தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 157

ஏப்ரல் 30, 2023

தேவனுடைய கிரியை ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, மற்றும் அவருடைய நிர்வகித்தல் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, அவருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறவர்கள் எல்லோரும் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளைத் தேவன் தம்முடைய சொந்த தராதரங்களின்படியும், மற்றும் மனுஷன் சாதிக்கக்கூடிய திறனுக்கேற்றபடியும் ஏற்படுத்துகின்றார். அவருடைய நிர்வகித்தலைப் பற்றிப் பேசும்போது, அவர் மனுஷனுக்கான வழியையும் சுட்டிக்காட்டுகின்றார், மற்றும் மனுஷனின் பிழைப்புக்கான பாதையை வழங்குகின்றார். தேவனுடைய நிர்வகித்தல் மற்றும் மனுஷனின் நடைமுறை இரண்டும் ஒரே கட்ட கிரியையாக இருக்கின்றன, மற்றும் அவை ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தேவனுடைய நிர்வகித்தல் பற்றிய பேச்சு மனுஷனுடைய மனநிலையின் மாற்றங்களுடன் தொடர்புகொண்டுள்ளது, மற்றும் மனுஷனால் செய்யப்படவேண்டியவை பற்றிய மற்றும் மனுஷனுடைய மனநிலையின் மாற்றம் பற்றிய அந்தப் பேச்சு, தேவனுடைய கிரியையுடன் தொடர்புகொண்டுள்ளது; இந்த இரண்டையும் பிரிப்பதற்கான நேரம் எதுவும் இருப்பதில்லை. மனுஷனின் நடைமுறையானது படிப்படியாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால், மனுஷனிடத்தில் தேவன் கேட்டுக்கொள்ளும் கோரிக்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன, மற்றும் தேவனின் கிரியையானது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது மற்றும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. மனுஷனின் நடைமுறையானது கோட்பாட்டில் அகப்பட்டிருந்தால், அவன் தேவனுடைய கிரியை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை பறிக்கப்பட்டவனாக இருக்கிறான் என்பதை இது நிரூபிக்கிறது; மனுஷனின் நடைமுறை ஒருபோதும் மாறாது அல்லது ஆழமாகச் செல்லாது என்றால், மனுஷனின் நடைமுறையானது மனுஷனின் விருப்பத்தின்படி செயல்படுத்தப்படுகிறது, மற்றும் அது சத்தியத்தின் நடைமுறையல்ல என்பதை நிரூபிக்கிறது; மனிதன் மிதித்துச் செல்வதற்குப் பாதை எதையும் கொண்டிருப்பதில்லை என்றால், அவன் ஏற்கெனவே சாத்தானின் கைகளில் விழுந்து, சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறான், இது அவன் பொல்லாத ஆவிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறான் என்று அர்த்தப்படுகிறது. மனுஷனின் நடைமுறை ஆழமாகச் செல்லவில்லை என்றால், தேவனுடைய கிரியை மேம்படாது, மற்றும் தேவனுடைய கிரியையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், மனுஷனின் பிரவேசித்தல் ஒரு நிறுத்தத்திற்கு வரும்; இது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. தேவனுடைய எல்லாக் கிரியையினூடாகவும், மனுஷன் எப்போதுமே யேகோவாவின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க வேண்டியிருந்தால், பின்பு தேவனுடைய கிரியை முன்னேற முடியாது, முழுயுகத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருதலுக்கான சாத்தியக்கூறு மிகக் குறைவானதாகவே இருக்கும். மனிதன் எப்பொழுதும் சிலுவையைப் பற்றிக்கொண்டு மற்றும் பொறுமையையும் மனத்தாழ்மையையும் கடைப்பிடித்துக் கொண்டிருந்தால், தேவனின் கிரியை தொடர்ந்து முன்னேறுவது சாத்தியமற்றதாக இருக்கும். நியாயப்பிரமாணத்தில் மாத்திரம் நிலைத்திருக்கும் ஜனங்கள் மத்தியிலோ, அல்லது சிலுவையை மாத்திரம் பற்றிக்கொண்டு மற்றும் பொறுமையையும் தாழ்மையையும் கடைப்பிடிக்கிறவர்கள் மத்தியிலோ, ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தலானது எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட இயலாது. அதற்குப் பதிலாக, தேவனுடைய நிர்வாகக் கிரியை முழுவதும் கடைசிநாட்களில் உள்ளவர்கள், தேவனை அறிகிறவர்கள், சாத்தானின் பிடியிலிருந்து மீட்கப்பட்டவர்கள், மற்றும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முழுமையாக விலக்கிக்கொண்டவர்கள் மத்தியில் முடிக்கப்பட்டு இருக்கிறது. இது தேவனுடைய கிரியையின் தவிர்க்க முடியாத வழிமுறையாக இருக்கிறது. மத தேவாலயங்களில் இருப்பவர்களின் நடைமுறை காலாவதியானது என்று கூறப்பட்டிருக்கிறது ஏன்? ஏனென்றால், அவர்கள் கடைப்பிடிப்பது இன்றைய நாட்களின் கிரியையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. கிருபையின் காலத்தில், அவர்கள் கடைப்பிடித்தது சரியானதாக இருந்தது, ஆனால் அந்தக் காலம் கடந்து சென்றுள்ளது, மற்றும் அவர்கள் கடைப்பிடித்தது படிப்படியாகக் காலாவதியாகியுள்ளது. இது புதிய கிரியையினால் மற்றும் புதிய வெளிச்சத்தினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் தொடக்ககால அஸ்திபாரத்தின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பலபடிகள் ஆழமாக முன்னேறியிருக்கின்றது. இருப்பினும், அந்த மக்கள் இன்னும் தேவனுடைய கிரியையின் ஆரம்பக் கட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள், மற்றும் பழைய நடைமுறைகள் மற்றும் பழைய வெளிச்சத்துடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளிலேயே தேவனுடைய கிரியை பெரிதும் மாறக்கூடும், எனவே 2,000 ஆண்டுகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்காதா? மனிதனுக்குப் புதிய வெளிச்சமோ நடைமுறையோ இல்லையென்றால், அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடர்ந்து கடைபிடிக்கவில்லை என்று இது அர்த்தப்படுத்துகிறது. இது மனுஷனின் தோல்வியாக இருக்கிறது; தேவனுடைய புதிய கிரியை இருப்பது மறுதலிக்கப்படமுடியாதது, ஏனென்றால், முன்பு பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தவர்கள் இன்று, காலாவதியான நடைமுறைகளில் இன்னமும் நிலைத்து இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதுமே முன்னோக்கி நகர்கின்றது, பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறவர்கள் எல்லோரும் கூட படிப்படியாக ஆழமாக முன்னேறவும் மற்றும் மாற்றம் அடையவும் வேண்டும். அவர்கள் ஒரே கட்டத்தில் நின்று விடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள் மட்டுமே அவருடைய தொடக்ககாலக் கிரியையிலேயே தங்கியிருப்பார்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கீழ்ப்படியாமையோடு இருக்கிறவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். மனுஷனின் நடைமுறையானது பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையுடன் இணக்கமாக இல்லாதிருந்தால், பின்பு மனுஷனின் நடைமுறை நிச்சயமாக இன்றையநாட்களின் கிரியையில் இருந்து துண்டிக்கப்படுகிறது, மற்றும் அது இன்றைய நாட்களின் கிரியைக்கு நிச்சயமாகவே முரண்பாடானதாக இருக்கிறது. காலத்திற்குப் பொருந்தாத இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் திறனற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறுதியாகத் தேவனுக்குச் சாட்சியாக நிற்கும் ஜனங்களாக முடிவதில்லை. மேலும், முழு நிர்வாகக் கிரியையும், இப்படிப்பட்டதொரு ஜனக்கூட்டத்தின் மத்தியில் முடிக்கப்பட இயலாது. ஏனெனில் ஒருகாலத்தில் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தைப் பற்றியிருந்தவர்களும், மற்றும் ஒருகாலத்தில் சிலுவைக்காகப் பாடுகளை