தேவனுடைய வார்த்தைகள் | "நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்" | பகுதி 217

தேவனுடைய வார்த்தைகள் | "நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்" | பகுதி 217

88 |மார்ச் 10, 2021

அனைத்து ஜனங்களும் பூமியில் எனது கிரியையின் நோக்கங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது, இறுதியில் நான் எதை அடைய விரும்புகிறேன், இந்தக் கிரியை முடிக்கப்படுவதற்கு முன்பு நான் இதில் எந்த நிலையை அடைய வேண்டும். இன்றுவரை என்னுடன் இருந்த பிறகும் எனது கிரியை எதைப் பற்றியது என்று ஜனங்களுக்குப் புரியவில்லை என்றால், அவர்கள் என்னுடன் இருந்தது வீணாகிவிடவில்லையா? ஜனங்கள் என்னைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அவர்களுக்கு எனது சித்தம் தெரிந்திருக்க வேண்டும். நான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் கிரியைகளை நடப்பித்து வருகிறேன், மற்றும் இதனால் இன்றுவரை நான் தொடர்ந்து எனது கிரியையை இப்படியே மேற்கொண்டு வருகிறேன். எனது கிரியைப் பல செயற்திட்டங்களைக் கொண்டிருந்தாலும், அதன் நோக்கம் என்றும் மாறுவதில்லை; மனிதனுக்கான நியாந்தீர்த்தலும் தண்டனையும் என்னுள் நிறைந்திருந்தாலும், உதாரணமாக, நான் என்ன செய்தாலும் அவனைக் காப்பாற்றுவதற்காகவும், மற்றும் எனது நற்செய்தியை சிறந்த முறையில் பரப்புவதற்காகவும், மனிதன் முழுமையாக்கப்பட்டதும் எனது கிரியையை அனைத்து புறஜாதியார் தேசங்களின் மத்தியிலும் மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் செய்கிறேன். ஆகவே இன்று, அநேக ஜனங்கள் ஆழ்ந்த கலக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், நான் இப்போதும் எனது கிரியையைத் தொடர்கிறேன், நான் மனிதனுக்கு நியாயந்தீர்த்தலையும் தண்டனையையும் வழங்க மேற்கொள்ள வேண்டிய கிரியையைத் தொடர்கிறேன். நான் கூறுவதைக் கேட்டு மனிதன் சோர்ந்து போயிருப்பது உண்மை என்றாலும், எனது கிரியையில் தன்னைப் பற்றிக் கவலைப்பட அவனுக்கு விருப்பமில்லை என்ற போதிலும், எனது கிரியையின் நோக்கம் மாறாமல் இருக்கவும், எனது அசல் திட்டம் முறியாமல் இருக்கவும் நான் இன்னும் எனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். மனிதன் எனக்குக் கீழ்ப்படிவதற்கு உதவுவது எனது நியாயந்தீர்ப்பின் செயல்பாடாகும், மனிதனை மிகவும் செயல்திறத்துடன் மாற செய்வது எனது தண்டனையின் செயல்பாடாகும். நான் என்ன செய்தாலும் அதனை எனது மேலாண்மையின் பொருட்டே செய்கிறேன் என்றாலும், நான் ஒருபோதும் மனிதனுக்குப் பலனளிக்காத எதையும் செய்ததில்லை, இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள தேசங்களில் நான் காலடி வைத்திருக்கக்கூடும் என்றாலும், இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடுகளையும் இஸ்ரவேலர்களைப் போலவே கீழ்ப்படிபவர்களாக உருவாக்கவும், அவர்களை நிஜமான மனித இனமாக உருவாக்கவும் நான் விரும்புகிறேன். இது எனது மேலாண்மை இது புறஜாதி தேசங்களிடையே நான் செய்து வரும் கிரியையாகும். இப்போதும்கூட, பலருக்கு எனது மேலாண்மை புரிவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, மேலும் அவர்களின் சொந்த எதிர்காலங்களிலும் இலக்குகளிலும் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். நான் என்ன சொன்னாலும், நான் செய்யும் கிரியை குறித்து அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், அதற்குப் பதிலாக நாளைய அவர்களின் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எல்லாமும் இந்த வழியில் நடந்தால், எனது கிரியை எவ்வாறு விரிவடையும்? உலகம் முழுவதும் எனது நற்செய்தி எவ்வாறு பரவ முடியும்? என் கிரியை பரவும்போது, இஸ்ரவேலின் கோத்திரத்தார் ஒவ்வொருவரையும் யெகோவா வீழ்த்தியது போல நான் உங்களைச் சிதறடிப்பேன், மற்றும் வீழ்த்துவேன். இவை அனைத்தும் செய்யப்படும், அப்போதுதான் எனது நற்செய்தி பூமியெங்கும் பரவும், எனவே இது புறஜாதியார் தேசங்களைச் சென்றடையக்கூடும், இதனால் எனது பெயர் பெரியவர்களாலும் குழந்தைகளாலும் ஒரே மாதிரியாகப் மகிமைப்படுத்தப்படக்கூடும், எனது பரிசுத்தப் பெயர் எல்லாக் கோத்திரம் மற்றும் தேசங்களைச் சேர்ந்த மக்களின் வாய்களிலும் ஒரேவிதமாக புகழப்படும். எனவே, இந்த இறுதி சகாப்தத்தில், எனது நாமம் புறஜாதியாரிடையே மகிமைப்படுத்தப்படக்கூடும், இதனால் எனது செயல்கள் புறஜாதியாரால் காணப்படக்கூடும், மேலும் அவர்கள் எனது செயல்களின் காரணமாக என்னை சர்வ வல்லவர் என்று அழைப்பார்கள், எனவே எனது வார்த்தைகள் விரைவில் நடக்கும். நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் சபித்தவர்கள் உட்பட புறஜாதியாரின் எல்லா தேசங்களின் தேவன் நான் என்பதை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துவேன். நான் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தின் தேவன் என்பதை ஜனங்களைப் பார்க்க வைப்பேன். இது எனது மிகச் சிறந்த கிரியை, கடைசி நாட்களுக்கான எனது கிரியைத் திட்டத்தின் நோக்கம் மற்றும் கடைசி நாட்களில் முடிக்கப்பட வேண்டிய ஒரே கிரியை.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருந்து

மேலும் பார்க்க

உங்களது விசுவாசத்தில் ஏதேனும் சிரமங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக் கொள்ளுங்கள்.

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க