தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 167
மார்ச் 26, 2023
பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனால் கூட தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதுபோன்ற மனுஷனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று சொல்வது மட்டுமல்லாமல், அவன் செய்யும் கிரியையாலும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனுஷனின் அனுபவத்தை நேரடியாக தேவனின் நிர்வகித்தலின் கீழ் வைத்திருக்க முடியாது, மேலும் அதனால் தேவனின் நிர்வகித்தலைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. தேவன் அவராகவே செய்யும் கிரியை முழுக்க முழுக்க அவர் தமது சொந்த நிர்வகித்தல் திட்டத்தில் செய்ய விரும்பும் கிரியை ஆகும், அது பெரிய அளவிலான நிர்வகித்தலுடன் தொடர்புடையது. மனுஷனால் செய்யப்படும் கிரியையானது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதை உள்ளடக்கியதாகும். இதற்கு முன்னர் சென்றவர்களால் நடந்ததையும் தாண்டி ஒரு புதிய அனுபவ வழியைக் கண்டறிவதும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு வழிகாட்டுவதும் இதில் அடங்கும். இந்த ஜனங்கள் வழங்குவது அவர்களின் தனிப்பட்ட அனுபவம் அல்லது ஆன்மீக ஜனங்களின் ஆன்மீக எழுத்துக்கள் ஆகியவையே ஆகும். இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் செய்யும் கிரியையானது ஆறாயிரம் ஆண்டுகாலத் திட்டத்தில் நிர்வகித்தலின் பெரிய கிரியைக்குத் தொடர்பில்லாதது ஆகும். அவர்கள் வெறுமனே, ஜனங்களை பரிசுத்த ஆவியானவரின் நீரோட்டத்தில் வழிநடத்த, பரிசுத்த ஆவியானவரால் வெவ்வேறு காலங்களில் எழுப்பப்பட்டவர்கள். அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் முடிவடையும் வரை அல்லது அவர்களின் ஜீவிதங்கள் முடிவடையும் வரை அதைச் செய்வார்கள். அவர்கள் செய்யும் கிரியை தேவனுக்கு ஒரு பொருத்தமானப் பாதையை உருவாக்குவது அல்லது பூமியில் தேவனுடைய நிர்வகித்தலில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைத் தொடர்வது மட்டுமே ஆகும். தேவனுடைய நிர்வகித்தலின் பெரிய கிரியையை இவர்களால் தங்களுக்குள்ளேயே செய்ய இயலாது, அல்லது புதிய பாதைகளைத் திறக்கவும் முடியாது, மேலும் அவர்களில் எவரும் முந்தைய யுகத்தைச் சேர்ந்த தேவனுடைய எல்லா கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் முடியாது. ஆகையால், அவர்கள் செய்யும் கிரியை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் செய்யும் ஒரு செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதே அன்றி தேவன் செய்யும் ஊழியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர்கள் செய்யும் கிரியை, தேவனால் செய்யப்படுவதைப் போன்றது இல்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கான கிரியை தேவனின் இடத்தில் உள்ள மனுஷனால் செய்யக்கூடிய ஒன்றல்ல. தேவனைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது. மனுஷனால் செய்யப்படும் அனைத்துக் கிரியைகளும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தனது கடமையைச் செய்வதைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்படும்போது அல்லது தெளிவுபடுத்தப்படும்போது செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் வழங்கும் வழிகாட்டுதல், முழுக்க முழுக்க மனுஷனுக்கு அன்றாட ஜீவிதத்தில் நடைமுறையின் பாதையைக் காண்பிப்பதையும், தேவனின் விருப்பத்திற்கு இணங்க அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கொண்டுள்ளது. மனுஷனின் கிரியை தேவனின் நிர்வகித்தலை உள்ளடக்கியதும் இல்லை, ஆவியானவரின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. உதாரணமாக, விட்னஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ ஆகியோரின் கிரியைகள் தலைமை தாங்குவது மட்டுமே. புதிய பாதையோ அல்லது பழைய பாதையோ, வேதாகமத்தில் மீதமுள்ள கொள்கையின் அடிப்படையில் அந்தக் கிரியை முன்வைக்கப்பட்டது. உள்ளூர் தேவாலயத்தை மீட்டெடுப்பதோ அல்லது உள்ளூர் தேவாலயத்தைக் கட்டியெழுப்புவதோ, எதுவாக இருந்தாலும் தேவாலயங்களை நிறுவுவதே அவர்களின் கிரியையாக இருந்தது. இயேசுவாலும் அவருடைய அப்போஸ்தலர்களாலும் முடிக்கப்படாத கிரியையை அல்லது கிருபையின் யுகத்தில் மேலும் வளர்ச்சியடையாத கிரியையையே அவர்கள் செய்தார்கள். இயேசு தம்முடைய காலக்கட்ட கிரியையில் அவருக்குப் பின் வரும் தலைமுறையினரைக் கேட்டுக்கொண்ட விஷயங்களான முக்காடிடுதல், ஞானஸ்நானம் பெறுதல், அப்பம் பிட்குதல் அல்லது திராட்சைரசம் பருகுதல் ஆகியவற்றையே அவர்கள் தங்களது கிரியையில் செய்தார்கள். அவர்களின் கிரியை, வேதாகமத்தைக் கடைப்பிடிப்பதும், வேதாகமத்தினுள் பாதைகளைத் தேடுவதுமாகும் என்று கூறலாம். அவர்கள் எந்த விதமான புதிய முன்னேற்றங்களையும் செய்யவில்லை. ஆகையால், அவர்களின் கிரியையில் வேதாகமத்தினுள் புதிய பாதைளைக் கண்டுபிடித்ததையும், சிறந்த மற்றும் மிகவும் யதார்த்தமான நடைமுறைகளையும் மட்டுமே காண முடியும். ஆனால் தேவனின் தற்போதைய சித்தத்தை அவர்களின் கிரியையில் கண்டறிய முடியாது, மேலும் கடைசிக் காலத்தில் தேவன் செய்யத் திட்டமிட்டுள்ள