தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 121

செப்டம்பர் 18, 2020

மனிதகுலத்தின் விதியும் பிரபஞ்சத்தின் விதியும் சிருஷ்டிகருடைய சர்வ ஆளுகையிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்

நீங்கள் அனைவரும் பெரியவர்கள். உங்களில் சிலர் நடுத்தர வயதுடையவர்கள்; சிலர் முதுமை அடைந்துள்ளீகள். நீங்கள் தேவனை விசுவாசியாத காலத்திலிருந்து அவரை விசுவாசிக்கும் வரையிலும், தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் வரையிலும், அவருடைய கிரியை அனுபவிக்கும் வரையிலும், சென்றிருக்கிறீர்கள். தேவனுடைய சர்வவல்லமையைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது? மனித விதியைப் பற்றி எத்தகு நுண்ணறிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள்? ஜீவிதத்தில் தான் விரும்பும் அனைத்தையும் ஒருவர் அடையமுடியுமா? நீங்கள் இருந்த சில தசாப்தங்களில் எத்தனை விஷயங்களை நீங்கள் விரும்பிய வழியில் சாதிக்க முடிந்தது? நீங்கள் எதிர்பார்க்காத எத்தனை விஷயங்கள் நடந்துள்ளன? எத்தனை விஷயங்கள் இனிய ஆச்சரியங்களாக வருகின்றன? பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜனங்கள் இன்னும் எத்தனை விஷயங்களுக்காக காத்திருக்கிறார்கள்—இன்னது என்று அறியாமலேயே சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்கள், பரலோகத்தின் சித்தத்திற்காக காத்திருக்கிறார்களா? எத்தனை விஷயங்கள் ஜனங்களை உதவியற்றவர்களாகவும், தடுக்கப்பட்டவர்களாகவும் உணரவைக்கின்றன? ஒவ்வொருவரும் தங்களது தலைவிதியைப் பற்றிய நம்பிக்கைகளால் நிறைந்தவர்கள். தங்களின் ஜீவிதத்தில் அனைத்துமே அவர்கள் விரும்பியபடி போகும் என்றும், உணவு அல்லது ஆடைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், அவர்களுடைய செல்வம் பிரமிக்கதக்கதாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஏழ்மை மற்றும் நலிந்த, கஷ்டங்கள் நிறைந்த மற்றும் பேரழிவுகளால் சூழப்பட்ட ஒரு ஜீவிதத்தை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விஷயங்களை ஜனங்கள் முன்கூட்டியே பார்க்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. எனினும் சிலருக்கு, கடந்த காலம் என்பது அனுபவங்களின் தடுமாற்றமாக மட்டுமே உள்ளது; பரலோகத்தின் சித்தம் என்ன என்பதை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை, அது என்னவென்றும் அவர்கள் கவலைப்படுவதில்லை. மிருகங்களைப் போலவே, நாள்தோறும் அவர்கள் சிந்தனையின்றி தங்களின் ஜீவிதத்தை ஜீவிக்கிறார்கள், மனிதகுலத்தின் தலைவிதியைப் பற்றியோ மனிதர்கள் ஏன் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது அவர்கள்எப்படி ஜீவிக்க வேண்டும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அத்தகையவர்கள் மனிதவிதியைப் பற்றிய புரிதலை ஆதாயம் செய்யாமல் முதுமையை அடைகிறார்கள். அவர்கள் இறக்கும் தருணம்வரை அவர்களுக்கு ஜீவிதம் என்னவென்று தெரிவதில்லை. அத்தகையவர்கள் மரித்தவர்கள்; அவர்கள் ஆவி இல்லாத மனிதர்கள்; அவர்கள் மிருகங்கள். ஜனங்கள் சிருஷ்டிப்புகளின் நடுவே ஜீவித்து, உலகம் தங்களது பொருட்தேவைகளைப் பூர்த்திசெய்யும் பல வழிகளில் இருந்து இன்பத்தைப் பெற்றாலும், இந்தப் பொருள் உலகம் தொடர்ந்து முன்னேறுவதை அவர்கள் பார்த்தாலும், அவர்களுடைய சொந்த அனுபவங்களுக்கு (அவர்களுடைய இதயங்களும் ஆவிகளும் உணரும் மற்றும் அனுபவிக்கும் அனுபவங்கள்) பொருள் விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை, மேலும், பொருள் எதுவும் அனுபவத்திற்கு ஈடாக இருக்க இயலாது. அனுபவம் என்பது