தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 166

மார்ச் 26, 2023

கிருபையின் யுகத்தில், யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான். யோவானால் தேவனின் கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆனால் மனுஷனின் கடமையை மட்டுமே நிறைவேற்றினான். யோவான் கர்த்தருடைய முன்னோடியாக இருந்தான் என்றாலும், அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை; அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர்மீது இறங்கினார். பின்னர் அவர் தமது கிரியையைத் தொடங்கினார், அதாவது அவர் கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அதனால்தான் அவர் தேவனின் அடையாளத்தைச் சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவர் தேவனிடமிருந்து வந்தார். இதற்கு முன்பு அவருடைய விசுவாசம் எப்படியிருந்திருந்தாலும்—அது சில சமயங்களில் பலவீனமாக இருந்திருக்கலாம், அல்லது சில சமயங்களில் வலுவாகவும் இருந்திருக்கலாம்—அவை அனைத்தும் அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வழிநடத்தியச் சாதாரண மனுஷ ஜீவிதத்தைச் சேர்ந்தவை. அவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு (அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட பின்), தேவனின் வல்லமையும் மகிமையும் உடனடியாக அவரிடத்தில் வந்துசேர்ந்தன, ஆகவே அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கினார். அவரால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடிந்தது, அதிசயங்களைச் செய்ய முடிந்தது, அவருக்கு வல்லமையும் அதிகாரமும் இருந்தன, ஏனென்றால் அவர் நேரடியாக தேவனின் சார்பாகக் கிரியை செய்துவந்தார்; அவர் ஆவியானவரின் கிரியையை அவருக்குப் பதிலாகச் செய்து ஆவியானவரின் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகையால், அவரே தேவன்; இது மறுக்க முடியாதது. யோவான் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒருவன். அவனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாத்தியமும் அவனுக்கு இல்லை. அவன் அவ்வாறு செய்ய விரும்பியிருந்தால், பரிசுத்த ஆவியானவர் அதை அனுமதித்திருக்க மாட்டார், ஏனென்றால் தேவன் தாமாகவே நிறைவேற்ற நினைத்த கிரியையை அவனால் செய்ய முடியவில்லை. ஒருவேளை மனுஷன் நிறைய விருப்பங்களைக் கொண்டிருந்திருக்கலாம், அல்லது மாறுபட்ட ஏதோவொன்று இருந்திருக்கலாம்; எந்தச் சூழ்நிலையிலும் அவனால் நேரடியாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்திருக்காது. அவனுடைய முட்டாள்தனம் அவனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தின, ஆனால் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. ஆனாலும், அவனுடைய அனைத்தும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்று உன்னால் சொல்ல முடியாது. அவனுடைய விலகலும் பிழையும் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறு இருப்பது இயல்பானது, ஆனால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒருவன் மாறுபட்டவனாக இருந்தால், அது தேவனை அவமதிப்பதாக இருக்காதா? அது பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணம் அல்லவா? மற்றவர்களால் உயர்த்தப்பட்டாலும், தேவனின் இடத்தில் நிற்க பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை. அவன் தேவன் இல்லையென்றால், அவனால் இறுதியில் நிலையாக நிற்க முடியாது. மனுஷன் விரும்பியபடி தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த பரிசுத்த ஆவியானவர் மனுஷனை அனுமதிப்பதில்லை! உதாரணமாக, பரிசுத்த ஆவியானவர் யோவானுக்கு சாட்சியம் அளித்தார், அவன்தான் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தியவன் என்பதை வெளிப்படுத்தியதும் பரிசுத்த ஆவியானவர்தான், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவன்மீது செய்த கிரியைகள் நன்கு அளவிடப்பட்டிருந்தன. யோவானிடம் கேட்கப்பட்டதெல்லாம், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும், அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பன மட்டுமே. அதாவது, பரிசுத்த ஆவியானவர், வழியை ஆயத்தப்படுத்தும் அவனுடைய கிரியையை மட்டுமே ஆதரித்தார், அத்தகைய கிரியையைச் செய்ய மட்டுமே அவனை அனுமதித்தார்—வேறு எந்தக் கிரியையும் செய்ய அவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. யோவான் எலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினான், மேலும் வழியை ஆயத்தப்படுத்த ஒரு தீர்க்கதரிசியையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தினான். பரிசுத்த ஆவியானவர் இவ்விஷயத்தில் அவனை ஆதரித்தார்; அவனுடைய கிரியை வழிவகுப்பதாக இருக்கும் வரை, பரிசுத்த ஆவியானவர் அவனை ஆதரித்தார். இருப்பினும், அவனே தேவனாக இருப்பதாகக் கூறி, மீட்பின் கிரியையை முடிக்க வந்திருப்பதாகச் சொன்னால், பரிசுத்த ஆவியானவர் அவனை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்திருக்கும். யோவானின் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கிரியைக்கு எல்லைகள் இல்லாமல் இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கிரியையை உண்மையிலேயே ஆதரித்தார் என்பது உண்மையாக இருப்பினும், அந்த நேரத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வல்லமை அவன் வழியை ஆயத்தப்படுத்த மட்டுமே என வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவனால் வேறு எந்தக் கிரியையும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவன் வழியை ஆயத்தப்படுத்த வந்த யோவான் மட்டுமே, இயேசு அல்ல. ஆகையால், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் முக்கியமானது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷனைச் செய்ய அனுமதிக்கும் கிரியை அதைவிட முக்கியமானது. அந்த நேரத்தில் யோவானுக்கு அற்புதமான சாட்சியம் கிடைக்கவில்லையா? அவனது கிரியையும் பெரிதாக இருக்கவில்லையா? ஆனால் அவன் செய்த கிரியையானது இயேசுவை விட அதிகமானதாக இருக்க முடியாது, ஏனென்றால் அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷன் மட்டுமே, மேலும் தேவனை அவனால் நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, எனவே அவன் செய்த கிரியை வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவன் தனது ஆயத்தப்படுத்தும் கிரியையை முடித்தபின், பரிசுத்த ஆவியானவர் அவனது சாட்சியத்தை ஆதரிக்கவில்லை, புதிய கிரியைகள் எதுவும் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை, தேவன் அவராகவே கிரியை செய்யத் தொடங்கியவுடன் அவன் புறப்பட்டுச் சென்றான்.

