தேவனுடைய அனுதின வார்த்தைகள்: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள் | பகுதி 268

செப்டம்பர் 12, 2021

நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக மாறவில்லை. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யபட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும். நீ ஏன் இன்று வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாய், வேதாகமத்திலிருந்து தனியாக வேறொரு கிரியை ஏன் இருக்கிறது, தேவன் ஏன் புதிய, மிகவும் விரிவான நடைமுறையை வேதாகமத்தில் தேடுவதில்லை, அதற்குப் பதிலாக வேதாகமத்திற்கு வெளியே அதிக வல்லமையான கிரியை இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இதுதான். பழைய மற்றும் புதிய கிரியைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை நீ அறிந்துகொள்ள வேண்டும். நீ வேதாகமத்தை வாசிக்காவிட்டாலும், உன்னால் அதைப் பகுத்தறிய முடிய வேண்டும். இல்லையென்றால், நீ இன்னும் வேதாகமத்தையே ஆராதித்துக் கொண்டிருப்பாய். மேலும், புதிய கிரியைக்குள் பிரவேசிப்பதும், புதிய மாற்றங்களுக்கு உட்படுவதும் உனக்கு கடினமாக இருக்கும். உயர்ந்த வழி இருக்கும்போது, அந்த தாழ்ந்த, காலாவதியான வழியை ஏன் படிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளும் புதிய கிரியையும் இருக்கும்போது, பழைய வரலாற்றுப் பதிவுகளுக்கு மத்தியில் ஏன் ஜீவிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளை உனக்கு வழங்க முடியும், இதுவே புதிய கிரியை என்பதை நிரூபிக்கிறது. பழைய பதிவுகளால் உனக்கு மனநிறைவூட்டவோ அல்லது உனது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது, அவை வரலாறே தவிர, இப்போதைய கிரியை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. மிகவும் உயர்ந்த வழியே புத்தம்புதிய கிரியையாகும். மேலும், புதிய கிரியையைக் கொண்ட கடந்த காலத்தின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது இன்னும் ஜனங்களுடைய பிரதிபலிப்புகளின் வரலாறுதான். மேலும், அதன் மதிப்பு குறிப்பாக இருந்தாலும், அது இன்னும் பழைய வழிதான். இது "புனித நூலில்" பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பழைய வழி என்பது வரலாறுதான். "புனித நூலில்" அது குறித்த எந்தப் பதிவும் இல்லையென்றாலும், புதிய வழியே இன்றைக்குரியதாக இருக்கிறது. இந்த வழியால் உன்னை இரட்சிக்க முடியும். மேலும், இந்த வழியால் உன்னை மாற்ற முடியும். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க