ஒருவருடைய இருதயத்தில் இருக்கும் ஆழமான புரிதலாகும். இது மனித கண்ணால் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்தப் புரிதலானது மனிதனின் ஜீவிதம் மற்றும் மனித விதியை ஒருவர் புரிந்துகொள்வதிலும், ஒருவர் காணும் முறையிலும் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஒரு எஜமானர் அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறார், மனிதனுக்காக அனைத்தையும் திட்டமிடுகிறார் என்ற புரிதலுக்கு பெரும்பாலும் இது வழிவகுக்கிறது. இத்தனைக்கும் மத்தியில், தலைவிதியின் ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; சிருஷ்டிகர் வகுத்துள்ள முன்னோக்கி செல்லும் பாதையை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஒருவருடைய தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது மறுக்கமுடியாத உண்மை. தலைவிதியைப் பற்றி ஒருவர் எத்தகு நுண்ணறிவு மற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்தாலும், இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்கு செல்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள், யாரை அல்லது எதனைச் சந்திப்பீர்கள், நீங்கள் என்ன சொல்வீர்கள், உங்களுக்கு என்ன நடக்கும் என இவற்றில் எதையேனும் கணிக்கமுடியுமா? இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஜனங்கள் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது, இந்த சூழ்நிலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கட்டுப்படுத்துவதும் முடியாத ஒன்றாகும். ஜீவிதத்தில், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் நடக்கும்; அவை அன்றாட நிகழ்வுகளாகும். இந்தத் தினசரி விசித்திரங்களும், அவை வெளிப்படும் விதங்களும் அல்லது அவை பின்பற்றும் முறைகளும், சீரற்ற முறையில் எதுவும் நடக்காது, ஒவ்வொரு நிகழ்வின் நடைமுறையும், ஒவ்வொரு நிகழ்வின் விரும்பத்தகாத தன்மையும் மனிதவிருப்பத்தால் மாற்ற முடியாது என்பதை மனிதகுலத்திற்கு தொடர்ந்து நினைவூட்டுகின்றன. ஒவ்வொரு நிகழ்வும் சிருஷ்டிகரிடமிருந்து மனிதகுலத்திற்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. மேலும் மனிதர்களால் தங்களது சொந்தத் தலைவிதிகளை கட்டுப்படுத்த முடியாது என்ற செய்தியையும் இது அனுப்புகிறது. மனிதகுலத்தின் முரட்டாட்டமான, பயனற்ற லட்சியத்துக்கும் மற்றும் தன் தலைவிதியை தனது கைகளில் எடுத்துக் கொள்ளும் விருப்பத்திற்கும் இந்த ஒவ்வொரு நிகழ்வும் மறுப்பு தெரிவிக்கிறது. இறுதியில், தங்களது தலைவிதியை நிர்வகிக்கிறவர் மற்றும் கட்டுப்படுத்துகிறவர் யார் என்று மீண்டும் மனதில்கொள்ள ஜனங்களை அவை கட்டாயப்படுத்தும் பொருட்டு மனிதகுலத்தின் முகத்தில் மீண்டும் மீண்டும் அறையப்படும் அடிகள் போன்றதாகும். அவர்களுடைய லட்சியங்களும் ஆசைகளும் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டு, சிதைந்துபோவதால், தலைவிதியானது தன்னிடம் வைத்திருக்கும் யதார்த்தத்தை, பரலோகத்தின் சித்தம் மற்றும் சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை மனிதர்கள் இயல்பாகவே அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அன்றாட விசித்திரங்கள் முதல் அனைத்து மனித ஜீவன்களின் தலைவிதிகள் வரை என சிருஷ்டிகருடைய திட்டங்களையும் அவருடைய சர்வவல்லமையையும் வெளிப்படுத்தாத எதுவும் இல்லை; "சிருஷ்டிகருடைய அதிகாரத்தை மீற முடியாது" என்ற செய்தியை அனுப்பாத எதுவும் இல்லை; "சிருஷ்டிகருடைய அதிகாரம் மிக உயர்ந்தது" என்ற இந்த நித்திய சத்தியத்தையும் தெரிவிக்காத எதுவும் இல்லை.