சிலர் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டு, "நான் தான் தேவன்!" என்று சத்தமாகக் கூக்குரலிடுகிறார்கள். ஆயினும்கூட, இறுதியில், அவர்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயத்தில் அவர்கள் தவறு செய்கிறார்கள். அவர்கள் சாத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. நீ உன்னை எவ்வளவு உயர்த்திக் கொண்டாலும் அல்லது எவ்வளவு சத்தமாகக் கூக்குரலிட்டாலும், நீ இன்னும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன்தான். நீ சாத்தானுக்குச் சொந்தமானவன். "நான்தான் தேவன், நான்தான் தேவனின் அன்பான குமாரன்!" என்று நான் கூக்குரலிடுவதில்லை, ஆனால் நான் செய்யும் கிரியை தேவனின் கிரியை. நான் கத்த வேண்டுமா? உயர்த்திக் கூறவேண்டிய அவசியமே இல்லை. தேவன் தமது சொந்தக் கிரியையைத் தாமே செய்கிறார், அவருக்கு மனுஷன் ஒரு அந்தஸ்தை வழங்கவோ அல்லது அவருக்கு ஒரு கெளரவமான பட்டத்தை வழங்கவோ தேவையில்லை: அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு முன்பு, அவர் தேவனாக இருக்கவில்லையா? அவர் மாம்சமாகிய தேவனாக இருக்கவில்லையா? சாட்சிப் பிரமாணத்தைப் பெற்ற பிறகுதான் அவர் தேவனுடைய ஒரே குமாரனாக ஆனார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது அல்லவா? அவர் தனது கிரியையைத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இயேசு என்ற பெயரில் ஒரு மனுஷன் ஏற்கனவே இருக்கவில்லையா? உன்னால் புதிய பாதைகளைக் கொண்டு வரவோ அல்லது ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. உன்னால் ஆவியானவரின் கிரியையையோ அல்லது அவர் பேசும் வார்த்தைகளையோ வெளிப்படுத்த முடியாது. உன்னால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, ஆவியானவரின் கிரியையையும் உன்னால் செய்ய முடியாது. தேவனின் ஞானம், அதிசயம் மற்றும் புரிந்துகொள்ள முடியாதத் தன்மை மற்றும் தேவன் மனுஷனை சிட்சிக்கும் மனநிலையின் முழுமை—இவை அனைத்தும் உனது வெளிப்படுத்தும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. எனவே உன்னை தேவன் என்று நீ கூற முயல்வது பயனற்றது; உன்னிடம் பெயர் மட்டுமே இருக்கும், சாராம்சம் எதுவும் இருக்காது. தேவன் வந்துவிட்டார், ஆனால் யாரும் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, ஆனாலும் அவர் தம்முடைய கிரியையைத் தொடர்கிறார், மேலும் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாறு செய்கிறார். நீ அவரை மனுஷன் அல்லது தேவன், கர்த்தர் அல்லது கிறிஸ்து, அல்லது சகோதரி என எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் செய்யும் கிரியை ஆவியானவரின் கிரியையாகும், அது தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனுஷன் தம்மை எவ்வாறு அழைக்கிறான் என்பது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அந்தப் பெயரால் அவருடைய கிரியையைத் தீர்மானிக்க முடியுமா? தேவனைப் பொறுத்தவரை, நீ அவரை எவ்வாறு அழைத்தாலும், அவர் ஆவியான தேவனுடைய மாம்சம்தான்; அவர் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஆவியானவரால் அங்கீகரிக்கப்படுகிறார். உன்னால் ஒரு புதிய யுகத்திற்கு வழிவகுக்கவோ, அல்லது பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ, அல்லது ஒரு புதிய யுகத்தைத் தொடங்கவோ அல்லது புதிய கிரியையைச் செய்யவோ முடியாவிட்டால், நீ உன்னை தேவன் என்று அழைக்க முடியாது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (1)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க