தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 107
மே 16, 2023
கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மை அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவர் மாம்சத்தில் இருந்தபோதிலும், அவருடைய மனிதத்தன்மையானது மாம்சத்திலிருக்கிற மனிதனைப் போன்றது அல்ல. அவர் தமக்கென்றுள்ள தனித்துவமான குணத்தைப் பெற்றிருக்கிறார், இதுவும் அவருடைய தெய்வீகத்தன்மையால் நிர்வகிக்கப்படுகிறது. அவருடைய தெய்வீகத்தன்மைக்கு பலவீனம் இல்லை; கிறிஸ்துவின் பலவீனம் என்பது அவருடைய மனிதத் தன்மையைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த பலவீனமானது அவருடைய தெய்வீகத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது, ஆனாலும் அத்தகைய வரம்புகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் நேரத்திற்கும் உட்பட்டவையாகும், மேலும் அவை வரம்பற்றவை அல்ல. அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையைச் செய்யும்படியான நேரம் வரும்போது, அது அவருடைய மனிதத்தன்மையைப் பொருட்படுத்தாமல் செய்யப்படுகிறது. கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் முழுமையாக வழிநடத்தப்படுகிறது. அவருடைய மனிதத்தன்மையின் இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்து, அவருடைய மனிதத்தன்மையின் மற்ற அனைத்து செயல்களும் அவருடைய தெய்வீகத்தன்மையால் செல்வாக்கைப் பெற்று, செயல் விளைவை அடைந்து, வழிநடத்தப்படுகின்றன. கிறிஸ்துவிடம் ஒரு மனிதத்தன்மை இருந்தபோதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை சீர்குலைப்பதில்லை, துல்லியமாக இதன் காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையினால் வழிநடத்தப்படுகிறது; மற்றவர்களுடனான நடத்தையில் தம்மை எவ்வாறு நடத்துகிறது என்பதில் அவருடைய மனிதத்தன்மையானது முதிர்ச்சியடையவில்லை என்ற போதிலும், அது அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைப் பாதிப்பதில்லை. கிறிஸ்துவினுடைய மனிதத்தன்மையானது சீர்கெட்டுப்போகவில்லை என்று நான் கூறும்போது, கிறிஸ்துவின் மனிதத்தன்மையானது அவருடைய தெய்வீகத்தன்மையால் நேரடியாகக் கட்டளையிடப்பட முடியும் என்றும், சாதாரண மனிதனை விட மிகவும் உயர்ந்த உணர்வு அவருக்கு உண்டு என்பதைத்தான் நான் சொல்கிறேன். அவருடைய மனிதத்தன்மையானது அவரது கிரியையின் தெய்வீகத் தன்மையால் வழிநடத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது; அவரது மனிதத்தன்மையானது தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துவதற்கு மிகவும் வல்லது, மேலும் இதுபோன்ற கிரியைக்கு கீழ்ப்படிந்திருப்பதற்கும் வல்லதாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் செயல்படுகிறார் என்பதால், மாம்சத்தில் ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமை மீதான தனது பார்வையை அவர் ஒருபோதும் இழப்பதில்லை; பரலோகத்திலுள்ள தேவனை அவர் ஓர் உண்மையான இருதயத்தோடு தொழுதுகொள்ள முடிகிறது. அவர் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் தேவனே அவருடைய அடையாளமாக இருக்கிறார். ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக மாறி அவர் பூமிக்கு வந்திருக்கிறார் என்பது, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபரின் வெளிப்புற தோற்றத்துடன், இப்போது அவருக்கு இருக்கிற மற்றும் முன்னமே இல்லாத ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதையே குறிப்பிடுகிறது. அவரால் பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்ள முடிகிறது; இது தேவனாக இருப்பதாகும் மற்றும் இது மனிதனால் பார்த்துப் பின்பற்ற முடியாததுமாகும். தேவனாக இருக்கிறார் என்பதே அவரது அடையாளம். அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்தே தேவனைத் தொழுதுகொள்கிறார்; எனவே, "கிறிஸ்து