Christian Song | சகலத்தின் மீதும் ராஜ்யபாரம் கொண்டிருக்கும் ஒருவர் | Musical Documentary

செப்டம்பர் 22, 2020

பரந்த பிரபஞ்சம் முழுவதும், சகல வான மண்டலங்களும் தங்களுடைய சொந்த சுற்றுப்பாதையில் துல்லியமாக நகருகின்றன. வானத்தின் கீழே, மலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் என அனைத்தும் தங்களுடைய எல்லைகளைக் கொண்டுள்ளன, மேலும் சகல உயிரினங்களும் வாழ்க்கை விதிகளின்படி நான்கு பருவங்கள் முழுவதும் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன…. இவையெல்லாம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாவற்றையும் ஆளுகிற ஏற்பாடு செய்கிற வல்லமையுள்ள ஒருவர் இருக்கின்றாரா? அழுதுகொண்டே இவ்வுலகிற்கு வந்ததிலிருந்து நாம் வாழ்வில் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறோம். நாம் பிறப்பிலிருந்து முதுமைக்கும், முதுமையிலிருந்து நோய்க்கும், நோயிலிருந்து மரணத்திற்கும் நகர்கிறோம், நாம் சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் இடையில் செல்கிறோம்…. மனுக்குலம் உண்மையில் எங்கிருந்து வருகிறது, நாம் உண்மையில் எங்கே செல்வோம்? நமது தலைவிதிகளை ஆளுகிறவர் யார்? பண்டைய காலங்களிலிருந்து நவீன நாட்கள் வரை, பெரிய தேசங்கள் எழுந்துள்ளன, வம்சங்கள் வந்து போய்விட்டன, நாடுகளும் ஜனங்களும் வரலாற்றின் அலைகளில் செழித்து அழிந்துள்ளனர்…. இயற்கையின் விதிகளைப் போலவே, மனுக்குலத்தின் வளர்ச்சியின் விதிகளும் எல்லையற்ற இரகசியங்களைக் கொண்டுள்ளன. அவற்றுக்கான பதில்களை அறிய விரும்புகிறீர்களா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்த சகலத்தின் மீதும் ராஜ்யபாரம் கொண்டிருக்கும் ஒருவர் என்ற ஆவணப்படம் இதன் உட்கருத்துக்குச் செல்ல உங்களுக்கு வழிகாட்டும்!

இந்தக் காணொளியில் காணப்படும் சில காரியங்கள்:

https://www.holyspiritspeaks.org/special-topic/copyright.html

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க