கிறிஸ்தவ பாடல் | தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது (Tamil Subtitles)

செப்டம்பர் 20, 2020

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல,

யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல.

ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும்,

ஜீவன் என்ற சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார்,

தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது.

ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடம்,

மேலும் ஜீவன் என்னும் ஜீவத்தண்ணீர் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார்,

ஜீவன் என்னும் ஜீவத்தண்ணீர் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாக விளங்குகிறார்.

தேவன் உலகை சிருஷ்டித்தது முதலே,

ஜீவனின் ஜீவ ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார்,

மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார்,

மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைகிரயத்தைச் செலுத்தியுள்ளார்.

இது ஏனென்றால், தேவனே நித்திய ஜீவனாக இருக்கிறார்,

மேலும் தேவனே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாகவும் திகழ்கிறார்.

தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்தில்லை.

அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார்.

அவர் மனுஷனுடைய ஜீவனின் உந்துசக்தியாகவும், மனித ஜீவியத்தின் வேராகவும்,

பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார்.

அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார்,

மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்தையும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார்.

அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி.

மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான்,

இது முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது

மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது,

அதற்காக எந்த சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார்.

எந்த சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார்.

தேவனுடைய ஜீவ வல்லமையால் எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்;

மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சியிருக்க இயலும்.

அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது.

அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி சக்தியாலும் அடக்கி ஆட்கொள்ள முடியாது.

காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல்

தேவனுடைய ஜீவ வல்லமையானது ஜீவிக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தை பிரகாசிக்கிறது.

வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம்,

ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது.

சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும்,

ஏனென்றால் சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரம்

மேலும் அவை இருப்பதற்கான ஆணிவேர்,

அவை இருப்பதற்கான ஆணிவேர்.

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க