தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 100

மார்ச் 1, 2023

பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கை மாம்சத்தின் ஒரு இயல்பான வாழ்க்கையாகும். அவர் தமது மாம்சத்தின் இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய வார்த்தையைப் பேசுவதற்கும், அல்லது பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும், இதுபோன்ற அசாதாரணமான காரியங்களைச் செய்வதற்குமான அவருடைய அதிகாரத்தை அவர் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கும் நாள்வரையிலும் பெரும்பாலான நிலையில் வெளிப்படுத்தவில்லை. இருபத்தொன்பது வயதிற்கு முன்னர், அதாவது அவர் ஊழியம் செய்வதற்கு முன்பு, அவர் ஒரு சாதாரண மாம்ச சரீரத்தில் இருந்தார் என்பதற்கு அவரது வாழ்க்கை போதுமான சான்றாகும். இதன் காரணமாகவும், அவர் இன்னும் அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்காததினாலும், ஜனங்கள் அவரிடத்தில் தெய்வீகத்தன்மையிலான எதையும் காணவில்லை, ஒரு சாதாரண மனிதர் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் காணவில்லை—அதனால்தான் ஒரு சாதாரண மனிதர் என்னும் நிலையில் அந்த நேரத்தில் சிலர் அவரை யோசேப்பின் குமாரன் என்று நம்பினார்கள். அவர் ஒரு சாதாரண மனிதனின் குமாரன் என்றுதான் மக்கள் நினைத்தார்கள், அவர் மாம்சமாகிய தேவன் என்று சொல்வதற்கு அவர்களுக்கு வழி இல்லாதிருந்தது; அவருடைய ஊழியத்தைச் செய்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தபோதும் கூட, அவரை யோசேப்பின் குமாரன் என்றே பெரும்பாலான ஜனங்கள் கூறினார்கள், ஏனென்றால் அவர் வெளிப்புறத் தோற்றத்தில் சாதாரண மனிதத்தன்மையில் மாம்சத்தில் இருந்த கிறிஸ்துவாக இருந்தார். முதலில் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவும், தேவன் முற்றிலுமாய் மாம்சத்தில் வந்துவிட்டார் என்பதையும், அவர் முற்றிலும் சாதாரண மனிதராகிவிட்டார் என்பதையும் நிரூபிப்பதற்காகவே அவரது சாதாரண மனிதத்தன்மை மற்றும் அவரது கிரியை ஆகிய இரண்டும் இருந்தன. அவரது இயல்பான மனிதத்தன்மையானது அவர் தமது கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் ஒரு சாதாரண மாம்சம் என்பதற்கான சான்றாகும்; ஏனென்றால் அவர் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்து, பிணியாளிகளைக் குணப்படுத்தி, சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சத்தில் பிசாசுகளைத் துரத்தி அவர் ஒரு சாதாரண மாம்சம் என்பதை நிரூபித்தார். அவர் அற்புதங்களைச் செய்ய முடிந்ததற்கான காரணம், அவருடைய மாம்சம் தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டிருந்தது, மாம்சமானது தேவனுடைய ஆவியானவரை தரித்திருந்தது. தேவனுடைய ஆவியினாலே அவர் இந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தார், அதற்காக அவர் ஒரு மாம்சமல்ல என்று அர்த்தமல்ல. பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் அவருடைய ஊழியத்தில் அவர் செய்ய வேண்டிய கிரியையாக இருந்தது, அது அவருடைய மனிதத்தன்மையில் மறைந்திருக்கும் அவருடைய தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடாக இருந்தது, மேலும் அவர் எந்த அடையாளங்களைக் காண்பித்தாலும் அல்லது அவர் எவ்வாறு தமது அதிகாரத்தை விளங்கப்பண்ணினாலும், அவர் இன்னும் இயல்பான மனிதத்தன்மையிலேயே வாழ்ந்தார் மற்றும் இன்னும் ஒரு சாதாரண மாம்சமுடையவராகவே இருந்தார். அவர் சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்த நேரம் வரையிலும், அவர் சாதாரண