அனுபவித்தவர்களும், கடைசிநாட்களில் நடக்கும் கிரியையின் கட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் செய்ததெல்லாம் வீணானதும் மற்றும் பயனற்றதுமாகிவிடும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய மிகத்தெளிவான வெளிப்பாடு இப்போது ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது, அது கடந்தகாலத்தைப் பற்றிக் கொண்டிருப்பதில்லை. இன்றைய கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் இன்றைய நடைமுறையிலிருந்து பிரிந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்ப்பவர்களாக மற்றும் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய தற்போதைய கிரியையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் கடந்த காலத்தின் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இவர்கள் அறிவதில்லை என்பது மறுக்கப்பட இயலாது. மனுஷனின் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள், நடைமுறையில் கடந்தகாலத்திற்கும் இன்றைய நாட்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், முந்தைய காலத்தில் இந்த நடைமுறை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது, இன்று அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதற்கான இந்த எல்லாப் பேச்சும் இருப்பது ஏன்? மனுஷனின் நடைமுறையில் இப்படிப்பட்ட பிரிவினைகள் எப்போதும் பேசப்படுகின்றன, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டுள்ளது, இவ்விதமாகவே மனுஷனின் நடைமுறை நிலையாக மாறவேண்டியதிருக்கின்றது. மனுஷன் ஒரு கட்டத்திலேயே சிக்கிக்கொண்டால், தேவனின் புதிய கிரியை மற்றும் புதிய வெளிச்சத்தைக் கடைப்பிடிக்க அவனால் இயலாது என்பதை இது நிரூபிக்கிறது; தேவனின் ஆளுகைத் திட்டம் மாறியிருக்கவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருப்பவர்கள் எப்போதுமே தாங்கள் சரியானவர்களாய் இருக்கிறதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், அவர்களுக்குள் தேவனுடைய கிரியை நீண்ட காலத்திற்கு முன்பே நின்றுவிட்டது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களிடமிருந்து இல்லாதே போயிருக்கிறது. தேவனுடைய கிரியை நீண்ட காலத்திற்கு முன்பே அவர் தமது புதிய கிரியையை முடிக்க நோக்கங் கொண்டுள்ள வேறொரு ஜனக்கூட்டத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. ஏனென்றால், மதத்தில் இருப்பவர்கள் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் கடந்தகாலத்தின் பழைய கிரியையை மட்டுமே பற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு தேவன் இந்த ஜனங்களைக் கைவிட்டுவிட்டார், மற்றும் இந்தப் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஜனங்கள்மீது அவருடைய புதிய கிரியையைச் செய்கின்றார். இவர்கள்தான் அவருடைய புதிய கிரியையில் ஒத்துழைக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள், மற்றும் இந்த வழியில் மட்டுமே அவருடைய நிர்வகித்தல் நிறைவேற்றப்பட முடியும். தேவனுடைய நிர்வகித்தல் எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை எப்போதும் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது. தேவன் எப்பொழுதும் கிரியை செய்து கொண்டிருக்கின்றார், மற்றும் மனுஷன் எப்போதுமே தேவை உள்ள நிலையில் இருக்கிறான், இப்படியாக இருவருமே தங்கள் உச்சத்தை அடைகின்றார்கள், மற்றும் தேவனும் மனிதனும் முழுமையான ஒருங்கிணைப்பை அடைகின்றார்கள். இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதற்கான வெளிப்பாடாக இருக்கின்றது, மற்றும் இது தேவனுடைய முழு நிர்வகித்தலின் இறுதிவிளைவாக இருக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க