தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 153

ஏப்ரல் 30, 2023

முந்தைய யுகங்களுடன் ஒப்பிடும்போது, ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது தேவனுடைய கிரியை மிகவும் நடைமுறைக்கு உரியதாக இருக்கின்றது, மனுஷனின் சாராம்சம் மற்றும் அவனது மனநிலையின் மாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது, மேலும் தேவனைப் பின்பற்றும் அனைவரும் அவருக்கு அதிகமாய்ச் சாட்சியம் தரக்கூடியவர்கள் ஆக்குகின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதென்றால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது, தேவன் செயல்படுகையில், கடந்தகாலங்களில் வேறு எந்தக் காலத்தைக் காட்டிலும் அதிகமாக தேவன் தம்மைக் காண்பிக்கின்றார், அதாவது மனுஷனால் அறியப்பட வேண்டிய தரிசனங்கள், முந்தைய எந்த யுகத்தைக் காட்டிலும் உயர்வானவைகளாக இருக்கின்றன. மனுஷர்களிடையே தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருப்பதால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது மனுஷனால் அறியப்பட்ட தரிசனங்கள் எல்லா நிர்வாகக் கிரியையிலும் மிகவும் உயர்ந்தவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியை முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது, மற்றும் மனுஷனால் அறியப்படவேண்டிய தரிசனங்கள், மற்ற எல்லாத் தரிசனங்களையும்விட மிகவும் உயர்ந்தவைகள் ஆகிவிட்டன, மற்றும் இதன்விளைவாக மனுஷனின் நடைமுறையும் முந்தைய யுகங்கள் எதிலும் இருந்ததைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கிறது, ஏனெனில் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களுடன் படிப்படியாக மாறுகிறது, மற்றும் தரிசனங்களின் பரிபூரணத்துவமானது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவற்றின் பரிபூரணத்துவத்தையும் குறிக்கிறது. தேவனின் நிர்வகித்தல் அனைத்தும் ஒரு நிறுத்தத்திற்கு வந்த உடனே, மனுஷனின் நடைமுறையும் ஒழியும், தேவனுடைய கிரியை இல்லாத நிலையில், மனுஷன் தேர்ந்துகொள்ள, கடந்த காலக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தல் என்பதைத் தவிர வேறெதுவும் கொண்டிருக்க மாட்டான், இல்லையேல் திரும்புவதற்கு வெறுமனே எந்த இடமும் அவனுக்கிராது. புதியதரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் புதிய நடைமுறை எதுவும் இருக்காது; முழுமையான தரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் பரிபூரணமான நடைமுறை இருக்காது; உயர்வான தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் உயர்வான நடைமுறை இருக்காது. தேவனுடைய அடிச்சுவடுகளுடன் கூடவே மனுஷனின் நடைமுறை மாறுகிறது, மற்றும், அதுபோலவே, தேவனுடைய கிரியையுடன் கூடவே மனுஷனின் அறிவும் அனுபவமும் மாறுகின்றன. மனுஷன் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், அவன் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இன்னமும் இருக்கிறான், தேவன் கிரியை செய்வதை ஒரு கணம் மாத்திரம் நிறுத்தினால், மனுஷன் உடனடியாக அவருடைய கோபத்தினால் மரித்துப்போவான். மனுஷனிடம் பெருமைபாராட்ட ஒன்றுமில்லை, ஏனெனில் இன்று மனுஷனின் அறிவு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவனது அனுபவங்கள் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான்—ஏனெனில் மனுஷனின் நடைமுறையும், தேவன் மீதான நம்பிக்கையில் அவன் தேட வேண்டியவையும், தரிசனங்களில் இருந்து பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு நிகழ்விலும், மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனங்கள் உள்ளன, மற்றும், இவற்றைப் பின்பற்றி, பொருத்தமான கோரிக்கைகள் மனுஷனால் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தரிசனங்களை அடித்தளமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மனுஷன் நடைமுறையில் வெறுமனே திறனற்றவனாக இருப்பான், அத்துடன் மனுஷன் உறுதியாக தேவனைப் பின்பற்ற இயலாத நிலையில் இருப்பான். மனுஷன் தேவனை அறியாது அல்லது தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாது இருந்தால், மனுஷன் செய்கிற எல்லாம் வீணானதாக இருக்கும், மற்றும் அவை தேவனால் அங்கீகரிக்கப்பட இயலாதவையாக இருக்கும். மனுஷனின் கொடைகள் எவ்வளவு ஏராளமாயிருந்தாலும், அவன் இன்னும் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான். மனுஷனின் செயல்கள் எவ்வளவு நல்லவைகளாக இருப்பினும் அல்லது மனுஷன் எத்தனையோ செயல்களைச் செய்தாலும், இன்னமும் அவர்களால் தேவனுடைய கிரியைக்கு மாற்றாக எதுவும் செய்துவிட முடியாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களிலிருந்து பிரிக்கப்பட இயலாது. புதிய தரிசனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் புதிய நடைமுறையைக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் நடைமுறையானது சத்தியத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் கோட்பாடுகளில் நிலைத்திருந்து, மரித்துப்போன நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; அவர்கள் புதிய தரிசனங்கள் எவற்றையும் கொண்டிருப்பதில்லை, இதன் விளைவாக, அவர்கள் புதிய யுகத்திலிருந்து எதையும் நடைமுறைப்படுத்துவது இல்லை. அவர்கள் தரிசனங்களை இழந்திருக்கிறார்கள், அவ்வாறு செய்வதால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் இழந்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் சத்தியத்தை இழந்திருக்கிறார்கள். சத்தியம் இல்லாதவர்கள் அபத்தத்தின் வம்சாவளியினராய் இருக்கின்றனர், அவர்கள் சாத்தானின் உருவமாகவே இருக்கின்றனர். ஒருவர் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கிரியையின் தரிசனங்கள் இன்றி இருக்க முடியாது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருந்து விலகி இருக்க முடியாது; ஒருவர் தரிசனங்களை இழந்தவுடன், ஒருவர் உடனடியாக பாதாளத்தில் இறங்குகிறார் மற்றும் இருளின் மத்தியில் வாழ்கிறார். தரிசனம் இல்லாதவர்கள் மதியீனமாக தேவனைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதில்லை, மாறாகத் தேவனுடைய நாமத்தை ஓர் அடையாள அட்டை போலத் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மாம்சமாக அவதரித்த தேவனை அறியாதவர்கள், தேவனுடைய நிர்வகித்தல் முழுமையிலும் கிரியையின் மூன்று கட்டங்களை அறியாதவர்கள்—இவர்கள் தரிசனங்களை அறிவதில்லை, எனவே சத்தியம் இல்லாமல் இருக்கின்றார்கள். மேலும், சத்தியத்தைக் கொண்டிராதவர்கள் எல்லாப் பொல்லாங்கும் செய்பவர்கள் அல்லவா? சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பவர்கள், தேவனைப் பற்றிய அறிவை நாட மனவிருப்பம் கொண்டவர்கள், மற்றும் தேவனுடன் உண்மையிலேயே ஒத்துழைப்பவர்கள், தரிசனங்களை ஓர் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் ஜனங்களாக இருக்கின்றனர். இவர்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுகின்றார்கள், ஏனென்றால் இவர்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறார்கள், மற்றும் இந்த ஒத்துழைப்புதான் மனிதனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க