மாம்சத்திற்குள் வசித்தார். கிருபை அளித்தல், பிணியாளிகளைக் குணப்படுத்துவது, மற்றும் பிசாசுகளைத் துரத்துவது யாவும் அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இருந்தன, அவை அனைத்தும் அவருடைய சாதாரண மாம்சத்தில் அவர் செய்த கிரியைகளாகும். சிலுவைக்குச் செல்வதற்கு முன்பு, செய்வது எதுவாக இருந்தாலும் அவர் ஒருபோதும் தமது இயல்பான மனித மாம்சத்திலிருந்து விலகவில்லை. அவர் தேவனாக இருந்து தேவனுடைய சொந்த கிரியையைச் செய்தார், ஆனாலும் அவர் மாம்சமாகிய தேவனாக இருந்ததால், அவர் போஜனம் பண்ணினார், வஸ்திரம் தரித்தார், சாதாரண மனித தேவைகளைக் கொண்டிருந்தார், சாதாரண மனிதனின் அறிவும் மற்றும் ஒரு சாதாரண மனித மனமும் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதற்கான சான்றாகும், இது மனுஷரூபமான தேவனுடைய மாம்சமானது இயல்பான மனிதத்தன்மையுடன் கூடிய மாம்சம் என்பதை நிரூபித்தது, மேலும் இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியது. தேவனுடைய முதல் மனுஷரூபமெடுத்தலின் கிரியையை முடிப்பதும், முதல் மனுஷரூபமெடுத்தல் செய்ய வேண்டிய ஊழியத்தை நிறைவேற்றுவதும் அவரது வேலையாயிருந்தது. மனுஷரூபமெடுத்தலின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு சாதாரண, இயல்பான மனிதர் தேவன் மட்டுமே செய்யக்கூடிய கிரியையைச் செய்கிறார்; அதாவது, தேவன் தம்முடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை மனிதத்தன்மையில் செய்கிறார், அதன் மூலம் சாத்தானையும் வெற்றி கொள்கிறார். மாம்சமாகுதல் என்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு மாம்சமாகிறார், அதாவது தேவன் மாம்சமாகிறார் என்று அர்த்தமாகும்; மாம்சம் செய்கிற கிரியையானது ஆவியானவரின் கிரியையாகும், இது மாம்சத்தில் உணரப்பட்டு, மாம்சத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனுடைய மாம்சத்தைத் தவிர வேறு எவரும் மாம்சமாகிய தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாது; அதாவது, இந்த இயல்பான மனிதத்தன்மையைக் கொண்ட மாம்சமாகிய தேவன் மட்டுமே வேறு எவராலும் வெளிப்படுத்த இயலாத—தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார். தேவன் தமது முதல் வருகையின் போது, இருபத்தொன்பது வயதிற்கு முன்பு இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றால்—அவர் பிறந்தவுடனே அற்புதங்களைச் செய்யக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பேசக் கற்றுக்கொண்டவுடனே பரலோகப் பாஷையையும் பேசக்கூடியவராக இருந்திருந்தார் என்றால், அவர் பூமியில் முதன்முதலில் காலடி வைத்த தருணத்திலே அவர் எல்லா உலக விஷயங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால், ஒவ்வொரு நபரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்திருந்தார் என்றால்—அத்தகைய நபரை ஒரு சாதாரண மனிதர் என்று அழைத்திருக்க முடியாது, அத்தகைய மாம்சத்தை மனித மாம்சம் என்று அழைத்திருக்கவும் முடியாது. கிறிஸ்துவின் நிலை இதுவாக இருந்திருந்தால், தேவன் மாம்சமாகியதன் அர்த்தமும் சாராம்சமும் இழக்கப்பட்டுப் போயிருக்கும். அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பது அவர் மாம்சத்தில் அவதரித்த தேவன் என்பதை நிரூபிக்கிறது; அவர் ஒரு சாதாரண மனித வளர்ச்சி செயல்முறைக்கு உட்படுகிறார் என்னும் காரியம் அவர் ஒரு சாதாரண மாம்சமுள்ளவர் என்பதை மேலும் நிரூபிக்கிறது; மேலும், அவர் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய ஆவியானவர், மாம்சமாக மாறினார் என்பதற்கு