தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 204

மார்ச் 9, 2023

என் வார்த்தைகள், அதிகாரம், மகத்துவம் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை எல்லா நாடுகள் மற்றும் தேசங்களில் உள்ள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வண்ணம் எனது ஆரம்பக் கிரியை பிரபஞ்சம் முழுவதிலும் தகுந்தவாறும் பரிபூரணமாகவும் செய்யப்படுவதற்காக என் கிரியை சீராக முன்னேற்றம் அடையும் பொருட்டு இன்று, நான் உங்களது சொந்த உயிர்வாழ்விற்காக உங்களுக்கு புத்திமதி கூறுகிறேன். உங்களுக்கு மத்தியில் நான் செய்யும் கிரியைதான் பிரபஞ்சம் முழுவதிலும் என் கிரியைக்கான ஆரம்பம். ஏற்கெனவே இப்போது கடைசி நாட்களின் காலமாக இருக்கும் போதிலும், "கடைசி நாட்கள்" என்பது ஒரு காலத்தின் பெயர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; நியாயப்பிரமாணத்தின் காலம் மற்றும் கிருபையின் காலம் போன்று, அது ஒரு காலத்தைக் குறிக்கிறது, மேலும், இறுதி சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் என்பதற்கு மாறாக, அது ஒரு முழுமையான காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் கடைசி நாட்கள் கிருபையின் காலத்தையும் நியாயப்பிரமாணத்தின் காலத்தையும் போல் அல்லாமல் முற்றிலும் மாறானவைகளாக இருக்கின்றன. கடைசி நாட்களின் கிரியை இஸ்ரவேலில் அல்ல, புறஜாதியார் மத்தியில் செய்யப்படுகிறது; அது பிரபஞ்சம் முழுவதுமான என் மகிமை பிரபஞ்சத்தையும் ஆகாயவிரிவையும் நிறைக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்குப் புறம்பாக இருக்கும் அனைத்து தேசங்கள் மற்றும் கோத்திரங்கள் மேல் நான் ராஜ்யபாரம் செய்வதற்கு முன்னான என் ஜெயங்கொள்ளுதல் ஆகும். நான் மேலான மகிமையைப் பெறுவதற்காகவும், பூமியின் மேலுள்ள எல்லா சிருஷ்டிகளும் என் மகிமையை ஒவ்வொரு தேசத்துக்கும், என்றென்றும் தலைமுறை தலைமுறையாகவும் கொண்டுசெல்லுவதற்காகவும், நான் பூமியில் பெற்ற சகல மகிமையையும் வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா சிருஷ்டிகளும் காணத்தக்கதாகவும் அது அவ்வாறாக உள்ளது. கடைசி நாட்களில் செய்யப்படும் கிரியை ஜெயங்கொள்ளுதலின் கிரியை ஆகும். அது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கைக்கான வழிகாட்டி அல்ல, ஆனால் பூமியில் மனுக்குலத்தின் அழிவில்லாத, ஆயிரமாண்டு கால துன்ப வாழ்க்கையின் முடிவாகும். அதன் விளைவாக, கடைசி நாட்களின் கிரியையானது, இஸ்ரவேலில் நடந்த பல ஆயிரம் ஆண்டுகளின் கிரியையைப் போன்றோ, அல்லது யூதேயாவில் வெறும் பல ஆண்டுகள் நடைபெற்று தேவனின் இரண்டாவது மனுஷ அவதரிப்பு வரை இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கிரியையைப் போன்றோ இருக்க முடியாது. கடைசி நாட்களின் மக்கள் மாம்சத்தில் மீட்பரின் மறு தோற்றத்தைத்தான் காண்கின்றனர், மேலும் அவர்கள் தேவனின் தனிப்பட்ட கிரியை மற்றும் வார்த்தைகளைப் பெறுகின்றனர். கடைசி நாட்கள் முடிவுக்கு வருவதற்கு முன் இருப்பது இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருக்காது, அவை இயேசு யூதேயாவில் நடத்திய கிருபையின் காலக் கிரியையைப் போன்று குறுகியவை. இது ஏன் என்றால், கடைசி நாட்கள் என்பது ஒரு முழு யுகத்தின் முடிவாகும். அவை தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் முழுமையும் முடிவுமாகும் மற்றும் அவை மனுக்குலத்தின் துன்ப வாழ்க்கைப் பயணத்தை முடித்துவைக்கின்றன. அவை ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் ஒரு