரு முக்கியமான விஷயமாகும், மேலும் இவை அனைத்தும் தேவன் பூமியில் செய்வதற்கு வரும் கிரியையின் ஒரு கட்டத்தின் முக்கியத்துவமுமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (3)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க