அவருடைய கிரியை போதுமான சான்றாக இருக்கிறது. தேவன் தமது கிரியையினுடைய தேவைகள் நிமித்தம் மாம்சமாகிறார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் கட்ட கிரியையானது மாம்சத்தில் செய்யப்பட வேண்டும், அது சாதாரண மனிதத்தன்மையில் செய்யப்பட வேண்டும். இது "வார்த்தை மாம்சமாகிறது" என்பதற்கும், "வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது" என்பதற்கும் முன்நிபந்தனையாகும், இதுதான் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள மெய்யான உள்ளடக்கமாகும். இயேசு தமது வாழ்நாள் முழுவதும் அற்புதங்களைச் செய்தார் என்றும், பூமியில் அவர் செய்த கிரியை முடியும் வரையிலும் அவர் மனிதத்தன்மையின் எந்த அடையாளத்தையும் காண்பிக்கவில்லை என்றும், அவருக்குச் சாதாரண மனிதத் தேவைகள் அல்லது பலவீனங்கள் அல்லது மனித உணர்ச்சிகளே இல்லை என்றும், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அவருக்கு தேவையாயிருக்கவில்லை என்றும் ஜனங்கள் நம்பலாம். அவர்கள் அவரை ஒரு அசாதாரணமான இயற்கைக்கு அப்பாற்பட்ட மனதைக் கொண்டிருக்கிறவராகவும் மனிதரிலிருந்து மிகவும் அகன்ற ஒரு மனிதத்தன்மையைக் கொண்டிருப்பவராகவும் கற்பனை செய்கிறார்கள். அவர் தேவன் என்பதால், அவர் சாதாரண மனிதர்களைப் போலவே சிந்திக்கவோ வாழவோ கூடாது என்றும், ஒரு சாதாரண மனிதர், ஒரு நேர்மையான மனிதர் மட்டுமே சாதாரண மனித எண்ணங்களைச் சிந்தித்து ஒரு சாதாரண மனித வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவை அனைத்தும் மனித கருத்துக்கள் மற்றும் மனித எண்ணங்களாகும், மேலும் இந்த கருத்துக்கள் யாவும் தேவனுடைய கிரியையின் மெய்யான நோக்கங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. சாதாரண மனித சிந்தனையானது சாதாரண மனித காரணத்தையும் சாதாரண மனிதத்தன்மையையும் நிலைநிறுத்துகிறது; சாதாரண மனிதத்தன்மை மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகளை நிலைநிறுத்துகிறது; மற்றும் மாம்சத்தின் இயல்பான செயல்பாடுகள் மாம்சத்தின் இயல்பான வாழ்க்கையை முழுவதுமாக செயல்படுத்துகின்றன. அத்தகைய மாம்சத்தில் கிரியை செய்வதன் மூலம் மட்டுமே தேவன் தாம் மாம்சமாகியதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். மாம்சமாகிய தேவன் மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டிருந்தார், ஆனால் சாதாரண மனித எண்ணங்களை நினைக்கவில்லை என்றால், இந்த மாம்சமானது மனிதனின் அறிவைக்கொண்டிருக்காது, அதைவிட மெய்யான மனிதத்தன்மையையும் கொண்டிருக்காது. இது போன்ற ஒரு மாம்சம், மனிதத்தன்மை இல்லாமல், மனுஷரூபமெடுத்த தேவன் செய்ய வேண்டிய ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ஒரு சாதாரண மனம் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிலைநிறுத்துகிறது; ஒரு இயல்பான மனம் இல்லாமல், ஒருவர் மனிதராக இருக்க மாட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண எண்ணங்களை நினைக்காத ஒரு நபர் மனநோயாளியாவார், மனிதத்தன்மையே இல்லாமல் தெய்வீகத்தன்மை மட்டுமே கொண்ட ஒரு கிறிஸ்துவை மாம்சமாகிய தேவன் என்று சொல்ல முடியாது. அப்படியானால், மாம்சமாகிய தேவன் எப்படி சாதாரண மனிதத்தன்மை இல்லாமல் இருப்பார்? கிறிஸ்துவிற்கு மனிதத்தன்மை இல்லை என்று சொல்வது தேவதூஷணம் அல்லவா? சாதாரண மனிதர்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் ஒரு சாதாரண மனித மனதின் செயல்பாட்டை நம்பியே உள்ளன. அது இல்லாமல், மனிதர்கள் பிறழக்கூடியவர்களாக நடந்துகொள்வார்கள்; கருப்பு