புதிய காலத்திற்குள் கொண்டு செல்லவில்லை அல்லது மனுக்குலத்தின் வாழ்க்கை தொடரவும் அனுமதிக்கவில்லை; அது என் நிர்வாகத் திட்டத்துக்கு அல்லது மனிதனின் வாழ்வுக்கு முக்கியத்துவம் கொண்டிருக்காது. மனுக்குலம் இவ்வாறு சென்றுகொண்டிருந்தால், இன்று இல்லாவிட்டலும் ஒருநாள் அவர்கள் பிசாசினால் முழுவதுமாக விழுங்கப்படுவர், மேலும் எனக்குச் சொந்தமான அந்த ஆத்துமாக்கள் இறுதியில் அதன் கரங்களால் பாழாக்கப்படும். என் கிரியைகள் ஆறாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன, மற்றும் முழு மனுக்குலத்தின் மீது தீயவனின் கட்டுப்பாடும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மிகாமல் நீடிக்கும் என நான் உறுதியளிக்கிறேன். ஆகவே, இப்போது நேரம் வந்திருக்கிறது. இனிமேலும் நான் தொடரவும் தாமதிக்கவும் மாட்டேன்: கடைசி காலங்களின் போது நான் சாத்தானை அழிப்பேன், நான் என் மகிமை யாவையும் திரும்பவும் பெறுவேன், எனக்கு உரிமையான அனைத்து ஆத்துமாக்களையும் மீட்டெடுப்பதன் மூலம் அந்தத் துயருற்ற ஆத்துமாக்கள் கடல்போன்ற துன்பத்தில் இருந்து விடுதலை பெறும், மேலும் இவ்வாறு பூமியின் மேல் எனது எல்லா கிரியைகளும் நிறைவடையும். இந்த நாள் முதற்கொண்டு, நான் பூமியில் ஒரு போதும் மாம்சமாக மாட்டேன், மற்றும் எனது அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவியும் பூமியில் கிரியை செய்யாது. நான் ஒன்றே ஒன்றைத்தான் பூமியில் செய்வேன்: நான் மனுக்குலத்தை மீண்டும் பூமியில் சிருஷ்டிப்பேன், அந்த மனுக்குலம் பரிசுத்தமானதாக இருக்கும் மற்றும் அதுவே பூமியில் என் உண்மையுள்ள நகரமாகவும் இருக்கும். ஆனால் நான் முழு பூமியையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அல்லது முழு மனுக்குலத்தையும் அழிக்க மாட்டேன் என்பதையும் அறிந்துகொள்ளவும். என்னை நேசிக்கும் மற்றும் என்னால் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்ட மூன்றாம் பங்கை—மீந்திருக்கும் மூன்றாம் பங்கை நான் வைப்பேன், மேலும் இந்த மூன்றாம் பங்கை நியாயப்பிரமாணத்தின் கீழ் இஸ்ரவேலர்களைப் போல பூமியில் பலன்தந்து பெருகச்செய்வேன், எண்ணற்ற ஆடுகள் மற்றும் மிருகஜீவன்கள் மற்றும் பூமியின் அனைத்து வளங்களாலும் போஷிப்பேன். இந்த மனுக்குலம் எப்போதும் என்னுடன் இருக்கும், ஆனால் இன்றைய மனுக்குலம் போல் வெறுக்கத்தகும்படி அசுத்தமானதாக இருக்காது, ஆனால் என்னால் ஆதாயப்படுத்தப்பட்ட அனைவரின் சபையாக இருக்கும். இத்தகைய மனுக்குலம் சாத்தானால் சேதமும், தொந்தரவும் அடைவதில்லை அல்லது முற்றுகையிடப்படுவதும் இல்லை, மேலும் நான் சாத்தானை ஜெயங்கொண்ட பின் பூமியில் இருக்கும் ஒரே மனுக்குலமாக இருக்கும். இன்று என்னால் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலம் இதுவே மற்றும் அது என் வாக்குத்தத்தத்தை அடைந்துகொண்டது. ஆகவே, கடைசி நாட்களில் ஜெயங்கொள்ளப்படும் மனுக்குலமே தப்பித்துக்கொள்ளும் மற்றும் அது என் நித்திய ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும். அதுவே சாத்தானை நான் மேற்கொண்டதற்கான ஒரே சான்றாதாரம், மேலும் அதுவே சாத்தானோடான என் யுத்தத்தின் அழிவாகும். யுத்தத்தின் இந்த அழிவை சாத்தானின் அதிகார எல்லையில் இருந்து என்னால் இரட்சிக்கப்பட்டது, மற்றும் என் ஆறாயிர ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் ஒரே பலனும் கனியும் ஆகும். அவர்கள் பிரபஞ்சம் எங்கும் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் இருந்தும், ஒவ்வொரு