தேவனுடைய அனுதின வார்த்தைகள் | "சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்" | பகுதி 215

67 |மார்ச் 11, 2021

வேதாகமத்தில் தேவன் சோதோம் மீது அழிவைக் கொண்டுவந்த காட்சியை நினைவு கூருங்கள். மேலும், லோத்தின் மனைவி எவ்வாறு உப்புத் தூணாக மாறிப்போனாள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். நினிவே ஜனங்கள் இரட்டு உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து தங்கள் பாவங்களிலிருந்து எவ்வாறு மனந்திரும்பினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மேலும், 2,000 வருடங்களுக்கு முன்பு யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த பிறகு என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். யூதர்கள் இஸ்ரவேலில் இருந்து வெளியேற்றப்பட்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிதறி ஓடினார்கள். பலர் கொல்லப்பட்டனர், முழு யூத தேசமும் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அழிவுக்குள்ளானது. அவர்கள் தேவனை சிலுவையில் அறைந்து கொடூரமான பாவத்தைச் செய்தார்கள், தேவனுடைய மனநிலையை கோபப்படுத்தினார்கள். அவர்கள் செய்தவற்றுக்கு விலைக்கிரயம் கொடுத்தனர் மற்றும் அவர்களுடைய செயல்களின் அனைத்துப் பின்விளைவுகளையும் அனுபவித்தனர். அவர்கள் தேவனை நிந்தித்தார்கள், தேவனைப் புறக்கணித்தார்கள், எனவே தேவனால் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரே தலைவிதியைப் பெற்றனர். இதுதான் அவர்களுடைய ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டிற்கும் தேசத்திற்கும் கொண்டு வந்த கசப்பான பின்விளைவும் பேரழிவும் ஆகும்.

இன்று, தேவன் தனது கிரியையைச் செய்வதற்காக உலகிற்கு திரும்பியுள்ளார். சர்வாதிகார ஆட்சியாளர்களின் பெரும் கூட்டம் காணப்படும் நாத்திகத்தின் உறுதியான கோட்டையாக திகழும் சீனாவில் அவர் தனது முதல் நிறுத்தத்தை நிறுத்தியுள்ளார். தேவன் தனது ஞானத்தினாலும் வல்லமையினாலும் ஒரு கூட்டமான ஜனங்களை ஆதாயப்படுத்தியுள்ளார். இந்தக் காலகட்டத்தில், அவர் சீனாவின் ஆளும் கட்சியால் ஒவ்வொரு விதத்திலும் வேட்டையாடப்பட்டு, அவர் தலைசாய்க்கவும் தங்கவும் இடமில்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையிலும், தேவன் தான் செய்ய பிரயாசப்படும் கிரியையை இன்னும் தொடர்ந்து செய்கிறார்: அவர் தனது குரலில் சுவிசேஷத்தை அறிவித்துப் பரப்புகிறார். தேவனுடைய சர்வவல்லமையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. தேவனை எதிரியாகக் கருதும் நாடான சீனாவில், தேவன் தனது கிரியையை ஒருபோதும் நிறுத்தியதில்லை. மாறாக, அதிகமான ஜனங்கள் அவருடைய கிரியையையும் வார்த்தையையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் மனுக்குலத்தின் ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கத் தேவன் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். தேவன் அடைய வேண்டுமென்று பிரயாசப்படுகிற வழியில் எந்த நாடோ அல்லது எந்த அதிகாரமோ நிற்க முடியாது என்று நாம் நம்புகிறோம். தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்து, தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, தேவனுடைய திட்டத்திற்கு இடறலுண்டாக்கி, பலவீனப்படுத்துபவர்கள் இறுதியில் தேவனால் தண்டிக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியைக்கு எதிராக நிற்பவன் நரகத்திற்கு அனுப்பப்படுவான்; தேவனுடைய கிரியையை எதிர்க்கும் எந்த நாடும் அழிக்கப்படும்; தேவனுடைய கிரியையை எதிர்க்க எழுந்த எந்தத் தேசமும் இந்தப் பூமியில் இல்லாமல் நிர்மூலமாக்கப்படும். தேவனுடைய குரலைக் கேட்கவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்தவும், தேவனை மிகவும் பரிசுத்தமானவராகவும், மிகவும் கனத்திற்குரியவராகவும், மிகவும் உயர்ந்தவராகவும், மனுக்குலம் தொழுதுகொள்ளும் ஒரே இலக்காக மாற்றவும், ஆபிரகாமின் சந்ததியினர் யோகோவாவின் வாக்குத்தத்தத்தின் கீழ் வாழ்ந்ததைப் போலவும், தேவன் முதலாவது சிருஷ்டித்த ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தது போலவும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் மனுக்குலம் முழுவதும் வாழ்வதற்கு உதவவும் வேண்டுமாறு சகல தேசங்களையும், சகல நாடுகளையும், ஏன் சகல தொழில் நிறுவனங்களையும் சேர்ந்த ஜனங்களை வலியுறுத்துகிறேன்.

தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது. அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது. அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்பவர்களும், அவரைத் தேடுபவர்களும், அவருக்காக தாகம் கொள்பவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இல்லாதவர்கள் பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருந்து

மேலும் பார்க்க

சிரமங்களை அல்லது துன்பங்களை எதிர்கொள்ளும்போது, ​​தேவன் மீது நம்முடைய நம்பிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க