தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 113

மே 4, 2023

தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது, அவர் எதையும் கட்டியெழுப்புவதற்கோ அல்லது இயக்கங்களை உருவாக்குவதற்கோ இங்கு வருவதில்லை, மாறாக அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே வருகிறார். ஒவ்வொரு முறையும் கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுவதற்கும், புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். ராஜ்யத்தின் பயிற்சியைப் போலவே இப்போது ராஜ்யத்தின் யுகமும் வந்துள்ளது. கிரியையின் இந்தக் கட்டம் மனுஷனின் கிரியை அல்ல, இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனுஷனை கிரியை செய்ய வைக்கும் கட்டமும் அல்ல, ஆனால் தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதற்கானக் கட்டம் ஆகும். அவர் செய்வது மனுஷனின் கிரியை அல்ல, பூமியை விட்டுப் புறப்படும் முன் மனுஷனுள் செய்யும் கிரியையில் ஒரு குறிப்பிட்ட முடிவை எட்டுவதற்காகவும் அல்ல; அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடிப்பதும் மட்டுமே ஆகும், அதாவது பூமியில் அவர் செய்யும் கிரியைகளுக்குச் சரியான ஏற்பாடுகளைச் செய்வதும், அதன் மூலம் மகிமை அடைவதுமே ஆகும். மாம்சமாகிய தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை போன்றது அல்ல. தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வரும்போது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே அவர் அக்கறை காட்டுகிறார். அவருடைய ஊழியத்துடன் தொடர்பில்லாத மற்ற எந்த விஷயங்களிலும், கண்மூடித்தனமாகக் கூட எந்தப் பங்கையும் எடுப்பதில்லை. அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டும் அவர் செய்கிறார், மேலும் மனுஷன் செய்ய வேண்டிய கிரியையைப் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. அவர் செய்யும் கிரியை, அவர் இருக்கும் யுகம் மற்றும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியம் ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது, மற்ற எல்லா விஷயங்களும் அவருடைய ஆதிக்க எல்லைக்கு வெளியே இருப்பதைப் போல்தான் அவர் இருக்கிறார். மனுஷரில் ஒருவராக ஜீவித்திருப்பதைப் பற்றிய அடிப்படை அறிவை அவர் கொண்டிருப்பதில்லை, மேலும் சமூகத் திறன்களையும் கற்றுக்கொள்வதில்லை, மனுஷன் புரிந்துகொள்ளும் வேறு எதையுமே அவர் கொண்டிருப்பதில்லை. மனுஷன் வைத்திருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை, அவரது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே செய்கிறார். எனவே, மனுஷன் பார்வையில், மாம்சமாகிய தேவன் அதிக அளவில் குறைவுபட்டவராக இருக்கிறார், அதனால் மனுஷன் வைத்திருக்க வேண்டிய பல விஷயங்களை அவர் கவனிப்பது கூட இல்லை, அத்தகைய விஷயங்களைப் பற்றி அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை. ஜீவிதத்தைப் பற்றியப் பொதுவான அறிவு, அத்துடன் தனிப்பட்ட நடத்தை மற்றும் மற்றவர்களுடனான தொடர்புகளை நிர்வகிக்கும் கொள்கைகள் போன்றவை அவருடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மாம்சமாகிய தேவனிடமிருந்து சிறிதளவு அசாதாரணத் தன்மையைக் கூட உன்னால் உணர முடியாது. அதாவது, அவருடைய மனுஷத்தன்மையானது, அவரது ஜீவிதத்தை ஒரு சாதாரண மனுஷனாகவும், அவரது மூளையை இயல்பான பகுத்தறிவு கொண்டதாகவும் மட்டுமே பராமரிக்கிறது. அது அவருக்குச் சரியானது எது தவறானது எது என்பதைக் கண்டறியும் திறனை அளிக்கிறது. இருப்பினும், மனுஷன் (சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள்) மட்டுமே வைத்திருக்க வேண்டிய வேறு விஷயங்கள் எதுவும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற மட்டுமே மாம்சமாகிறார். அவரது