Christian Song | சர்வ வல்லமையுள்ள தேவனுடைய துதியைப் பாடுங்கள் (Tamil Subtitles)
ஆகஸ்ட் 7, 2021
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
மாம்சத்தில் வெளிப்பட்ட ஒன்றான மெய்த்தேவனும் நீரே,
மகிமையுடன் வந்த இரட்சகரும் நீரே.
நீரே ஒன்றான மெய்த் தேவன், நீர் எப்போதும் பேசுகிறீர்,
எப்போதும் நீர் உம் கிரியையை செய்கிறீர்.
இன்றைய மனுக்குலத்தை வழிநடத்துகிறீர்
அதை மீட்க சுத்திகரிக்க, இரட்சிக்க
நீர் இருமுறை மனுவுருவெடுத்தீர்!
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
உம் வார்த்தைகளால் நீர்பாய்ச்சி, சத்தியத்தை வெளிப்படுத்துகிறீர்,
இதனால் உம் பிரசன்னத்தில் நாங்கள் வாழ்வோம்.
நீர் எம்மை இரட்சிக்கும்படியாக,
ஜீவனுள்ள சத்தியத்தை உலகத்தினுள் ஊற்றியிருக்கிறீர்.
உம் வார்த்தைகளைப் பழகின பின்,
எம் வாழ்வில் நாங்கள் வளர்கிறோம், சத்தியத்தைப் புரிந்து கொள்கிறோம்.
எம் சீர்கேட்டை உம் வார்த்தைகள் நியாயந்தீர்த்து, சுத்திகரிக்கிறது,
நாங்கள் புது மனிதராகிறோம்!
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
உம் செயல்களையும், அன்பையும் உம் வார்த்தைகளில் நாங்கள் காண்கிறோம்.
உம் வார்த்தைகள் எங்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறது,
நீர் மனித அன்புக்குப் பாத்திரர்.
சர்வவல்ல தேவனே, நாங்கள் உம்மை நேசித்து, உம் துதிகளை எப்போதும் பாடுகிறோம்!
உம் நீதியான மனநிலை எங்கள் பாடலையும், துதியின் ஆடலையும் பெறுகிறது!
நாங்கள் எங்கள் அன்பையும், புகழ்ச்சியையும் உம்மிடம் காண்பிக்கட்டும்!
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
நீரே சத்தியமும், வழியும், ஜீவனுமானவர்,
நீர் எமக்கு அருமையானவர், போற்றுதலுக்குரியவர், பிரியமானவர்.
நீர் சாத்தானை வென்றவர்
முழுமையாய் எம்மை இரட்சித்தவர், எல்லா மகிமையையும் பெற்றுக் கொண்டவர்.
உம் ஞானத்தைத் துதித்து, நாங்கள் எப்போதும் உம்மை உயர்த்துவோம்,
உம்மை உயர்த்துவோம்!
உம் சர்வ வல்லமையைத் துதித்து, நாங்கள் உமக்கு சாட்சி அளிப்போம்!
உம்மைத் துதிக்க நாங்கள் ஆடிப் பாடுவோம்!
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
சர்வ வல்லமையுள்ள தேவனே, அன்புக்குரிய தேவனே,
நாங்கள் துதி பாடுகிறோம், உம்முடைய துதியை என்றைக்கும் பாடுகிறோம்.
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்