தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 156

ஏப்ரல் 24, 2022

மனிதனுடைய ஆர்வத்தை பூர்த்தி செய்ய சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரை, அறிவியலை ஆராய்ந்து மர்மங்களை ஆராய மனிதனுடைய விருப்பத்தைப் பயன்படுத்துகிறது. விஞ்ஞானத்தின் பெயரில், மனிதனுடைய பொருள் தேவைகளையும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான மனிதனுடைய கோரிக்கையையும் சாத்தான் பூர்த்தி செய்கிறது. இவ்வாறு, இந்தச் சாக்குப்போக்குடன் தான் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு அறிவியலைப் பயன்படுத்தி சாத்தான் மனிதனுடைய சிந்தனையை மட்டும் கெடுக்கிறதா அல்லது மனிதனுடைய மனதையும் கெடுக்கிறதா? நம் சூழலில் உள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களில் நாம் காணக்கூடிய மற்றும் நாம் தொடர்பு கொள்ளும் விஞ்ஞானத்துடன், சாத்தான் வேறு எதைக் கெடுக்கிறது? (இயற்கையான சுற்றுச்சூழல்.) சரியானது. இதன் மூலம் நீங்கள் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளீர்கள் என்றும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. மேலும், மனிதனை ஏமாற்ற விஞ்ஞானத்தின் பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகளைச் சாத்தான் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தேவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கைச் சூழலை விரும்பத்தகாத அழிவு மற்றும் சுரண்டலுக்கு உட்படுத்தும் ஒரு வழியாகவும் சாத்தான் அறிவியலைப் பயன்படுத்துகிறது. மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொண்டால், மனிதனுடைய வாழ்க்கைச் சூழலும் வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து மேம்படும் என்ற சாக்குப்போக்கின் கீழ் இதைச் செய்கிறது. மேலும் விஞ்ஞான வளர்ச்சியின் நோக்கம் அதிகரித்து வரும் ஜனங்களுடைய அன்றாட பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமாகும். இது சாத்தானுடைய அறிவியல் வளர்ச்சியின் தத்துவார்த்த அடிப்படையாகும். இருப்பினும், அறிவியல் மனிதகுலத்திற்கு எதைக் கொண்டு வந்துள்ளது? நமது வாழ்க்கைச் சூழல் மற்றும் எல்லா மனிதர்களுடைய வாழும் சூழல் மாசுபடுத்தப்படவில்லையா? மனிதன் சுவாசிக்கும் காற்று மாசுபடுத்தப்படவில்லையா? நாம் குடிக்கும் நீர் மாசுபடுத்தப்படவில்லையா? நாம் உட்கொள்ளும் உணவு இன்னும் இயற்கையானதாக இருக்கிறதா? பெரும்பாலான தானியங்களும் காய்கறிகளும் மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை ரசாயன உரத்தைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன மற்றும் சில விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வகைகளாக இருக்கின்றன. நாம் உண்ணும் காய்கறிகளும் பழங்களும் கூட இனி இயற்கையானவை அல்ல. இயற்கையான முட்டைகளைக் கூட இனி காண்பது எளிதானது அல்ல. சாத்தானுடைய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றால் ஏற்கனவே செயலாக்கப்பட்ட நிலையில், முட்டைகள் இனி முன்பு இருந்தது போல இனி சுவைக்காது. விரிவாகப் பார்த்தால், முழு வளிமண்டலமும் அழிக்கப்பட்டு மாசுபட்டுள்ளது. மலைகள், ஏரிகள், காடுகள், ஆறுகள், பெருங்கடல்கள் மற்றும் தரைக்கு மேலேயும் கீழேயும் உள்ள அனைத்தும் அறிவியல் சாதனைகள் என்று அழைக்கப்படுபவையால் அழிக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், முழு இயற்கைச் சூழலும், தேவனால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட வாழ்க்கைச் சூழலும் அறிவியல் என்று அழைக்கப்படும் ஒன்றால் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. தாங்கள் தேடும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் தங்கள் ஆசைகள் மற்றும் மாம்சம் இரண்டையும் திருப்திப்படுத்தும் தாங்கள் எப்போதும் எதிர்பார்த்ததைப் பலர் பெற்றுக்கொண்டாலும், மனிதன் வாழும் சுற்றுச்சூழலலானது விஞ்ஞானத்தின் வெவ்வேறு சாதனைகளால் அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு வருகிறது. இப்போதும், சுத்தமான காற்றின் ஒரு சுவாசத்தை சுவாசிக்க இனி நமக்கு உரிமை இல்லை. இது மனிதகுலத்தின் துக்கம் அல்லவா? மனிதன் இத்தகைய இடத்தில் ஜீவிக்க வேண்டியிருக்கும் போது, பேசுவதற்கு ஏதேனும் மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கிறதா? மனிதன் வாழும் இந்த இடமும் வாழ்க்கைச் சூழலும் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்காக