இடத்திலும் நாட்டிலும் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் வெவ்வேறு இனத்தினர், வெவ்வேறு மொழிகளும், பழக்கவழக்கங்களும், தோல் நிறமும் கொண்டவர்கள், மற்றும் அவர்கள் உலகின் ஒவ்வொரு தேசத்திலும் பிரிவிலும் மேலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரந்து இருப்பவர்கள். முடிவில், ஒரு முழுமையான மனுக்குலத்தை உருவாக்க ஒன்றாக வருவார்கள், அது சாத்தானின் படைகள் சென்றடையமுடியாத ஒரு மனிதர்களின் கூட்டமாகும். மனுக்குலத்தின் மத்தியில் என்னால் இரட்சிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்படாதவர்கள் கடலின் ஆழத்துக்குள் அமைதியாக அமிழ்ந்து நித்தியமாக என் பட்சிக்கும் அக்கினியால் எரிக்கப்படுவார்கள். ஆட்டுக்குட்டியின் மாம்சம் புசித்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பானம்செய்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் கதவு நிலைகளை அடையாளப்படுத்திய இஸ்ரவேலர்களை மட்டுமே விட்டுவிட்டு, எகிப்தின் தலைச்சாண் பிள்ளைகளையும் மிருகஜீவன்களையும் நான் அழித்தது போல் இந்தப் பழைய, மிகவும் அசுத்தமான மனுக்குலத்தை அழித்தொழிப்பேன். என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட மக்களும் என் குடும்பம் ஆனவர்களும்தானே ஆட்டுக்குட்டியாகிய என் மாம்சத்தைப் புசித்து, ஆட்டுக்குட்டியாகிய என் இரத்தத்தைப் பானம்செய்பவர்கள் மற்றும் என்னால் இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் என்னைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அல்லவா? இத்தகைய மக்கள் எப்போதும் என் மகிமையோடு இணைந்திருக்கவில்லையா? ஆட்டுக்குட்டியாகிய மாம்சம் இல்லாமல் இருப்பவர்கள் அமைதியாகக் கடலின் ஆழத்துக்குள் ஏற்கெனவே அமிழ்ந்துவிடவில்லையா? இன்று நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள், மேலும் இன்று என்னுடைய வார்த்தைகள் இஸ்ரவேலர்களின் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் யேகோவா பேசிய வார்த்தைகள் போல் இருக்கின்றன. இருப்பினும் உங்கள் இருதயங்களின் ஆழத்தில் இருக்கும் கடினம் என் கோபாக்கினையை ஒன்றுதிரட்டி, உங்கள் மாம்சத்தின் மேல் அதிக வேதனையையையும், உங்கள் பாவங்களின் மேல் அதிக நியாயத்தீர்ப்புகளையும் உங்கள் அநீதியின் மேல் கூடுதல் கோபாக்கினையையும் கொண்டு வருகிறது. இன்று நீங்கள் என்னை இந்த விதத்தில் நடத்தும்போது என் கோபாக்கினை நாளில் யார் தப்ப முடியும்? என் தண்டனையின் கண்களில் இருந்து யாருடைய அநீதியால் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் கரங்களில் இருந்து யாருடைய பாவங்கள் தப்பிக்க முடியும்? சர்வவல்லவரான என் நியாயத்தீர்ப்பில் இருந்து யாருடைய முரட்டாட்டம் தப்பிக்க முடியும்? நான், யேகோவா, புறஜாதியார் குடும்பத்தின் சந்ததியாரான உங்களிடம் இவ்வாறு பேசுகிறேன், மேலும் நான் உங்களிடம் பேசும் இந்த வார்த்தைகள் நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், கிருபையின் காலத்திலும் கூறப்பட்ட வார்த்தைகளை மிஞ்சுகிறது, ஆனாலும் நீங்கள் எகிப்தின் அனைத்து மக்களையும் விட கடினமானவர்களாக இருக்கிறீர்கள். நான் நிதானமாக என் கிரியையை செய்யும்போது என்னுடைய கோபாக்கினையை நீங்கள் குவித்து வைக்கவில்லையா? சர்வவல்லவரான என் நாளின் போது உங்களால் எவ்வாறு தீங்கின்றித் தப்பித்துக்கொள்ள முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க