தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 218

நவம்பர் 23, 2022

கடைசி நாட்களில் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் நிர்வகித்து வரும் கிரியை முழுமையாக மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதுதான் நான் எனது நிர்வாகத்தின் முழு இரகசியத்தையும் மனிதனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன், மற்றும் மனிதன் எனது கிரியையின் நோக்கத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறான், மேலும், எனது இரகசியங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டிருக்கிறான். மனிதன் கவலைப்படும் சென்று சேருமிடம் குறித்து அனைத்தையும் நான் அவனுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 5,900 ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியங்களான எனது இரகசியங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே மனிதனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். யேகோவா யார்? மேசியா யார்? இயேசு யார்? உங்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். எனது கிரியை இந்த நாமங்களை அதன் திருப்புமுனையாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? எனது பரிசுத்த நாமம் எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும்? என்னுடைய நாமங்களில் ஏதேனும் ஒன்றால் என்னை அழைத்த எந்த தேசத்திற்கும் எனது நாமம் எவ்வாறு பரப்பப்பட வேண்டும். எனது கிரியை விரிவடைந்து வருகிறது, அதன் பரிபூரணத்தை எந்தவொரு நாட்டிற்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பரப்புவேன். எனது கிரியை உங்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இஸ்ரவேலில் தாவீதின் வம்சத்தின் மேய்ப்பர்களை யேகோவா அடித்ததைப் போல நான் உங்களை அடிப்பேன், இதனால் நீங்கள் ஒவ்வொரு தேசத்திற்கும் சிதறடிக்கப்படுவீர்கள். கடைசி நாட்களில், நான் எல்லா தேசங்களையும் சுக்குநூறாக இடித்துப் போடுவேன், அவர்களின் மக்களை புதிதாகக் கொடுப்பேன். நான் மீண்டும் திரும்பும்போது, எனது எரியும் அக்கினி ஜுவாலைகளால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் தேசங்கள் ஏற்கனவே வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில், யேகோவாவாகிய நான், யூத கோத்திரத்தார் மத்தியில் ஒருமுறை நடந்ததைப் போல, நான் சுட்டெரிக்கும் சூரியனாகப் புதிதாக மனிதகுலத்திற்கு வெளிப்படுவேன், பலதரப்பட்ட நாடுகள் மத்தியில் நடந்து அவர்கள் ஒருபோதும் கண்டிராத பரிசுத்தரின் சாயலில் என்னை வெளிப்படையாகக் காண்பிப்பேன். அப்போதிருந்து, நான் பூமியில் மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவேன். அங்கே அவர்கள் நிச்சயமாக என் மகிமையைக் காண்பார்கள், அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை வழிநடத்த அவர்கள் காற்றில் மேகஸ்தம்பத்தை நிச்சயம் காண்பார்கள், ஏனென்றால் நான் பரிசுத்த ஸ்தலங்களில் பிரசன்னம் செய்வேன். மனிதன் என் நீதியின் நாளையும், எனது மகிமையான வெளிப்பாட்டையும் காண்பான். நான் பூமியெங்கும் ஆட்சி செய்யும் போதும், எனது குமாரர்கள் பலரை மகிமைப்படுத்தும்போதும் அது நடக்கும். பூமியெங்கும், மனிதர்கள் வணங்குவார்கள், மற்றும் இன்று நான் மேற்கொள்ளும் கிரியையின் பாறை மீது, மனிதர்கள் மத்தியில் எனது ஆசரிப்புக்கூடாரம் உறுதியாக கட்டப்படும். ஆலயத்திலும் மக்கள் எனக்கு ஊழியம் செய்வார்கள். அழுக்கானவற்றாலும் அருவருப்பானவற்றாலும் மூடியிருக்கும் பலிபீடத்தைத் துண்டுகளாக நொறுக்கி புதிதாகக் கட்டுவேன். புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டிகளும் கன்றுகளும் பரிசுத்தப் பலிபீடத்தின் மீது குவிக்கப்படும். நான் இன்றைய ஆலயத்தை இடித்து, புதிதாக ஒன்றைக் கட்டுவேன். இப்போது வெறுக்கத்தக்க ஜனங்கள் நிறைந்து, நின்று கொண்டிருக்கும் ஆலயம் இடிந்து விழும், மற்றும் நான் கட்டும் ஆலயம் எனக்கு விசுவாசமுள்ள ஊழியக்காரர்களால் நிரப்பப்படும். எனது ஆலயத்தின் மகிமைக்காக அவர்கள் மீண்டும் எழுந்து எனக்கு ஊழியம் செய்வார்கள். நான் மிகுந்த மகிமையைப் பெறும் நாளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள், நான் ஆலயத்தை இடித்துப் புதிய ஒன்றைக் கட்டும் நாளையும் நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். மேலும், எனது ஆசரிப்புக் கூடாரம் மனிதர்களின் உலகத்திற்கு வரும் நாளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். நான் ஆலயத்தை நொறுக்கும்போது, அவர்கள் எனது வம்சாவளியைக் காணுமாறு எனது கூடாரத்தை மனிதர்களின் உலகிற்கு கொண்டு வருவேன். நான் எல்லாத் தேசங்களையும் சுக்குநூறாக்கிய பின், நான் அவர்களை புதிதாக ஒன்றுதிரட்டி, எல்லோரும் எனக்குப் பலியிடுவதற்கும், எனது ஆலயத்தில் எனக்கு ஊழியம் செய்வதற்கும், புறஜாதியார் தேசங்களில் எனது கிரியைக்கு உண்மையாக அர்ப்பணிப்பதற்கும் அங்கிருந்து எனது ஆலயத்தைக் கட்டி, எனது பலிபீடத்தை ஸ்தாபிப்பேன். அவர்கள் இன்றைய இஸ்ரவேலர்களைப் போல இருப்பார்கள், ஓர் ஆசாரிய அங்கி மற்றும் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்கள், அவர்கள் மத்தியில் யேகோவாவாகிய எனது மகிமை இருக்கும் மற்றும் எனது மாட்சிமை அவர்கள் மீது அசைவாடி அவர்களுடன் நிலைத்திருக்கும். புறஜாதியார் நாடுகளிலும் எனது கிரியை அதே வழியில் செயல்படுத்தப்படும். இஸ்ரவேலில் எனது கிரியை இருந்ததைப் போலவே, புறஜாதியார் தேசங்களிலும் எனது கிரியை இருக்கும், ஏனென்றால் நான் இஸ்ரவேலில் என் கிரியையை விரிவுபடுத்தி புறஜாதியாரின் தேசங்களுக்குப் பரப்புவேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க