Christian Song | வாய்ப்பை இழந்தால் அதற்காக நீ என்றென்றும் வருத்தப்படுவாய் (Tamil Subtitles)

நவம்பர் 16, 2021

தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவது, ஜெபம் செய்வது,

தேவனுடைய பாரத்தை ஏற்றுக் கொள்வது,

அவர் உன்னிடம் ஒப்படைக்கும் பணிகளை ஏற்றுக்கொள்வது,

இவை அனைத்தும் உனக்கு முன் ஒரு பாதை இருக்கக் கூடும்

என்பதாலேயே செய்யப்படுகிறது.

தேவனுடைய ஒப்படைத்ததன் பாரம் உன்மீது எவ்வளவு அதிகமாக அமிழ்த்துகிறதோ,

அவ்வளவு சுலபமாக நீ அவரால் பரிபூரணப்படுத்தப்படுவாய்.

சிலர் அழைக்கப்பட்டாலும் கூட

தேவனுக்கு ஊழியம் செய்ய விருப்பமில்லாமல் இருக்கலாம்.

இவர்கள் சுகமாகக் களியாட மட்டுமே விரும்பும் சோம்பேறிகளாவர்.

தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால்,

மோசே கானான் தேசத்திற்குள்

நுழைய முடியாமல் வாழ்நாள் முழுவதும்

மிகுந்த வருத்தத்துடன் இருந்ததைப் போல, நீ எப்போதும் வருத்தப்படுவாய்.

ஊழியம் செய்ய எவ்வளவு அதிகமாகக் கேட்கப்படுகிறாயோ,

அவ்வளவு அதிகமான அனுபவத்தை நீ பெறுவாய்.

அதிகமான பாரங்களும் அனுபவங்களும் இருப்பதால்,

நீ பரிபூரணமாக்கப்பட அதிக வாய்ப்புகளைப் பெறுவாய்.

ஆகையால், நீ நேர்மையுடன் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முடிந்தால்,

தேவனுடைய பாரத்தை நீ கவனத்தில் கொள்வாய்;

பரிபூரணப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும்.

பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு அதிகமாக உன்னைத் தொடுகிறாரோ,

அவ்வளவு அதிகமாக நீ தேவனுடைய பாரத்தைக் குறித்து கவனமாய் இருப்பாய்,

அவ்வளவு அதிகமாக தேவனால் நீ பரிபூரணப்படுத்தப்படுவாய்,

மேலும் தேவனால் பயன்படுத்தப்படுகிற நபராகக் கடைசியில் நீ மாறும் வரையிலும்

அவ்வளவு அதிகமாக நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படுவாய்.

தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால்,

மோசே கானான் தேசத்திற்குள்

நுழைய முடியாமல் வாழ்நாள் முழுவதும்

மிகுந்த வருத்தத்துடன் இருந்ததைப் போல, நீ எப்போதும் வருத்தப்படுவாய்.

நீ இன்றைய தேவனுடைய பாரத்தைக் குறித்து கவனமுள்ளவனாக இருக்க வேண்டும்;

அவருடைய நீதி எல்லா மனிதர்களுக்கும் வெளிப்படுத்தப்படும் வரை

நீ காத்திருக்கக் கூடாது.

அதற்குள் அது மிகவும் தாமதமாகிவிடும், நீ வருத்தத்தால் நிரப்பப்படுவாய்.

தேவன் உன்னைத் தண்டிக்காவிட்டாலும்,

உன் சொந்த வருத்தத்தால் உன்னை நீயே தண்டித்துக் கொள்வாய்.

நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை வாஞ்சையுடன் தேடவில்லையெனில்,

அவருடைய கிரியை முடிந்தவுடன் அது மிகவும் தாமதமாகிவிடும்,

நீ அந்த வாய்ப்பை இழந்திருப்பாய்.

உன் அபிலாஷைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும்,

தேவன் கிரியை செய்யாமல் இருப்பார் எனில், நீ எவ்வளவு முயற்சி செய்தாலும்,

உன்னால் ஒருபோதும் பரிபூரணத்தை அடைய முடியாது.

தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால்,

மோசே கானான் தேசத்திற்குள்

நுழைய முடியாமல் வாழ்நாள் முழுவதும்

மிகுந்த வருத்தத்துடன் இருந்ததைப் போல, நீ எப்போதும் வருத்தப்படுவாய்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க