தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 99

பிப்ரவரி 23, 2023

"மனுஷரூபமெடுத்தல்" என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன் நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார். மனுஷரூபமெடுத்து வந்த அவருடைய வாழ்க்கை மற்றும் கிரியையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வாழும் வாழ்க்கை. அவர் சாதாரண மனிதத் தேவைகள் நிறைந்த (உணவு, உடை, உறக்கம், உறைவிடம்), சாதாரண மனித பலவீனங்கள் மற்றும் சாதாரண மனித உணர்ச்சிகளுடன் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில், முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார், மனித வாழ்க்கையின் சாதாரண ஒழுக்கங்களையும் விதிகளையும் கடைபிடிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முதல் கட்டத்தில் அவர் தெய்வீகத்தன்மையற்ற, எல்லாச் சாதாரண மனித நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறவராய் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார். இரண்டாவது கட்டம், அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின் அவர் வாழும் வாழ்க்கையாகும். அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையில், தெய்வீகத்தின் வெளிப்புற அடையாளத்தைக் காண்பிக்காமல் ஒரு சாதாரண மனிதத் தோற்றத்தில் வாழ்கிறார். ஆயினும் அவர் தம்முடைய ஊழியத்திற்காகவே முற்றிலும் வாழ்கிறார், இந்தச் சமயத்தில் முற்றிலும் அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது இருக்கிறது, ஏனென்றால் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றும் அளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது. ஆகவே, அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது கட்டமானது, அவரது இயல்பான மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டின் வாழ்க்கையாக இருக்கும்போது, அது அவருடைய ஊழியத்தை அவரது இயல்பான மனிதத்தன்மையில் செய்ய வேண்டியதிருந்தது. அவரது வாழ்வின் முதல் கட்டத்தில், அவர் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்வதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய மனிதத்தன்மையினால் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையை முழுமையாக இன்னும் பராமரிக்க முடியவில்லை, அது இன்னும் முதிர்ச்சியடையவில்லை; அவருடைய மனிதத்தன்மை முதிர்ச்சியடைந்த பின்னரே, அவர் தமது ஊழியத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்று அவர் செய்து முடிக்கவேண்டிய ஊழியத்தைச் செய்ய ஆரம்பிக்கவும் முடியும். அவர் மாம்சமாக இருக்கிற நிலையில், வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்பதால், அவருடைய வாழ்க்கையின் முதல் கட்டமானது சாதாரண மனிதத்தன்மையுடையதாகும்—இரண்டாவது கட்டத்தில், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றவும் வல்லது என்பதால், தேவன் மாம்சத்தில் அவதரித்த வாழ்க்கையானது அவருடைய ஊழியத்தின் போது மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கொண்ட ஒன்றாகும். மனித அவதரிப்பாக மாம்சத்தில் வந்த தேவன் தாம் பிறந்த தருணத்திலிருந்து, தமது ஊழியத்தை ஊக்கத்துடனே ஆரம்பித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்திருந்தால், பிறகு அவருக்கு எந்தவிதமான சரீரம் சார்ந்த சாராம்சமும் இருந்திருக்காது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மனித உடலின் சாராம்சத்தின் பொருட்டு உள்ளதாய் இருக்கிறது; மனிதத்தன்மை இல்லாமல் மாம்சம் இருக்க முடியாது, மனிதத்தன்மை இல்லாத ஒருவர் மனிதர் அல்ல. இந்த வகையில், தேவனுடைய மாம்சத்தின் மனிதத்தன்மை என்பது மனுஷரூபத்திலான தேவனுடைய மாம்சத்தின் ஓர் உள்ளார்ந்த