தேவனுடைய அனுதின வார்த்தைகள்: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள் | பகுதி 266

செப்டம்பர் 11, 2021

தேவன் நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைச் செய்த பிறகு, பழைய ஏற்பாடு உருவாக்கப்பட்டது, அப்போதுதான் ஜனங்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள். இயேசு வந்ததற்குப் பிறகு, அவர் கிருபையின் காலத்தின் கிரியையைச் செய்தார், அவருடைய அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினர். வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இவ்வாறே உருவாக்கப்பட்டன. இன்றும் கூட, தேவனை விசுவாசிக்கிற எல்லோரும் வேதாகமத்தை வாசித்து வருகின்றனர். வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நிச்சயமாகவே, இது தீர்க்கதரிசிகளின் முன்னறிவுப்புகள் சிலவற்றையும் கொண்டுள்ளது, அத்தகைய முன்னறிவுப்பானது எவ்விதத்திலும் வரலாறு ஆகாது. வேதாகமத்தில் பல பகுதிகள் உள்ளன, அதில் வெறும் தீர்க்கதரிசனம் மட்டுமோ, யேகோவாவின் கிரியை மட்டுமோ, பவுலின் நிருபங்கள் மட்டுமே இல்லை. வேதாகமத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம், யாத்திராகமம்…, மற்றும் தீர்க்கதரிசிகள் எழுதிய தீர்க்கதரிசன புத்தகங்களும் உள்ளன. இறுதியில், பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்துடன் முடிவடைகிறது. இது யேகோவாவால் வழிநடத்தப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியையை பதிவு செய்கிறது. இது ஆதியாகமம் முதல் மல்கியா புத்தகம் வரையுள்ள நியாயப்பிரமாண காலத்தின் அனைத்து கிரியைகளையும் பற்றிய விரிவான பதிவாகும். அதாவது, நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவால் வழிநடத்தப்பட்ட ஜனங்கள் அனுபவித்த அனைத்தையும் பழைய ஏற்பாடு பதிவுசெய்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தின்போது, யேகோவா எழுப்பிய ஏராளமான தீர்க்கதரிசிகள் அவருக்காக தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் பல்வேறு கோத்திரங்களுக்கும் தேசங்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர், மேலும் யேகோவா செய்யவேண்டிய கிரியையை முன்னறிவித்தனர். எழுப்பப்பட்ட இந்த ஜனங்கள் அனைவருக்கும் யேகோவாவால் தீர்க்கதரிசன ஆவி வழங்கப்பட்டது: அவர்களால் யேகோவாவிடமிருந்து தரிசனங்களைக் காணவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் முடிந்தது, இவ்வாறு அவர்கள் அவரால் ஏவப்பட்டு தீர்க்கதரிசனத்தை எழுதினர். அவர்கள் செய்த கிரியை யேகோவாவின் சத்தத்தின் வெளிப்பாடாகவும், யேகோவாவின் தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. மேலும், அந்த நேரத்தில் யேகோவாவின் கிரியையானது ஆவியானவரைப் பயன்படுத்தி வெறுமென ஜனங்களை வழிநடத்துவதாக இருந்தது. அவர் மாம்சமாக மாறியிருக்கவில்லை, ஜனங்கள் அவருடைய முகத்தில் எதையும் காணவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையைச் செய்ய பல தீர்க்கதரிசிகளை எழுப்பி, அவர்களிடம் வேதவாக்குகளைக் கொடுத்தார், அவர்கள் அதை இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் குலத்துக்கும் அறிவித்தனர். தீர்க்கதரிசனம் உரைப்பதே அவர்களுடைய கிரியையாக இருந்தது, அவர்களில் சிலர் மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக யேகோவாவின் அறிவுரைகளை எழுதினர். யேகோவாவின் அதிசயத்தையும் ஞானத்தையும் ஜனங்கள் காணும்படியாக, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கும், எதிர்கால கிரியையை அல்லது அந்த நேரத்தில் இன்னும் செய்யப்பட வேண்டிய கிரியையை முன்னறிவிப்பதற்காகவும் யேகோவா இந்த நபர்களை எழுப்பினார். இந்தத் தீர்க்கதரிசன புத்தகங்கள் வேதாகமத்தின் பிற புத்தகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. அவை யேகோவாவிடமிருந்து தரிசனங்கள் அல்லது சத்தத்தைப் பெற்றுக்கொண்டவர்களால் தீர்க்கதரிசன ஆவி வழங்கப்பட்டவர்களால் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாமே யேகோவா தனது கிரியையை செய்து முடித்த பிறகு ஜனங்களால்பதிவு செய்யப்பட்டவைகளாகும். ஆதியாகமம் மற்றும் யாத்திராகமம் ஆகிய புத்தகங்களை ஏசாயா மற்றும் தானியேல் புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது என்பது போலவே, யேகோவா எழுப்பிய தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தையும் இந்த புத்தகங்களால் தவிர்த்து ஒதுக்க முடியாது. கிரியை செய்யப்படுவதற்கு முன்பே தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுவிட்டடன. இதற்கிடையில், கிரியை செய்து முடிக்கப்பட்ட பிறகுதான் மற்ற புத்தகங்கள் எழுதப்பட்டன, இதற்குத்தான் ஜனங்கள் தகுதியானவர்களாக இருந்தனர். அக்கால தீர்க்கதரிசிகள் யேகோவாவினால் ஏவப்பட்டு, சில தீர்க்கதரிசனங்களை உரைத்தனர். அவர்கள் பல வார்த்தைகளைப் பேசினார்கள். மேலும், அவர்கள் கிருபையின் காலத்தின் காரியங்களையும், கடைசி நாட்களில் உலகின் அழிவையும், யேகோவா செய்ய திட்டமிட்ட கிரியையையும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். மீதமுள்ள புத்தகங்கள் அனைத்தும் இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. ஆதலால், நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, யேகோவா இஸ்ரவேலில் செய்ததைப் பற்றியே பிரதானமாக வாசிக்கிறீர்கள். இஸ்ரவேலை வழிநடத்தும் யேகோவாவின் கிரியை, எகிப்திலிருந்து இஸ்ரவேலரை வழிநடத்த மோசேயை அவர் பயன்படுத்தியது, மோசே ஜனங்களை பார்வோனின் பிடிகளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றது, அதன் பிறகு அவர்கள் கானானுக்குள் பிரவேசித்தது, இதைத் தொடர்ந்து கானானில் எல்லாமே அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது ஆகியவற்றையே வேதாகமத்தின் பழைய ஏற்பாடு பிரதானமாக பதிவு செய்கிறது. இது தவிர, எல்லாமே இஸ்ரவேல் முழுவதும் யேகோவாவின் கிரியையைக் குறித்த பதிவுகளால் ஆனதாகும். பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட எல்லாமே இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியையாக இருக்கிறது. அது ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்த தேசத்தில் யேகோவா செய்த கிரியையாகும். நோவாவிற்குப் பிறகு தேவன் அதிகாரப்பூர்வமாக பூமியிலுள்ள ஜனங்களை வழிநடத்தத் துவங்கியது முதல், பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை அனைத்தும் இஸ்ரவேலின் கிரியையாக இருக்கிறது. இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யப்பட்ட எந்த கிரியையும் ஏன் பதிவு செய்யப்படவில்லை? ஏனென்றால், இஸ்ரவேல் தேசமே மனுக்குலத்தின் பிறப்பிடமாக இருக்கிறது. ஆதியில், இஸ்ரவேலைத் தவிர வேறு எந்த தேசங்களும் காணப்படவில்லை. மேலும், யேகோவா வேறு எந்த இடத்திலும் கிரியை செய்யவில்லை. இதனால், வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் அந்த நேரத்தில் இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியையாகும். ஏசாயா, தானியேல், எரேமியா, எசேக்கியேல் ஆகிய தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட வார்த்தைகள் பூமியில் அவருடைய பிற கிரியைகளை முன்னறிவிக்கின்றன. அவை யேகோவா தேவனுடைய கிரியையையே முன்னறிவிக்கின்றன. இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவையாகும். அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தது. மேலும், இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைத் தவிர, மற்ற அனைத்துமே அந்த நேரத்தில் யேகோவாவின் கிரியையைப் பற்றிய ஜனங்களுடைய அனுபவங்களின் பதிவாகும்.

