தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 146

மார்ச் 3, 2023

தேவனின் கிரியையை அறிவது எளிதான காரியம் அல்ல. நீ உன் பின்தொடர்தலில் தரங்களையும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும், மெய்யான வழியை எவ்வாறு தேடுவது, அது மெய்யான வழியா இல்லையா என்பதை எவ்வாறு அளவிடுவது, இது தேவனின் கிரியையா இல்லையா என்பதை எல்லாம் நீ அறிந்து கொள்ள வேண்டும். மெய்யான வழியைத் தேடுவதில் மிக அடிப்படையான கொள்கை எது? பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த வழியில் இருக்கிறதா இல்லையா என்பதையும், இந்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடாக இருக்கின்றனவா, யார் சாட்சி கொடுக்கக்கூடும், அது உனக்கு என்ன கொண்டு வரக்கூடும் என்பதையும் நீ பார்க்க வேண்டும். மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்கு அடிப்படை அறிவைத்தரும் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் மிகவும் அடிப்படையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறுவதாகும். தேவன் மீதான ஜனங்களுடைய விசுவாசத்தின் சாராம்சமானது தேவனுடைய ஆவியானவரின் மீதான விசுவாசமாகும், ஏனென்றால் மாம்சமான தேவனில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசமும் கூட, தேவனுடைய ஆவியானவரின் உருவகமாக இந்த மாம்சத்தில் இருக்கிறது, அதாவது அத்தகைய விசுவாசம் இன்னும் ஆவியானவர் மீதான விசுவாசமாக இருக்கிறது. ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் இந்த மாம்சம் ஆவியானவரிலிருந்து வந்தது, மேலும் வார்த்தை மாம்சமாகி விட்டதால், மனிதனது விசுவாசத்தில் தேவனின் உள்ளார்ந்த சாராம்சம் இன்னும்கூட இருக்கிறது. எனவே, இது மெய்யான வழியா இல்லையா என்பதை வேறுபடுத்துவதில், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும், அதன் பிறகு இந்த வழியில் சத்தியம் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். சத்தியமானது இயல்பான மனிதத்தன்மையின் ஜீவ மனநிலையாக இருக்கிறது, அதாவது, தேவன் ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டித்தபோது அவனுக்குத் தேவைப்பட்டது முழு மனிதத்தன்மை, அதாவது, மனித உணர்வு, நுண்ணறிவு, ஞானம் மற்றும் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை அறிவு ஆகியவை ஆகும். அதாவது, இந்த வழி ஜனங்களை இயல்பான மனிதத்தன்மையுள்ள ஜீவிதத்திற்கு வழிநடத்திச் செல்லுமா இல்லையா என்பதையும் பேசப்படும் சத்தியம் இயல்பான மனிதத்தன்மையின் யதார்த்தத்திற்கு ஏற்ப தேவைப்படுகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும், இந்த சத்தியம் நடைமுறையானதாகவும் உண்மையாகவும் இருக்கிறதா இல்லையா, இது மிகவும் சரியான நேரமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். அங்கு சத்தியம் இருந்தால், அது ஜனங்களை இயல்பான மற்றும் உண்மையான அனுபவங்களுக்கு வழிநடத்திச் செல்ல முடியும்; மேலும், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், அவர்களின் மனித உணர்வு இன்னும் முழுமையானதாகிறது, மாம்சத்தில் அவர்களின் ஜீவிதம் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு இன்னும் ஒழுங்காக மாறுகிறது, மேலும் அவர்களின் உணர்வுகள் இன்னும் இயல்பாக மாறுகின்றன. இதுதான் இரண்டாவது கொள்கை. வேறு ஒரு கொள்கையும் உள்ளது, அதாவது ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு அதிகரித்து வருகிறதா இல்லையா, அத்தகைய கிரியையையும் சத்தியத்தையும் அனுபவிப்பது அவர்களுக்கு தேவன் மீதான அன்பைத் தூண்டி அவர்களை தேவனுடன் எப்போதும் நெருங்கி வரச்செய்யுமா இல்லையா என்பதாகும். இதில் இந்த வழி மெய்யான வழியா இல்லையா என்பதை அளவிட முடியும். இந்த வழி இயற்கைக்கு அப்பாற்பட்டு யதார்த்தமானதா, மனிதனின் ஜீவிதத்திற்கானதை வழங்க முடியுமா இல்லையா என்பது மிகவும் அடிப்படையானது. இது இந்த கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறது என்றால், இந்த வழியே மெய்யான வழி என்ற முடிவுக்கு வரலாம். உங்கள் எதிர்கால அனுபவங்களில் மாற்றுவழிகளை ஏற்றுக்கொள்ளும்படி இந்த வார்த்தைகள் உங்களை உருவாக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் மற்றொரு புதிய காலத்தின் கிரியை அங்கு இருக்கும் என்ற முன்னறிவித்தல் இல்லை என்றும் நான் சொல்கிறேன். இன்றைய வழி மெய்யான வழி என்று நீங்கள் உறுதியாக இருக்கும்படி நான் அவற்றைச் சொல்கிறேன், இதனால் நீங்கள் இன்றைய கிரியையின் மீதான உங்கள் விசுவாசத்தில் அரைகுறை உறுதியாக இருக்கமாட்டீர்கள், அதைப் பற்றிய நுண்ணறிவையும் பெற மாட்டீர்கள். உறுதியாக இருக்கிற போதிலும், இன்னும் குழப்பத்தில் பின்பற்றுகிறவர்கள் அநேகர் உள்ளனர்; அத்தகைய உறுதிப்பாட்டிற்கு எந்தக் கொள்கையும் இல்லை, அத்தகைய மனிதர்கள் விரைவிலேயே புறம்பாக்கப்பட வேண்டும். தாங்கள் பின்பற்றுவதில் மிகவும் தீவிரமாக இருப்பவர்களும்கூட மூன்று பாகங்கள் உறுதியாகவும் ஐந்து பாகங்கள் உறுதியற்றும் இருக்கிறார்கள், இது அவர்களிடம் அஸ்திபாரமில்லை என்பதைக் காட்டுகிறது. உங்கள் திறமை மிகவும் மோசமாகவும், உங்கள் அஸ்திபாரம் மிகவும் ஆழமற்றும் இருப்பதால், உங்களுக்கு வேறுபாடு குறித்த புரிதல் இல்லை. தேவன் தமது கிரியையை மீண்டும் செய்வதில்லை, யதார்த்தமில்லாத கிரியையையும் அவர் செய்வதில்லை, அவர் மனிதனிடம் அளவுக்கதிகமான கோரிக்கைகளை வைப்பதில்லை, மனிதனின் உணர்வுக்கு அப்பாற்பட்ட கிரியையை அவர் செய்வதில்லை. அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும் மனிதனின் இயல்பான உணர்வின் எல்லைக்குள் உள்ளன, இயல்பான மனிதத்தன்மையின் உணர்வை மீறுவதில்லை, மேலும் அவரது கிரியை மனிதனின் இயல்பான தேவைகளுக்கு ஏற்பச் செய்யப்படுகிறது. இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், மேலும் அவர்களின் மனிதத்தன்மையானது இன்னும் இயல்பாகிறது. ஜனங்கள் தங்கள் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை மற்றும் மனிதனின் சாராம்சத்தைப் பற்றிய அதிகமான அறிவைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் சத்தியத்திற்காக இன்னும் பெரிய ஏக்கத்தைப் பெறுகிறார்கள். அதாவது, மனிதனின் ஜீவன் வளர்ந்துகொண்டே இருக்கிறது, மேலும் மனிதனின் சீர்கெட்ட மனநிலை அதிகமதிகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக மாறுகிறது—இவை அனைத்தும் தேவன் மனிதனின் ஜீவனாக மாறுவதன் அர்த்தமாகும். மனிதனின் சாராம்சமான காரியங்களை வெளிப்படுத்த ஒரு வழியும் இல்லாதிருந்தால், மனிதனின் மனநிலையை மாற்றவும் இயலாது, மேலும், ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வருவதற்கோ அல்லது தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை அவர்களுக்கு கொடுக்கவோ இயலாது, மற்றும் அவர்களின் மனிதத்தன்மையானது கீழ்த்தரமானதாகவும், அவர்களின் உணர்வு இன்னும் அசாதாரணமாகவும் மாற