கிறிஸ்தவ பாடல் | துன்பம் தேவன் இல்லாத நாட்களை நிரப்புகிறது (Tamil Subtitles)

ஜூன் 24, 2021

ஒருவர் தலைவிதியைப் புரிந்துகொள்ளாதபோது,

தேவனுடைய இறையாண்மையைப் புரிந்துகொள்ளாதபோது,

ஒருவர் வேண்டுமென்றே கண்மூடித்தனமாக முன்னோக்கிச் செல்லும்போது,

மூடுபனி வழியாகச் சென்று திகைப்படையும்போதும் தடுமாறும்போதும்,

பயணம் மிகவும் கடினமாகவும், மிகுந்த மன வருத்தமாகவும் இருக்கும்.

ஆகவே, மனிதவிதியின் மீதான

தேவனுடைய இறையாண்மையை ஜனங்கள் உணரும்போது,

தங்களது இரு கைகளாலும் ஒரு நல்ல ஜீவிதத்தை கட்டியெழுப்ப

முயற்சித்த வேதனையான நாட்களிலிருந்து விடைபெறுவதற்கும்,

விதியை எதிர்த்துப் போராடுவதையும்,

"ஜீவித இலக்குகள்" என்று பெயரளவில் அழைக்கப்படுபவற்றை

தங்களது சொந்தவழியில் பின்பற்றுவதை நிறுத்தவும்,

புத்திசாலிகள் அதை அறிந்து ஏற்றுக்கொள்வதை தெரிந்துகொள்வார்கள்.

ஒருவரிடம் தேவன் இல்லாதபோது, அவர் தேவனைக் காணமுடியாதபோது,

தேவனுடைய இறையாண்மையை அவர் தெளிவாக அடையாளம் காணமுடியாதபோது,

ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும்,

பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும்,

பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும்.

ஒருவர் எங்கிருந்தாலும், அவருடைய வேலை எதுவாக இருந்தாலும்,

அவருடைய ஜீவித வழிமுறையும், அவர் இலக்குகளைப் பின்பற்றுவதும்,

முடிவில்லாத மனவருத்தம் மற்றும் விடுதலையற்ற துன்பத்தைத் தவிர

வேறொன்றையும் கொண்டு வருவதில்லை,

அதாவது ஒருவர் அவரது கடந்த காலத்தை திரும்பிப்பார்க்க முடியாதபடி அது இருக்கும்.

ஒருவர் சிருஷ்டிகருடைய இறையாண்மையை ஏற்றுக்கொள்ளுகிறபோது,

அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து,

உண்மையான மனித ஜீவிதத்தைத் தேடினால் மட்டுமே,

ஒருவர் படிப்படியாக எல்லா மனவருத்தம் மற்றும் துன்பத்திலிருந்து விடுபடத் தொடங்குவார்

மற்றும் ஜீவிதத்தின் எல்லா வெறுமையிலிருந்தும் விடுபடுவார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க