சிருஷ்டிப்பின் கிரியையானது மனுக்குலம் இருப்பதற்கு முன்பே நடந்தது, ஆனால் ஆதியாகமம் புத்தகமானது மனுக்குலம் இருந்த பிறகே வந்தது. இது நியாயப்பிரமாண காலத்தில் மோசே எழுதிய புத்தகமாகும். இது இன்று உங்கள் மத்தியில் நடக்கும் காரியங்களைப் போலவே இருக்கிறது: அவை நடந்த பிறகு, நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் ஜனங்களுக்குக் காண்பிப்பதற்காகவும், எதிர்கால ஜனங்களுக்காகவும் எழுதுகிறீர்கள். நீ பதிவுசெய்தவை கடந்த காலங்களில் நிகழ்ந்தவையாகும், அவை வரலாறே தவிர வேறொன்றுமில்லை. பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட காரியங்கள் இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியையாகும். புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை கிருபையின் காலத்தில் இயேசுவின் கிரியையாகும். தேவன் இரண்டு வெவ்வேறு காலங்களில் செய்த கிரியையை அவை ஆவணப்படுத்துகின்றன. நியாயப்பிரமாண காலத்தின்போது தேவன் செய்த கிரியையை பழைய ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது, ஆதலால் பழைய ஏற்பாடு ஒரு வரலாற்றுப் புத்தகமாகும், அதே நேரத்தில் புதிய ஏற்பாடு கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தயாரிப்பாகும். புதிய கிரியை துவங்கியபோது, புதிய ஏற்பாடும் காலாவதியானது. ஆகையால், புதிய ஏற்பாடும் ஒரு வரலாற்றுப் புத்தகமாகவே இருக்கிறது. நிச்சயமாகவே, புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப் போலவே முறையானதாகவும் இல்லை, அது பல காரியங்களை பதிவு செய்யவும் இல்லை. யேகோவாவால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இயேசுவின் சில வார்த்தைகள் மட்டுமே நான்கு சுவிசேஷங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாகவே, இயேசுவும் அநேக கிரியைகளைச் செய்தார், ஆனால் அது விரிவாக பதிவு செய்யப்படவில்லை. இயேசு எவ்வளவு கிரியை செய்தார் என்பது புதிய ஏற்பாட்டில் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளில் அவர் பூமியில் செய்த கிரியையும், அப்போஸ்தலர்களின் கிரியையும் யேகோவாவின் கிரியையை விட மிகவும் குறைவாகவே இருந்தன. இதனால், பழைய ஏற்பாட்டை விட புதிய ஏற்பாட்டில் குறைவான புத்தகங்களே உள்ளன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க