Christian Testimony | தேவனின் அதிகாரத்தையும் ஜீவிதத்தில் ராஜ்யபாரத்தையும் அறிவது (Tamil Subtitles)

டிசம்பர் 21, 2020

இதில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஒரு காய்கறி விவசாயி, தனது தக்காளி செடிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றுநோய்கு தீர்வுகாண தனது பல ஆண்டுகால அனுபவத்தை நம்பி பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கிறார், ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை. பின்னர் ஜெபிப்பதன் மூலமும் தேடுவதன் மூலமும் எல்லாமே தேவனின் ஆட்சிக்குக் கீழ்தான் இருக்கின்றன என்பதை தேவனின் வார்த்தைகளின் மூலம் புரிந்துகொள்கிறார். அவர் கீழ்ப்படிந்து நிலைமையை உணரும்போது, ஏராளமான சிலந்திகள் வயலில் திடீரென தோன்றி, ஒரு சில நாட்களில் அவரது தக்காளி செடிகளில் உள்ள பூச்சிகள் அனைத்தையும் சாப்பிடுகின்றன. அவர் தேவனின் அதிகாரத்தை நடைமுறைக்குரிய ஒரு வழியில் பார்க்கிறார், தேவன் மீது அவருடைய விசுவாசம் வளர்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு, டயமண்ட்பேக் அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்கள் அவரது முளைக்கீரை வயலில் தோன்றும் போது அவர் அந்தப் பிரச்சானையை எவ்வாறு கடக்கிறார்? அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது தேவனின் அதிகாரத்தை பற்றியும் ராஜ்யபாரத்தை பற்றியும் அவர் எந்த வகையான உண்மையான புரிதலைப் பெறுகிறார்? தேவனின் அதிகாரத்தையும் ஜீவிதத்தில் ராஜ்யபாரத்தையும் அறிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க