கிரியை எந்த ஒரு தனிநபரிடத்திலோ அல்லது இடத்திலோ அல்லாமல் முழு பிரபஞ்சத்திலும் செய்யப்படுகிறது. இதுவே அவருடைய கிரியையின் திசையும் அவர் செயல்படும் கொள்கையும் ஆகும். இதை யாராலும் மாற்ற முடியாது, மேலும் மனுஷனுக்கு அதில் ஈடுபட எந்த வழியும் இல்லை. ஒவ்வொரு முறை தேவன் மாம்சமாகும்போதும், அந்த யுகத்தின் கிரியையை அவர் தன்னுடன் கொண்டு வருகிறார், மேலும் அவரைப் பற்றி சிறப்பாகப் புரிந்துகொள்ளும் மற்றும் உள்ளார்ந்த அறிவைப் பெறும் பொருட்டு இருபது, முப்பது, நாற்பது, அல்லது எழுபது அல்லது எண்பது ஆண்டுகள் கூட மனுஷனுடன் சேர்ந்து ஜீவிப்பதற்கான எண்ணம் அவருக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை! அவ்வாறு செய்வது எந்த வகையிலும் தேவனின் உள்ளார்ந்த மனநிலையைப் பற்றிய மனுஷனின் அறிவை ஆழப்படுத்தாது; அதற்குப் பதிலாக, அது அவனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே செய்யும் மற்றும் அவனது கருத்துகளையும் எண்ணங்களையும் பழமையானதாக்கிவிடும். ஆகவே, மாம்சமான தேவனின் கிரியை என்ன என்பதை நீங்கள் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் உங்களிடம் பேசிய வார்த்தைகளை நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ளத் தவறியிருக்க முடியாது: "நான் சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை அனுபவிப்பதற்காக வரவில்லையா?" "தேவன் பூமிக்கு ஒரு சாதாரண மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்க வருவதில்லையா?" என்ற வார்த்தைகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? மாம்சமாக மாறுவதில் இருக்கும் தேவனின் நோக்கம் உங்களுக்கு புரியவில்லை, மேலும், "சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷனின் ஜீவிதத்தை அனுபவிக்கும் நோக்கத்துடன் தேவன் எவ்வாறு பூமிக்கு வர முடியும்?" என்பதன் அர்த்தமும் உங்களுக்குத் தெரியவில்லை. தேவன் தமது கிரியையை நிறைவு செய்ய மட்டுமே பூமிக்கு வருகிறார், எனவே பூமியில் அவர் செய்யும் கிரியை குறுகிய காலத்திற்கானது. அவர் பூமிக்கு வருவது தேவ ஆவியானவர் தம்முடைய சரீர உடலை திருச்சபையை வழிநடத்தும் ஓர் உயர்ந்த மனுஷனாக உருவாக்க அல்ல. தேவன் பூமிக்கு வரும்போது, அதுவே மாம்சமாகும் வார்த்தை என்பதாகும்; இருப்பினும், மனுஷன் அவருடைய கிரியையைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அவரைப் பற்றிய விஷயங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறான். ஆனால் தேவன்தான், மாம்சமாகிய வார்த்தை என்பதையும், அவர் இப்போதைக்கு தேவனின் பங்கை ஏற்றுக்கொள்வதற்காக தேவ ஆவியானவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாம்ச சரீரம் அல்ல என்பதையும் நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தேவன் என்பவர் பயிரிட்டதனால் கிடைத்த விளைபொருள் அல்ல, ஆனால் அவர்தான் மாம்சமாகிய வார்த்தை, இன்று அவர் உங்களிடையே தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்கிறார். தேவன் மாம்சமாகியது உண்மை என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள், ஒப்புக்கொள்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அதை புரிந்துகொண்டது போல் செயல்படுகிறீர்கள். மாம்சமாகிய தேவனின் கிரியை முதல் அவருடைய மாம்சத்தின் முக்கியத்துவம் மற்றும் சாராம்சம் வரை என உங்களால் இவற்றை மிகச் சிறிய அளவிற்குக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை, மேலும் ஞாபகசக்தியிலிருந்து வார்த்தைகளை மென்மையாக ஒப்பிப்பவர்களை மட்டுமே பின்பற்றுகிறீர்கள். நீங்கள் கற்பனை செய்வது போலத்தான் மாம்சமாகிய தேவன் இருப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (3)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க