குணமாகும். "தேவன் மாம்சமாகிறபோது அவர் முற்றிலும் தெய்வீகத்தன்மையுள்ளவர், மனிதரல்ல" என்று சொல்வது தேவதூஷணமாகும், ஏனென்றால் இந்த அறிக்கையானது வெறுமனே இல்லாததாயிருக்கிறது, மேலும் மாம்சமாகியதன் கொள்கையை மீறுகிறதாய் இருக்கிறது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய பிறகும், அவர் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனிதத்தன்மையின் வெளிப்புறமான தோற்றத்தில் தெய்வீகத்தன்மையுடன் வாழ்கிறார்; அந்த நேரத்தில், அவருடைய தெய்வீகத்தன்மையைச் சாதாரண மாம்சத்தில் செய்கிறதான கிரியைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்கு அவருடைய மனிதத்தன்மையானது உதவுகிறது. ஆகவே, கிரியையின் காரணகர்த்தா அவருடைய மனிதத்தன்மையில் வசிக்கும் தெய்வீகத்தன்மையாகும். அவருடைய மனிதத்தன்மை அல்ல, அவருடைய தெய்வீகத்தன்மையே செயல்பாட்டில் இருக்கிறது, ஆனாலும் இந்தத் தெய்வீகத்தன்மையானது அவருடைய மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது; முக்கியமாக அவருடைய கிரியையானது அவருடைய மனிதத்தன்மையினால் அல்ல, அவருடைய முழுமையான தெய்வீகத்தன்மையினாலேயே செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் கிரியையைச் செய்வது அவருடைய மாம்சமாகும். அவர் ஒரு மனிதனாகவும் மற்றும் தேவனாகவும் இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம், ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வாழும் ஒரு தேவனாக மாறுகிறார், மனித வெளிப்புறத் தோற்றத்தில் மற்றும் மனித சாராம்சம் கொண்டவராக ஆனால் அதேவேளையில் தேவனின் சாராம்சம் உடையவராகவும் இருக்கிறார். அவர் தேவனுடைய சாராம்சம் கொண்ட ஒரு மனிதர் என்பதால், அவர் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் மேலானவராகவும், தேவனுடைய கிரியையைச் செய்யக்கூடிய எந்த மனிதனுக்கும் மேலானவராகவும் இருக்கிறார். எனவே, அவரைப் போன்ற புறம்பான ஒரு மனிதத் தோற்றமுள்ள அனைவரிலும், மனிதத்தன்மையைக் கொண்ட அனைவரிலும், அவர் ஒருவர் மட்டுமே மாம்சமாகிய தேவனாக இருக்கிறார்—மற்றவர்கள் அனைவரும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மனிதத்தன்மை இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு மனிதத்தன்மையைத் தவிர வேறொன்றும் இல்லை, அதே நேரத்தில் மாம்சமாகிய தேவன் வேறுபட்டவராக இருக்கிறார்: அவருடைய மாம்சத்தில் அவருக்கு மனிதத்தன்மை மட்டுமல்ல, மிக முக்கியமாக தெய்வீகத்தன்மையும் உள்ளது. அவருடைய மனிதத்தன்மையை அவருடைய மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்திலும் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் காணலாம், ஆனால் அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்துகொள்வது கடினமானதாகும். ஏனென்றால், அவருடைய தெய்வீகத்தன்மையானது அவருக்கு மனிதத்தன்மை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் ஜனங்கள் கற்பனை செய்வது போல இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இதனை ஜனங்கள் காண்பது என்பது மிகவும் கடினமாகும். இன்றும் கூட, மாம்சமாகிய தேவனுடைய உண்மையான சாராம்சத்தை ஆராய்ந்து புரிந்துகொள்வதில் ஜனங்களுக்கு மிகுந்த சிரமம் உள்ளது. நான் அதைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய பிறகும், உங்களில் பெரும்பாலானோருக்கு இது இன்னமும் ஒரு இரகசியமாகவே இருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். உண்மையில், இந்தப் பிரச்சினையானது மிகவும் எளிதானதாகும்: தேவன் மாம்சமாக மாறுவதால், அவருடைய சாராம்சமானது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது. இந்தக் கலவையானது தேவன் என்று, அதாவது பூமியிலுள்ள தேவன் என்று அழைக்கப்படுகிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க