பரலோகத்திலுள்ள தேவனைத் தொழுதுகொள்கிறார்" என்னும் வார்த்தைகள் தவறானவை அல்ல. அவர் மனிதனிடம் கேட்பது துல்லியமாக அவருடைய சுய பிரசன்னத்தையே ஆகும்; அத்தகையவற்றைக் கேட்பதற்கு முன்பே அவர் மனிதனிடம் கேட்கும் யாவற்றையும் அவர் ஏற்கெனவே அடைந்துள்ளார். அவரே அவர்களிடமிருந்து விடுபட்டவராக இருக்கிறபோது அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்க மாட்டார், ஏனென்றால் இவை அனைத்தும் அவருடைய பிரசன்னத்தை உள்ளடக்கியவை. அவர் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுக்குக் கீழ்ப்படியாத வகையில் அவர் செயல்பட மாட்டார். அவர் மனிதனிடம் எதைக் கேட்டாலும், எந்தவொரு கோரிக்கையும் மனிதனால் அடையக்கூடியதை விட அதிகமானது அல்ல. அவர் செய்வதெல்லாம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதும் மற்றும் அவருடைய நிர்வாகத்திற்குமே ஆகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையானது சகல மனுஷருக்கும் மேலானது; ஆகையால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அவர் மிக உயர்ந்த அதிகாரம் உடையவராக இருக்கிறார். இந்த அதிகாரம் அவருடைய தெய்வீகத்தன்மையாகும், அதாவது தேவனுடைய மனநிலை மற்றும் பிரசன்னமாகும், அதுதான் அவருடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாததாகும்; அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்து பேசினாலும், அவர் தேவனுடைய சித்தத்திற்கு எந்த அளவுக்கு கீழ்ப்படிந்தாலும், அவர் தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. மதிகெட்ட மற்றும் அறிவற்ற மனிதர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவின் சாதாரண மனிதத்தன்மையை ஒரு குறைபாடாகவே கருதுகின்றனர். அவர் தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதை எவ்வளவு எடுத்துரைத்தாலும் மற்றும் வெளிப்படுத்தினாலும், அவர் கிறிஸ்துதான் என்பதை மனிதன் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறான். கிறிஸ்து தமது கீழ்ப்படிதலையும் மனத்தாழ்மையையும் எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு மதிகெட்ட மனிதர்கள் கிறிஸ்துவை லேசாகக் கருதுகிறார்கள். அவர் மீது புறக்கணிப்பு மற்றும் அவமதிப்பு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறவர்கள் கூட இருக்கிறார்கள், ஆனாலும் "மகான்களின்" உயரமான உருவங்களை மேஜையின் மேல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள். மனிதனின் எதிர்ப்பும் கீழ்ப்படியாமையும் மாம்சத்தில் வந்த தேவனுடைய அவதாரத்தின் சாராம்சமானது தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதிலிருந்து வருகிறது, அதுபோலவே கிறிஸ்துவின் சாதாரண மனிதத்தன்மையிலிருந்தும் வருகிறது; இதுதான் தேவனுக்கு எதிரான மனிதனுடைய எதிர்ப்பிற்கும் கீழ்ப்படியாமைக்கும் பிறப்பிடமாகும். கிறிஸ்து அவருடைய மனிதத்தன்மை என்னும் மாறுவேடத்தைக் கொண்டிருக்கவில்லை மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாடாமல் இருந்து, மாறாக ஒரு மாபெரும் மேன்மையான மனிதத்தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தால், பெரும்பாலும் மனிதர்களிடையே கீழ்ப்படியாமை இல்லாமல் இருந்திருக்கும். பரலோகத்தில் இருக்கும் அதரிசனமான ஒரு தேவனை மனிதன் எப்போதும் நம்புவதற்கான காரணம் என்னவென்றால், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மனிதனுடைய தன்மையில்லை, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் ஒரு குணம் கூட அவரிடம் இல்லை என்பதேயாகும். ஆகவே, மனிதன் எப்போதும் அவரை மிகுந்த மரியாதையுடன் கனம் பொருந்தியவராகக் கருதுகிறான், ஆனால் அதேவேளையில் கிறிஸ்துவை அவமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறான்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்