தேவனால் உருவாக்கப்பட்டன. ஜனங்கள் குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, ஜனங்கள் உண்ணும் பல்வேறு வகையான உணவுகள், அத்தோடுகூட தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள், மலைகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்கள்—இந்த வாழ்க்கைச் சூழலின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு தேவனால் வழங்கப்பட்டது. இது இயற்கையானதாகும். தேவன் விதித்த இயற்கை விதிப்படி செயல்படுகிறது. விஞ்ஞானம் இல்லாதிருந்தால், ஜனங்கள் தேவனால் தங்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளையே இன்னும் பின்பற்றியிருந்திருப்பார்கள், அவர்களால் ஆதியிலுள்ள, இயற்கையான அனைத்தையும் அனுபவித்திருக்க முடியும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆயினும், இப்போது இவை அனைத்தும் சாத்தானால் அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டு விட்டன. மனிதனுடைய அடிப்படையான வாழ்விடம் இனி ஆதியிலுள்ளது போல் இருப்பதில்லை. ஆனால் இது எதனால் ஏற்பட்டது அல்லது இது எப்படி ஏற்பட்டது என்பதை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. மேலும் பலர் அறிவியலை அணுகி சாத்தானால் தங்களுக்குள் உட்புகுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் அதைப் புரிந்து கொள்கிறார்கள். இது முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் பரிதாபகரமானது அல்லவா? சாத்தான் இப்போது ஜனங்கள் இருக்கும் இடத்தையும், அவர்களுடைய வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்கொண்டு, அவர்களை இந்த நிலைக்குக் கெடுத்து, மனிதகுலம் தொடர்ந்து இவ்வாறு வளர்ச்சியடைந்து வருவதால், இந்த ஜனங்களை அழிக்க தேவனுக்கு தனிப்பட்ட முறையில் காரணம் இருக்கிறதா? ஜனங்கள் தொடர்ந்து இவ்வாறு வளர்ந்தால், அவர்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பார்கள்? (அவர்கள் அழிக்கப்படுவார்கள்.) அவர்கள் எவ்வாறு அழிக்கப்படுவார்கள்? புகழ் மற்றும் ஆதாயத்திற்கான ஜனங்களுடைய பேராசையான தேடல் தவிர, அவர்கள் தொடர்ந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய்ச்சியில் ஆழமாக மூழ்கி, பின்னர் தங்களது சொந்தப் பொருள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இடைவிடாமல் செயல்படுகின்றனர், இதனால் மனிதனுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்ன? முதலாவதாக, சுற்றுச்சூழல் சமநிலை உடைந்து, இது நிகழும்போது, ஜனங்களுடைய சரீரங்கள், அவற்றின் உள் உறுப்புகள், இந்த சமநிலையற்ற சூழலால் கறைபட்டு சேதமடைகின்றன. மேலும், பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் வாதைகள் உலகம் முழுவதும் பரவுகின்றன. இது இப்போது மனிதனுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத சூழ்நிலையாக உள்ளது என்பது உண்மையல்லவா? இப்போது இது உங்களுக்குப் புரிகிறது. மனிதகுலம் தேவனைப் பின்பற்றாமல், எப்போதும் சாத்தானை இவ்வாறு பின்பற்றி தொடர்ந்து தங்களை வளப்படுத்த அறிவைப் பயன்படுத்தினால், மனித ஜீவிதத்தின் எதிர்காலத்தை இடைவிடாமல் ஆராய விஞ்ஞானத்தைப் பயன்படுத்தினால், தொடர்ந்து ஜீவிப்பதற்கு இந்த மாதிரியான முறையைப் பயன்படுத்தினால், இது மனிதகுலத்திற்கு எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை நீங்கள் அடையாளம் காண முடியுமா? மனிதகுலம் இயற்கையாகவே அழிந்துவிடும்: படிப்படியாக, மனிதகுலம் அழிவை நோக்கி முன்னேறுகிறது, தங்களது சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது! இது தங்களின் மீது தாங்களே அழிவைக் கொண்டுவருவதில்லையா? மேலும் இது அறிவியல் முன்னேற்றத்தின் விளைவு அல்லவா? விஞ்ஞானம் என்பது மனிதனுக்காக சாத்தான் தயார் செய்த ஒரு வகையான மாய விஷம் என்று இப்போது தோன்றுகிறது. எனவே நீங்கள் விஷயங்களை ஒரு பனி மூட்டத்தில் காண முயற்சிக்கும்போது, நீங்கள் எவ்வளவு கடினமாகப் பார்த்தாலும், விஷயங்களை தெளிவாகக் காண முடியாது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. எவ்வாறாயினும், சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரைப் பயன்படுத்தி உன் பசியைத் தூண்டி உன்னைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு அடியாக படுகுழியை மற்றும் மரணத்தை நோக்கி உன்னை வழிநடத்துகிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க