தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 106

மே 16, 2023

தேவனுடைய சாராம்சமே அதிகாரம் செலுத்துகிறது, ஆனால் அவரிடமிருந்து வரும் அதிகாரத்திற்கு அவர் முழுமையாக கீழ்ப்படியக் கூடியவராக இருக்கிறார். அது ஆவியானவருடைய கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், அவை மற்றவற்றுடன் முரண்படுவதில்லை. எல்லா சிருஷ்டிப்புகள் மீதும் தேவனுடைய ஆவியானவர் அதிகாரமுடையவராக இருக்கிறார். தேவனுடைய சாராம்சத்தைக் கொண்ட மாம்சத்திற்கும் அதிகாரம் உண்டு, ஆனால் மாம்சத்தில் உள்ள தேவன் பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறதான எல்லா கிரியைகளையும் செய்யக் கூடியவராக இருக்கிறார். இதை எந்த ஒரு தனிப்பட்ட நபராலும் அடையவோ அல்லது பெறவோ முடியாது. தேவனே முழு அதிகாரம் உடையவராக இருக்கிறார், ஆனால் அவருடைய மாம்சமானது அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படியக் கூடியதாக இருக்கிறது. "பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிகிறார்" என்று கூறப்படும் போது, இவ்வாறுதான் அர்த்தம் கொள்ளப்படுகிறது. தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார், தேவன் மனிதனாக முடிகிறது போல அவராலே இரட்சிப்பின் கிரியையைச் செய்ய முடியும். எப்படியிருந்தாலும், தேவன் தாமே தமது சொந்த கிரியையைச் செய்கிறார்; அவர் குறுக்கிடவோ, தலையிடவோ செய்யாமல், அதையும்விட அவர் தம்மை முரண்படுத்தும் கிரியையை செய்வதில்லை, ஏனென்றால் ஆவியானவரும் மாம்சமாய் வந்தவரும் செய்யும் கிரியையின் சாராம்சம் ஒன்றாயிருக்கிறது. அது ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக வந்தவராக இருந்தாலும், இருவரும் ஒரே சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் மற்றும் ஒரே கிரியையை நிர்வகிப்பதற்குமே கிரியையை நடப்பிக்கிறார்கள். ஆவியானவரும் மாம்சமானவரும் இருவரும் முற்றிலும் வேறுபட்ட குணங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் சாராம்சங்கள் ஒன்றாயிருக்கின்றன; இருவருமே தேவனுடைய சாராம்சம் மற்றும் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். கீழ்ப்படியாமையின் எந்த அம்சங்களையும் தேவன் தாமே தம்மில் கொண்டிருக்கவில்லை; அவரது சாராம்சம் நன்மையானதாக இருக்கிறது. அவர் தாமே சகல அழகு மற்றும் நன்மைகளின் வெளிப்பாடாக இருக்கிறார், அதேபோல் அவர் சகல அன்புள்ளவராகவும் இருக்கிறார். மாம்சத்தில் கூட, பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படியாத செயல் எதையும் தேவன் செய்வதில்லை. தமது ஜீவனைப் பலியாகக் கொடுக்கும் விஷயத்தில் கூட, அவர் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல், அவர் முழு மனதுடன் அவ்வாறே செய்யத் தயாராக இருந்தார். தேவன் சுய-நீதி அல்லது சுய-முக்கியத்துவமாகிய எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை, அல்லது வீண் பெருமை மற்றும் அகந்தை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை; சீர்கேடான எந்த அம்சங்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படியாத அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன; சகல அவலட்சணத்திற்கும் துன்மார்க்கத்திற்கும் சாத்தான்தான் ஆதாரம். மனிதன் சாத்தானால் சீர்கெட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதுதான், சாத்தானுக்கு இருக்கின்ற குணங்களைப் போன்று மனிதனுடைய குணங்களும் இருப்பதற்கான காரணமாகும். கிறிஸ்துவானவர் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, எனவே அவர் சாத்தானின் குணங்கள் எதுவும் கொண்டிராமல் தேவனுடைய குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார். எவ்வளவு கடினமான கிரியை அல்லது பலவீனமான மாம்சமாக இருந்தாலும், தேவன் மாம்சத்தில் வாழும்போது, தேவனுடைய கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்ய மாட்டார், மேலும் அதையும்விட கீழ்ப்படியாமையினால் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைக் கைவிடவும் மாட்டார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு எதிராகப் போவதை விட அவர் மாம்சத்தின் வேதனையையே அனுபவிப்பதை விரும்பினார்; "பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது." என்று இயேசு ஜெபத்தில் சொன்னது போலவே இருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொந்த விருப்பங்களையே தேர்வு செய்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு செய்யவில்லை. அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருந்தாலும், அவர் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே நாடுகிறார், பிதாவாகிய தேவனால் தமக்கு ஒப்புவிக்கப்பட்டதை தமது மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து நிறைவேற்றுகிறார். இது மனிதனால் அடைய முடியாத ஒன்றாகும். சாத்தானிடமிருந்து வருகிற எதுவும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியாது; அது தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் அவரை எதிர்க்கும் ஒன்றை மட்டுமே கொண்டிருக்க முடியும். இது தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது, இன்னும் சொல்வதானால் தேவனுடைய சித்தத்திற்கு மனமுவந்து கீழ்ப்படியாது. கிறிஸ்துவைத் தவிர்த்து மற்ற எல்லா மனிதர்களும் தேவனை எதிர்க்கும் செயலைச் செய்யலாம், தேவனால் ஒப்புவிக்கப்பட்ட கிரியையை ஒரு மனிதனாலும் நேரடியாக மேற்கொள்ள முடியாது; தேவனுடைய நிர்வாகத்தைத் தங்களுடைய சொந்த பொறுப்பாகக் கருதி ஒருவராலும் செயல்படுத்த முடியாது. கிறிஸ்துவின் சாராம்சமானது பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிதல் ஆகும்; தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமையானது சாத்தானின் குணமாகும். இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகும், சாத்தானின் குணங்களைக் கொண்டிருக்கிற எவரையும் கிறிஸ்து என்று அழைக்க முடியாது. தேவனுக்குப் பதிலாக தேவனுடைய கிரியையை மனிதனால் செய்ய முடியாது என்பதற்கான மூலக்காரணம், தேவனுக்குரிய எந்தவொரு சாராம்சமும் மனிதனிடம் இல்லை என்பதே ஆகும். மனிதன் தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் எதிர்கால வாய்ப்புகளுக்காகவுமே தேவனுக்கு வேலை செய்கிறான், ஆனால் கிறிஸ்துவோ பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகவே கிரியையை நடப்பிக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க