புதிய கிரியையையும் கண்டறிய இயலாது. ஏனென்றால், அவர்கள் நடந்து வந்த பாதை இன்னும் பழையதாகவே இருந்தது—புதுப்பித்தலும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. ஜனங்கள் மனந்திரும்பி தங்களது பாவங்களை ஒப்புக்கொள்ளும்படி அவர்களைக் கேட்கும் நடைமுறையை கடைப்பிடிக்கவும், கடைசிவரை சகித்துக்கொள்பவன் இரட்சிக்கப்படுவான் என்றும் மற்றும் ஆணே பெண்ணின் தலைவன் என்றும் சொல்லப்படுவதைக் கடைப்பிடிக்கவும், மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், மேலும் சகோதரிகள் பிரசங்கிக்க முடியாது, ஆனால் கீழ்ப்படிய வேண்டும் என்ற பாரம்பரியக் கருத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்த இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மையை அவர்கள் தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்தனர். இத்தகைய தலைமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரால் ஒருபோதும் புதிய கிரியைகளைச் செய்திருக்கவோ, ஜனங்களை விதிமுறைகளிலிருந்து விடுவித்திருக்கவோ, அல்லது அவர்களை சுதந்திரம் மற்றும் அழகின் ராஜ்யத்திற்கு வழிநடத்திச் சென்றிருக்கவோ முடிந்திருக்காது. ஆகையால், யுகத்தை மாற்றும் கிரியையின் இந்தக் கட்டத்தில் தேவன் தாமே கிரியை செய்யவும், பேசவும் வேண்டும்; இல்லையெனில் எந்த மனுஷனும் அவருக்குப் பதிலாக அவ்வாறு செய்ய முடியாது. இதுவரை, இந்த நீரோட்டத்துக்கு வெளியே பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டவர்கள் சகிப்புத்தன்மைகளை இழந்துவிட்டிருக்கிறார்கள். ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்களின் கிரியையானது தேவன் செய்த கிரியையைப் போலல்லாமல் இருப்பதால், அவர்களின் அடையாளங்களும் அவர்கள் சார்பாக அவர்கள் செயல்படுத்தும் விஷயங்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் செய்ய விரும்பும் கிரியை வேறுபட்டது, இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகக் கிரியை செய்பவர்களுக்கு வெவ்வேறு அடையாளங்களும் அந்தஸ்துகளும் வழங்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்கள் சில புதிய கிரியைகளையும் செய்யலாம், மேலும் முந்தைய யுகத்தில் செய்யப்பட்ட சில கிரியைகளை அகற்றவும் செய்யலாம், ஆனால் அவர்கள் செய்வது புதிய யுகத்தில் தேவனின் மனநிலையையும் சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் முந்தைய யுகத்தின் கிரியையை ஒழிக்க மட்டுமே கிரியைச் செய்கின்றனர், தேவனின் மனநிலையை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்திற்கான புதிய கிரியைகளைச் செய்வதற்காக அல்ல. இவ்வாறு, அவர்கள் எத்தனை காலாவதியான நடைமுறைகளை ஒழித்தாலும் அல்லது எத்தனை புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும், அவர்கள் இன்னமும் மனுஷனையும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களையும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், தேவனே தமது கிரியையைச் செய்யும்போது, பழைய யுகத்தின் நடைமுறைகள் ஒழிக்கப்படுவதை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை அல்லது புதிய யுகத்தின் தொடக்கத்தை நேரடியாக அறிவிப்பதில்லை. அவர் தமது கிரியையில் நேர்மையாகவும், நேரடியாகவும் இருக்கிறார். தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதில் அவர் நேர்மையானவர்; அதாவது, அவர் கொண்டு வந்த கிரியையை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அந்தக் கிரியையை துவக்கத்தில் எப்படிச் செய்ய விரும்பினாரோ அப்படியே செய்கிறார், அவருடைய தன்மையையும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். மனுஷன் அதைப் பார்க்கும்போது, அவருடைய மனநிலையும் அவருடைய கிரியையும் கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. இருப்பினும், தேவனின் கண்ணோட்டத்தில், இது அவருடைய கிரியையின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமாக மட்டுமே இருக்கிறது. தேவன் கிரியை செய்யும்போது, அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, புதிய கிரியையை நேரடியாகக் கொண்டுவருகிறார். இதற்கு நேர்மாறாக, மனுஷன் கிரியை செய்யும் போது, அந்தக் கிரியை, விவாதம் மற்றும் கற்றல் மூலமாகச் செய்யப்படுகிறது, அல்லது மற்றவர்களின் கிரியைகளில் நிறுவப்பட்ட அறிவின் விரிவாக்கம் மற்றும் நடைமுறையை முறைப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது, மனுஷன் செய்த கிரியையின் சாராம்சம் ஒரு நிறுவப்பட்ட ஒழுங்கைப் பின்பற்றுவதும், "பழைய பாதைகளில் புதிய காலணிகளைக் கொண்டு நடப்பதும்," ஆகும். இதன் பொருள் என்னவென்றால், ஜனங்கள் நடந்துசென்ற பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய பாதை கூட தேவனால் தொடங்கப்பட்டதின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதுதான். எனவே, எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, மனுஷன் இன்னும் மனுஷனாகவே இருக்கிறான், தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (1)" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்