தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 145

மார்ச் 3, 2023

நீ எவ்வாறு பின்தொடர்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் இன்று செய்யும் கிரியையை நீ புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த கிரியையின் முக்கியத்துவத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும். கடைசி நாட்களில் தேவன் வரும்போது என்ன கிரியையைக் கொண்டு வருகிறார், அவர் என்ன மனநிலையைக் கொண்டு வருகிறார், மனிதனில் முழுமையாக்கப்படுவதற்கு என்ன செய்யப்படும் என்பதை நீ புரிந்து அறிந்துகொள்ள வேண்டும். அவர் மாம்சத்தில் செய்ய வந்த கிரியையை நீ அறியாது அல்லது புரிந்துகொள்ளாதிருந்தால், உன்னால் அவருடைய சித்தத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும், மேலும் அவருக்கு நெருக்கமானவனாக எவ்வாறு உன்னால் இருக்க முடியும்? உண்மையில், தேவனுடன் நெருக்கமாக இருப்பது சிக்கலானது அல்ல, ஆனால் அது எளிதானதும் அல்ல. ஜனங்கள் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்க முடிந்தால், பிறகு அது சிக்கலற்றதாகிவிடுகிறது; ஜனங்களால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அது மிகவும் கடினமாகிவிடுகிறது, மேலும், அவர்களின் பின்தொடர்தல் அவர்களைத் தெளிவற்ற நிலைக்கு வழிநடத்தும் வாய்ப்புள்ளது. தேவனைப் பின்தொடர்வதில், ஜனங்கள் தங்களின் சொந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் எந்த சத்தியத்தைப் பற்றியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால், பிறகு அவர்களுக்கு அடித்தளம் இல்லை என்பதே இதன் பொருள், எனவே அவர்களால் உறுதியாக நிற்பது கடினம். இன்று, சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத, நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாத அல்லது எதை நேசிக்க அல்லது வெறுக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அநேகர் இங்கு உள்ளனர். அத்தகையவர்களால் உறுதியாக நிற்க முடியாது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது, தேவனின் சித்தத்திற்காக அக்கறை கொள்வது, தேவன் மாம்சத்தில் வரும்பொழுது அவரின் கிரியையை அறிந்து கொள்வது மற்றும் அவரால் சொல்லப்படும் கொள்கைகள் போன்றவை தேவன் மீதான விசுவாசத்தின் திறவுகோலாக இருக்க முடியும். திரளான ஜனங்களைப் பின்பற்ற வேண்டாம். நீங்கள் அதற்குள் நுழைய உங்களிடம் கொள்கைகள் இருக்க வேண்டும், மேலும் அவற்றை நீங்கள் பற்றியிருக்க வேண்டும். தேவனின் அறிவொளியால் கொண்டு வரப்பட்டு உனக்குள் உறுதியாக உள்ள இந்தக் காரியங்கள் உனக்கு உதவியாக இருக்கும். நீ அவ்வாறு செய்யாவிட்டால், இன்று நீ ஒரு மாற்றுவழியைக் காண்பாய், நாளை நீ மற்றொரு மாற்றுவழியைக் காண்பாய், நீ ஒருபோதும் உண்மையான எதையும் பெற மாட்டாய். இப்படி இருப்பது உன்சொந்த ஜீவனுக்கு ஒரு பயனும் இல்லை. சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று ஜனங்கள் சொன்னால், நீயும்கூட இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறுகிறாய்; இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று ஜனங்கள் சொன்னால், நீயும் கூட சந்தேகப்படுகிறாய், அல்லது அது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று நீயும் சொல்கிறாய். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைக் கிளிபோல் திரும்பச் சொல்கிறீர்கள், எதையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்கவும் இயலவில்லை, உங்களுக்காக உங்களால் சுயமாக சிந்திக்கவும் முடியவில்லை. ஒரு நிலைப்பாடில்லாத, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அத்தகைய நபர் ஒன்றுக்கும் உதவாத ஒரு சிறுமைப்பட்டவர்! நீ எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைத் திருப்பிக் கூறுகிறாய்: இன்று இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறப்படுகிறது, ஆனால் ஒரு நாள் யாராவது ஒருவர் இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்ல என்று சொல்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது, அது உண்மையில் மனிதனின் செயல்களைத் தவிர வேறொன்றுமில்லை—ஆனாலும் உன்னால் இதை உணர இயலாது, மற்றவர்களால் சொல்லப்படுவதை நீ காணும்போது, நீயும் அதையே சொல்கிறாய். இது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, ஆனால் நீ இது மனிதனின் வேலை என்று கூறுகிறாய்; பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு எதிராகத் தூஷிக்கிறவர்களில் ஒருவனாக நீ மாறவில்லையா? இதில், நீங்கள் வேறுபடுத்த முடியாததால் தேவனை எதிர்க்கவில்லையா? அநேகமாய் "இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை" என்று சொல்கிற சில முட்டாள்கள் ஒரு நாள் தோன்றுவார்கள், இந்த வார்த்தைகளை நீ கேட்கும் பொழுது நீ நஷ்டப்பட்டு இருப்பாய், மீண்டும் நீ மற்றவர்களின் வார்த்தைகளால் கட்டப்படுவாய். ஒவ்வொரு முறையும் யாராவது தொந்தரவைத் தூண்டும்போது, உன் ஸ்தானத்தில் உன்னால் நிற்க இயலாது, மேலும் இதற்கெல்லாம் காரணம் நீ சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். தேவனில் விசுவாசம் கொள்வதும், தேவனை அறிய முற்படுவதும் எளிதான காரியம் அல்ல. இந்தக் காரியங்களை வெறுமனே ஒன்றுகூடி, பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் அடைய முடியாது, மேலும் பேரார்வத்தினால் மட்டுமே உங்களால் பரிபூரணமடைய முடியாது. நீ அனுபவிக்க வேண்டும், அறிய வேண்டும், உன் செயல்கள் கொள்கைப்படி இருக்க வேண்டும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற வேண்டும். நீ அனுபவங்களைக் கடந்துபோகும் பொழுது, உன்னால் அநேகக் காரியங்களை அறிந்துகொள்ள முடியும்—நன்மை மற்றும் தீமைக்கு இடையிலான வித்தியாசத்தையும், நீதி மற்றும் துன்மார்க்கத்திற்கு இடையிலான வித்தியாசத்தையும், மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் மற்றும் சத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தையும் உன்னால் அறிய முடியும். இந்த சகல காரியங்களையும் உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியும், அவ்வாறு செய்யும்போது, சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நீ ஒருபோதும் இழப்பை அடைய மாட்டாய். இது மட்டுமே உன்னுடைய உண்மையான வளர்ச்சியாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க