காரணமாகிறது, அப்படியானால் இந்த வழி மெய்யான வழியாக இருக்கக்கூடாது, இது ஒரு பொல்லாத ஆவியின் வேலையாக அல்லது பழைய வழியாக இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால், இது பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையாக இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளில் நீங்கள் தேவனை விசுவாசத்திருக்கிறீர்கள், ஆனால் மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கோ அல்லது மெய்யான வழியைத் தேடுவதற்கோ உங்களுக்கு எந்தக் கொள்கைகளின் அறிகுறியும் இல்லை. பெரும்பாலான ஜனங்கள் இந்தக் காரியங்களில் ஆர்வமாகக் கூட இல்லை; அவர்கள் வெறுமனே பெரும்பான்மையானவர்கள் செல்லும் இடத்திற்குச் சென்று, பெரும்பான்மையானவர்கள் சொல்வதை திரும்பச் சொல்கிறார்கள். மெய்யான வழியை நாடுகிற ஒருவராக எப்படி இருக்க முடியும்? அத்தகையவர்களால் மெய்யான வழியை எவ்வாறு கண்டு பிடிக்கக்கூடும்? இந்த முக்கிய கொள்கைகள் பலவற்றை நீங்கள் புரிந்து கொண்டால், பிறகு என்ன நடந்தாலும், நீங்கள் வஞ்சிக்கப்பட மாட்டீர்கள். இன்று, ஜனங்களால் வித்தியாசங்களை உருவாக்க முடியும் என்பது முக்கியமானதாக உள்ளது; இதனைத்தான் இயல்பான மனிதத்தன்மையால் பெறமுடியும், இதனைத்தான் ஜனங்கள் தங்கள் அனுபவத்தில் பெறமுடியும். இன்றும் கூட, ஜனங்கள் பின்பற்றும் செயல்பாட்டில் எதையும் வித்தியாசம் பார்க்காதிருந்தால், அவர்களின் மனித அறிவு இன்னும் வளர்ச்சியடையாதிருந்தால், ஜனங்கள் மிகவும் புத்தியில்லாதவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்களின் பின்தொடர்தல் பிழையாகவும் வழிவிலகியதாகவும் இருக்கிறது. இன்று உன் பின்தொடர்தலில் சிறிதளவும் வேறுபாடு இல்லை, அது உண்மையாக இருக்கும் போது, நீ சொல்வது போல், நீ மெய்யான வழியைக் கண்டுபிடித்து, நீ அதை அடைந்திருக்கிறாயா? உன்னால் எதையும் வித்தியாசப்படுத்தி அறிய முடியுமா? மெய்யான வழியின் சாராம்சம் என்ன? உண்மையான வழியில், நீ மெய்யான வழியை அடையவில்லை; நீ சத்தியத்திற்குரிய எதையும் பெறவில்லை. அதாவது, தேவன் உன்னிடம் எதிர்பார்ப்பதை நீ அடையவில்லை, இதனால் உன்னுடைய சீர்கேட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீ தொடர்ந்து இந்த வழியில் பின்தொடர்ந்தால், நீ இறுதியில் புறம்பாக்கப்படுவாய். இன்றுவரை பின்பற்றி, நீ தேர்ந்தெடுத்த வழி சரியான வழி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், மேலும் எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. பல சிறிய காரியங்கள் காரணமாக அநேகர் எப்போதும் உறுதியற்றவர்களாகி, மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வதை நிறுத்துகிறார்கள். அத்தகையவர்கள் தேவனின் கிரியையை பற்றி அறியாதவர்கள்; அவர்கள் குழப்பத்தில் தேவனைப் பின்பற்றுபவர்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்கள் அவருக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது அவருக்கு சாட்சி கொடுப்பவர்களாகவோ இருக்க இயலாது. ஆசீர்வாதங்களை மட்டுமே நாடும் மற்றும் சத்தியத்தைப் பின்தொடர்வதற்கு கூடுமானமட்டும் தெளிவற்றதை மற்றும் விளக்கமற்றதை மட்டுமே பின்தொடர்பவர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன், இதனால் அவர்களின் வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்கும். இனி உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க