தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 136

ஜூன் 6, 2022

தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய விரும்பும் ஒருவருக்கான சரியான மனப்பான்மை மற்றும் பயிற்சி

தேவனுடைய அதிகாரம் மற்றும் மனித விதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தின் உண்மை ஆகியவற்றை மனிதன் இப்போது எந்த மனப்பான்மையுடன் அறிந்து கொள்ள மற்றும் கருத வேண்டும்? இது ஒவ்வொரு நபருக்கும் முன்னால் நிற்கும் ஒரு உண்மையான பிரச்சனை. அன்றாட ஜீவித சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய ராஜரீகத்தையும் நீ எவ்வாறு அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்? இந்த சிக்கல்களை நீ எதிர்கொள்ளும் போது, அவற்றைப் புரிந்துகொள்வது, கையாள்வது மற்றும் அனுபவிப்பது எப்படி என்று தெரியாத போது, தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்கு நீ கீழ்ப்படிவதற்கான உன் நோக்கத்தை, விருப்பத்தை மற்றும் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை நிரூபிக்க நீ என்ன மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும்? முதலில் நீ காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நீ தேட கற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின் நீ கீழ்ப்படிய கற்றுக் கொள்ள வேண்டும். "காத்திருத்தல்" என்பது தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருத்தல், அவர் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களுக்காகக் காத்திருத்தல், அவருடைய விருப்பம் படிப்படியாக உனக்கு வெளிப்படும்வரை காத்திருத்தல் என்பதாகும். "தேடுவது" என்பது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர் வகுத்துள்ள விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் உனக்காக தேவனுடைய சிந்தனை மிகுந்த நோக்கங்களைக் கவனித்து புரிந்து கொள்வது, அவற்றின் மூலம் சத்தியத்தைப் புரிந்து கொள்வது, மனிதர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகளையும் புரிந்து கொள்வது, தேவன் மனிதர்களில் எத்தகைய முடிவுகளை அடைய மற்றும் அவர்களில் எத்தகைய சாதனைகளை அடைய எண்ணுகிறார் என்பதையும் புரிந்து கொள்வதாகும். "கீழ்ப்படிதல்" என்பது, தேவன் திட்டமிட்டுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை ஏற்றுக் கொள்வது, அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் அதன் மூலம், சிருஷ்டிகர் மனிதனின் தலைவிதியை எவ்வாறு ஆணையிடுகிறார், அவர் தன் ஜீவினைக் கொண்டு மனிதனுக்கு எவ்வாறு வழங்குகிறார், அவர் மனிதனுக்குள் எவ்வாறு சத்தியத்தைச் செயல்படுத்துகிறார் ஆகியவற்றை அறிந்து கொள்வதைக் குறிக்கிறது. தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் ராஜரீகத்தின்கீழ் உள்ள அனைத்தும் இயற்கையான விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. மேலும், உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கட்டளையிட தேவனை அனுமதிக்க நீ தீர்மானித்தால், நீ காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், நீ தேட கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நீ கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிய விரும்பும் ஒவ்வொரு நபரும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை இதுதான், தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணம் இதுதான். அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்க, அத்தகைய குணத்தைக் கொண்டிருக்க, நீ கடினமாக உழைக்கவேண்டும். உண்மையான யதார்த்தத்திற்குள் நீ நுழைவதற்கு ஒரே வழி இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க