கிறிஸ்தவ பாடல் | மனிதகுலத்தின் தலைவிதிமீது கவனம் செலுத்துங்கள்

செப்டம்பர் 18, 2020

எல்லா இன மக்களையும், எல்லா நாடுகளையும், தொழிலகங்களையும் தேவன் வலியுறுத்திக் கேட்கிறார்:

தேவனுடைய குரலைக் கேளுங்கள், தேவனுடைய கிரியையைப் பாருங்கள்,

மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்துங்கள்,

தேவனை மிகவும் பரிசுத்தமானவராகவும், மிகவும் கனத்திற்குரியவராகவும்,

மிகவும் உயர்ந்தவராகவும், மனுக்குலம் தொழுதுகொள்ளும் ஒரே இலக்காக மாற்றவும்,

ஆபிரகாமின் சந்ததியினர் யோகோவாவின் வாக்குத்தத்தத்தின் கீழ் வாழ்ந்ததைப் போலவும்,

தேவன் முதலாவது சிருஷ்டித்த ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தது போலவும்

தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் மனுக்குலம் முழுவதும் வாழ்வதற்கு உதவ வேண்டும்.

தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது.

அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது.

அவருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்பவர்களும்,

அவரைத் தேடுபவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி

அவருடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ள இயலும், அப்படி இல்லாதவர்கள்

பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்.

எல்லா இன மக்களையும், எல்லா நாடுகளையும், தொழிலகங்களையும் தேவன் வலியுறுத்திக் கேட்கிறார்:

தேவனுடைய குரலைக் கேளுங்கள், தேவனுடைய கிரியையைப் பாருங்கள்;

மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்துங்கள்;

மனிதகுலத்தின் தலைவிதிமீது கவனம் செலுத்துங்கள்.

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க