மற்றும் வெள்ளை, நன்மை மற்றும் தீமை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கூட அவர்களால் சொல்ல முடியாது; மேலும் அவர்களுக்கு மனித நெறிமுறைகள் மற்றும் தார்மீகக் கொள்கைகள் எதுவும் இருக்காது. இதேபோல், மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனிதனைப் போல சிந்திக்கவில்லை என்றால், அவர் ஒரு உண்மையான மாம்சமாக அதாவது ஒரு சாதாரண மாம்சமாக இருந்திருக்க மாட்டார். இத்தகைய சிந்திக்கும் திறனற்ற மாம்சத்தால் தெய்வீகத்தன்மையின் கிரியையை எடுத்துக்கொண்டிருக்க முடிந்திருக்காது. சாதாரண மாம்சத்தின் செயல்களில் அவரால் பொதுவாக ஈடுபட முடிந்திருக்காது, பூமியில் மனிதர்களுடன் சேர்ந்து வாழ முடிந்திருக்காது. எனவே, தேவனுடைய மனுஷரூபமெடுத்தலின் முக்கியத்துவம், தேவன் மாம்சத்திற்குள் வருவதன் சாராம்சம் இழக்கப்பட்டிருந்திருக்கும். மாம்சத்தில் இயல்பான தெய்வீகத்தன்மையின் கிரியையை பராமரிக்கவே மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மை உள்ளது; அவரது இயல்பான மனித சிந்தனையானது அவரது இயல்பான மனிதத்தன்மையையும் அவரது இயல்பான அனைத்துச் சரீரச் செயல்பாடுகளையும் நிலைநிறுத்துகிறது. மாம்சத்தில் தேவனுடைய எல்லாக் கிரியைகளையும் நிலைநிறுத்துவதற்காகவே அவருடைய இயல்பான மனிதத்தன்மையானது இருக்கிறது என்று ஒருவர் கூறலாம். இந்த மாம்சம் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனால் மாம்சத்தில் கிரியை செய்ய முடிந்திருக்காது, மேலும் மாம்சத்தில் அவர் செய்ய வேண்டியதை ஒருபோதும் நிறைவேற்ற முடிந்திருக்காது. மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருந்தாலும், அவருடைய செயல் மனித சிந்தனையால் கலப்படம் செய்யப்படவில்லை; அவர் தமது கிரியையை சாதாரண மனித சிந்தனையின் சிந்தனையினால் அல்லாமல், மனிதத்தன்மை மனதுடன் கொண்டிருப்பதற்கான முன்னிபந்தனையின் கீழ், மனிதத்தன்மையின் ஒரு சாதாரண மனதுடன் மேற்கொள்கிறார். அவருடைய மாம்சத்தின் எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவருடைய கிரியை தருக்கத்தினாலோ அல்லது சிந்தனையினாலோ களங்கப்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய செயல் அவருடைய மாம்சத்தின் மனதினால் சிந்திக்கப்படவில்லை, ஆனால் அவருடைய மனிதத்தன்மையில் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையின் நேரடி வெளிப்பாடாகும். அவருடைய செயல்கள் அனைத்தும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியமாகும், அவற்றில் எதுவுமே அவருடைய மூளையில் தோன்றவில்லை. உதாரணமாக, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, மற்றும் சிலுவையில் அறையப்படுவது அவருடைய மனித மனதில் தோன்றியவைகள் அல்ல, மனித மனதுள்ள எந்தவொரு மனிதனும் அவற்றை நிறைவேற்றியிருக்க முடியாது. அதேபோல், இன்றைய வெற்றியின் கிரியையானது மாம்சமாகிய தேவனால் செய்யப்பட வேண்டிய ஒரு ஊழியமாகும், ஆனால் அது ஒரு மனித சித்தத்தின்படியான கிரியை அல்ல, அது அவருடைய தெய்வீகத்தன்மை செய்ய வேண்டிய கிரியையாகும், அது எந்த மாம்ச மனிதனும் செய்ய முடியாத கிரியையாக இருக்கிறது. ஆகவே மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்க வேண்டும், சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர் மனிதத்தன்மையில் தனது கிரியையை சாதாரண மனதுடன் செய்ய வேண்டும். இது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் சாராம்சமாகும், அதாவது மாம்சமாகிய தேவனின் சாராம்சமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க