மனிதகுலத்தின் மற்றும் பிரபஞ்சத்தின் தலைவிதிகள் சிருஷ்டிகருடைய சர்வவல்லமையுடன் நெருக்கமாக இணைந்திருக்கின்றன. அவை சிருஷ்டிகருடைய திட்டங்களுடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளன; இறுதியில், அவை சிருஷ்டிகருடைய அதிகாரத்திலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. எல்லாவற்றின் விதிகளிலும், சிருஷ்டிகருடைய திட்டங்களையும் அவருடைய சர்வவல்லமையையும் மனிதன் புரிந்துகொள்கிறான்; அனைத்தும் பிழைப்பதற்கான விதிகளிலும், சிருஷ்டிகருடைய ஆட்சியை மனிதன் உணர்கிறான்; அனைத்தின் தலைவிதிகளிலும், சிருஷ்டிகர் தனது சர்வவல்லமையையும் அவற்றின் மீதான கட்டுப்பாட்டையும் கையாளுகிற வழிகளையும் மனிதன் யூகிக்கிறான்; மேலும், சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும், பூமிக்குரிய விதிகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்களையும், எல்லா வல்லமைகளையும், ஆற்றல்களையும் எவ்வாறு மீறுகின்றன என்பதை மனிதன் காண்பதற்காக, மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரிங்களின் ஜீவிதச் சுழற்சிகளிலும், மனிதனானவன் உண்மையிலேயே சிருஷ்டிகருடைய திட்டங்களையும், அனைத்து பொருட்களுக்கும் உயிரினங்களுக்குமான ஏற்பாடுகளையும் அனுபவிக்கிறான். இந்நிலையில், சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை எந்தவொரு படைப்பாலும் மீறமுடியாது என்பதையும், சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளையும் விஷயங்களையும் எந்த சக்தியும் கைப்பற்றவோ மாற்றவோ முடியாது என்பதையும் மனிதகுலம் அறிந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. இந்த தெய்வீக விதிகள் மற்றும் ஆளுகைகளின் கீழ்தான் மனிதர்களும் மற்ற அனைத்து ஜீவன்களும் தலைமுறை தலைமுறையாக ஜீவிக்கிறார்கள், விருத்தியடைகிறார்கள். இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் உண்மையான வெளிப்பாடு அல்லவா? மெய்யான சட்டங்களின் வாயிலாக, சிருஷ்டிகருடைய சர்வவல்லமையும், எல்லா நிகழ்வுகளுக்கும் பொருளுக்குமான அவருடைய நியமனத்தையும் மனிதர்கள் பார்த்திருந்தாலும், பிரபஞ்சத்தின் மீதான சிருஷ்டிகருடைய சர்வவல்லமையின் கொள்கையை எத்தனை மனிதர்களால் புரிந்துகொள்ள முடிகிறது? எத்தனைபேர் உண்மையிலேயே தங்களது சொந்தத் தலைவிதியின் மீதான சிருஷ்டிகருடைய சர்வவல்லமையையும் ஏற்பாட்டையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், தங்களைச் சமர்ப்பிக்கவும் முடிகிறது? எல்லாவற்றின் மீதான சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை மெய்யாக விசுவாசித்து, சிருஷ்டிகர் மனிதர்களின் ஜீவிதத்தின் தலைவிதியைக் கட்டளையிடுகிறார் என்பதை உண்மையாக யார் விசுவாசிப்பார், அங்கீகரிப்பார்? மனிதனின் தலைவிதி சிருஷ்டிகருடைய உள்ளங்கையில் உள்ளது என்ற உண்மையை யார் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்? சிருஷ்டிகர் மனிதகுலத்தின் தலைவிதியை நிர்வகிக்கிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார் என்ற சத்தியத்தை எதிர்கொள்ளும்போது சிருஷ்டிகருடைய சர்வவல்லமை குறித்து மனிதகுலம் என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்? இதுதான் இந்த உண்மையை இப்போது எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முடிவு ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க