தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 152

ஏப்ரல் 30, 2023

மனுஷன் மத்தியில் தேவனுடைய கிரியை என்பது மனுஷனிடமிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது, ஏனென்றால் மனிதனே இந்தக் கிரியையின் இலக்காக இருக்கின்றான், மற்றும் மனுஷன் மாத்திரமே தேவனுக்குச் சாட்சியத்தைக் கொண்டிருக்கக்கூடிய வகையில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே சிருஷ்டியாக இருக்கின்றான். மனுஷனின் வாழ்க்கை மற்றும் அவனது செயல்பாடுகள் அனைத்தும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட இயலாதவையாக இருக்கின்றன, மற்றும் இவை அனைத்தும் தேவனுடைய கரங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மற்றும் எந்த நபரும் தேவன் இல்லாமல் இருக்க முடியாது என்றும்கூட கூறலாம். எவரொருவரும் இதை மறுக்க முடியாது, ஏனெனில் இது ஒரு உண்மையாக இருக்கின்றது. தேவன் செய்கின்ற யாவும் மனுக்குலத்தின் பிரயோஜனத்திற்கானதாகவே இருக்கின்றது, மற்றும் அது சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு எதிராக செயல்படுத்தப்படுகின்றது. மனுஷனுக்குத் தேவையான அனைத்தும் தேவனிடமிருந்தே வருகின்றது, தேவனே மனுஷனுடைய வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கின்றார். இவ்வாறாக, மனுஷன் தேவனிடத்திலிருந்து பிரியக்கூடாதவனாக இருக்கிறான். மேலும் தேவன் மனுஷனிலிருந்து பிரிந்து செல்வதற்கான எந்த நோக்கத்தையும் ஒருபோதும் கொண்டிருந்தது இல்லை. தேவன் செய்கின்ற கிரியை சகல மனுக்குலத்தின் நிமித்தமானதாக இருக்கின்றது, மற்றும் அவருடைய எண்ணங்கள் எப்பொழுதும் இரக்கமுள்ளவையாகவே இருக்கின்றன. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய சிந்தனைகள் (அதாவது, தேவனுடைய சித்தம்) என்ற இரண்டுமே மனுஷனால் அறியப்பட வேண்டிய "தரிசனங்களாக" இருக்கின்றன. இப்படிப்பட்ட தரிசனங்கள் தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றன, மற்றும் மனிதனால் செய்யப்பட்டிருக்க முடியாத கிரியையாக இருக்கின்றன. அதேவேளையில், தேவன் தம்முடைய கிரியையின்போது, மனுஷன் செய்யும்படி அவனிடத்தில் அவர் கேட்டுக்கொள்கின்ற விஷயங்கள் மனுஷனின் "நடைமுறை" என்று அழைக்கப்படுகின்றன. தரிசனங்கள் என்பவை தேவனுடைய கிரியையாக இருக்கின்றன, அல்லது அவை மனுக்குலத்திற்கான அவரது சித்தமாக இருக்கின்றன அல்லது அவருடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. தரிசனங்கள் நிர்வகித்தலின் ஒருபகுதி என்றும் கூறப்படலாம், ஏனெனில் இந்த நிர்வகித்தல் தேவனின் கிரியையாக இருக்கின்றது, மற்றும் இது மனுஷனை நோக்கிச் செலுத்தப்படுகின்றது, இது மனுஷன் மத்தியில் தேவன் செய்கின்ற கிரியை என்று அர்த்தப்படுகின்றது. இந்தக் கிரியையானது தேவனுக்கு சாட்சியமாகவும் மற்றும் மனுஷன் தேவனை இதன்மூலம் அறியவரும் பாதையாகவும் இருக்கின்றது, மற்றும் இது மனுஷனுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. தேவனின் கிரியை பற்றிய அறிவுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மக்கள் தேவன் மீதான நம்பிக்கை பற்றிய கோட்பாடுகளுக்கே கவனம் செலுத்துகின்றார்கள், அல்லது அற்பமான முக்கியமில்லாத விவரங்களைக் கவனிக்கிறார்கள், பின்பு அவர்கள் தேவனை அறியாதிருப்பார்கள், மேலும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்க மாட்டார்கள். தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவுக்கு மிகவும் உதவக்கூடிய தேவனுடைய கிரியையே தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் தரிசனங்கள் தேவனுடைய கிரியையாக, தேவனுடைய சித்தமாக மற்றும் தேவனுடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன; இவை அனைத்தும் மனுஷனுக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. நடைமுறை என்பது மனுஷனால் செய்யப்பட வேண்டியதைக் குறிக்கிறது, அதாவது தேவனைப் பின்பற்றும் சிருஷ்டிகளால் செய்யப்பட வேண்டியவை, மற்றும் இது மனுஷனின் கடமையாகவும் இருக்கின்றது. மனுஷன் என்ன செய்யவேண்டியவனாக இருக்கிறான் என்பது தொடக்கத்திலிருந்தே மனுஷனால் புரிந்துகொள்ளப்படுகிற ஒன்றாக இருக்கவில்லை, ஆனால் தேவன் தமது கிரியையின்போது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றவைகளாக இருக்கின்றது. தேவன் கிரியை செய்கையில், கேட்டுக்கொள்கின்ற யாவும் படிப்படியாக மிகவும் ஆழமாகவும் உயர்ந்ததாகவும் ஆகின்றன. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தின்போது, மனுஷன் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தது, மற்றும் கிருபையின் யுகத்தின்போது, மனுஷன் சிலுவையைச் சுமக்க வேண்டியதாயிருந்தது. ராஜ்யத்தின் யுகம் மாறுபட்டதாக இருக்கின்றது: மனிதன் செய்யும்படிக் கேட்டுக்கொள்ளப்படுபவைகள் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றில் இருந்தவைகளைவிட உயர்வானவைகளாய் இருக்கின்றன. தரிசனங்கள் இன்னும் அதிகமாக உயர்த்தப்படும்போது, மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை இன்னும் உயருகின்றன, மற்றும் மிகவும் தெளிவாகவும் இன்னும் அதிகம் உண்மையாகவும் ஆகின்றன. அதேபோல், தரிசனங்களும் அதிகம் உண்மையாகின்றன. இத்தனை அதிக உண்மையான தரிசனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் மனுஷனுக்கு உகந்தவைகளாக இருப்பது மட்டுமின்றி, இன்னும் அதிகமாக, தேவனைப்பற்றிய அவனது அறிவுக்கும் உகந்தவையாக இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க