தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 120

செப்டம்பர் 18, 2020

மேலோட்டமான மற்றும் நுட்பமான கண்ணோட்டங்களின் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுதல்

தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது. இது தேவனுடைய அடையாளத்தைப் பற்றிய குணத்தின் வெளிப்பாடும் விஷேசித்த சாராம்சமும் ஆகும். இது சிருஷ்டிக்கப்பட்ட அல்லது சிருஷ்டிக்கப்படாத எந்தவொரு ஜீவனும் பெறாத ஒன்றாகும். சிருஷ்டிகர் ஒருவரே இந்த வகையான அதிகாரத்தைப் பெற்றுள்ளார். அதாவது, தனித்துவமான தேவனாகிய சிருஷ்டிகர் ஒருவரே இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார். மேலும் அவரிடம் மட்டுமே இந்த சாராம்சம் உள்ளது. இந்நிலையில், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? மனிதன் தன் மனதில் கருதும் "அதிகாரம்" என்பதிலிருந்து தேவனுடைய அதிகாரம் எவ்வாறு வேறுபடுகிறது? இதன் விஷேசம் என்ன? குறிப்பாக இதைப் பற்றி இங்கே பேசுவது ஏன் முக்கியமானது? நீங்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். பெரும்பாலான ஜனங்களுக்கு, "தேவனுடைய அதிகாரம்" என்பது ஒரு தெளிவற்ற கருத்தாக உள்ளது. இதனைப் புரிந்துக் கொள்ள அவர்களுக்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு, இதனைப் பற்றிய எந்தவொரு விவாதமும் சுருக்கமானதாகவே இருக்கும். ஆகையால், மனிதன் தன் திறனுக்கேற்ப பெற்றுக்கொண்ட தேவனுடைய அதிகாரம் பற்றிய அறிவிற்கும், தேவனுடைய அதிகாரத்தின் சாராம்சதிற்கும் இடையே நிச்சயமாக ஒரு இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க, ஜனங்கள், நிகழ்வுகள், விஷயங்கள் மூலமாகவும் மற்றும் தங்கள் நிஜ வாழ்வில் அவர்களுடைய எல்லைக்குள்ளாக மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்குள்ளாக இருக்கும் பல்வேறு சம்பவங்கள் மூலமாகவும் தேவனுடைய அதிகாரத்தை அனைவரும் படிப்படியாக அறிந்துக்கொள்ள வேண்டும். "தேவனுடைய அதிகாரம்" என்ற சொற்றொடர் புரிந்துக்கொள்ள முடியாததாகத் தோன்றினாலும், தேவனுடைய அதிகாரம் சுருக்கமானது அல்ல. மனிதனுடைய ஜீவிதத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவர் மனிதனுடன் இருக்கிறார், ஒவ்வொருநாளும் அவனை வழிநடத்துகிறார். எனவே, நிஜ வாழ்வில், ஒவ்வொரு மனிதரும் தேவனுடைய அதிகாரத்தின் மிக உறுதியான அம்சத்தை நிச்சயமாகவே பார்த்து அனுபவிப்பார்கள். தேவனுடைய அதிகாரம் மெய்யாகவே உள்ளது என்பதற்கு இந்த உறுதியான அம்சம் போதுமான சான்றாகும். மேலும் தேவன் அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்ற சத்தியத்தை ஒருவர் அறிந்துக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் இது முழுமையாக உதவுகிறது.

தேவன் அனைத்தையும் சிருஷ்டித்தார், அதனை சிருஷ்டித்ததனால், அவருக்கு எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் இருக்கிறது. அவருக்கு எல்லாவற்றின்மீதும் ஆதிக்கம் இருப்பதுடன், அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகிறார். "தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்" என்ற கருத்தின் பொருள் என்ன? அதை எவ்வாறு விளக்க முடியும்? நிஜ வாழ்விற்கு இது எவ்வாறு பொருந்தும்? தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்ற சத்தியத்தைப் புரிந்துக்கொள்வது என்பது, அவருடைய அதிகாரத்தைப் புரிந்துக்கொள்ள எவ்வாறு வழிவகுக்கும்? "தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்" என்ற சொற்றொடரிலிருந்து, தேவன் கட்டுப்படுத்துவது கோள்களின் ஒரு பகுதியையோ, சிருஷ்டிப்ன் ஒரு பகுதியையோ அல்லது மனிதகுலத்தின் ஒரு பகுதியையோ அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். மாறாக பிரமாண்டமான பொருட்கள் முதல் நுண்ணிய பொருட்கள் வரை, காணக்கூடியது முதல் காணமுடியாதது வரை, பிரபஞ்சத்தின் நட்சத்திரங்கள் முதல் பூமியில் உள்ள உயிரினங்கள் வரை, அத்துடன் மனித கண்ணால் காணமுடியாத நுண்ணுயிரிகளும் பிறவடிவங்களில் இருக்கும் உயிரினங்கள் வரை அவர் அனைத்தையுமே கட்டுப்படுத்துகிறார். தேவன் "அனைத்தையும்" "கட்டுப்பாட்டில்" வைத்துள்ளார் என்பதற்கு இதுதான் மிகச் சரியான விளக்கமாகும். இது அவருடைய அதிகாரத்தின் வரம்பும், அவருடைய ஆளுகை மற்றும் ஆட்சியின் எல்லையும் ஆகும்.

இந்த மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னதாகவே இந்த பிரபஞ்சம் (வானத்தில் உள்ள அனைத்து கோள்கள் மற்றும் அனைத்து நட்சத்திரங்கள்) இருந்தது. அந்த பிரமாண்டமான சூழலில், எத்தனை ஆண்டுகள் சென்றிருந்தாலும், வானத்திலுள்ள இந்த கோள்களும் நட்சத்திரங்களும் தாங்கள் இருக்க வேண்டுமென்பதற்காக தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன. எந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த கோள் எங்கு செல்கிறது; எந்த கோள் என்ன பணியைச் செய்கிறது, எப்போது எந்தகோள் எந்த சுற்றுப்பாதையில் சுழல்கிறது, மேலும் அது மறைவதும் அல்லது மாற்றப்படுவதும் என இவை அனைத்தும் சிறிதும் பிழையின்றி தொடர்கின்றன. கோள்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தூரங்கள் அனைத்தும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன, இவை அனைத்தும் துல்லியமான தரவுகளால் விவரிக்கப்படலாம். அவை பயணிக்கும் பாதைகள், அவற்றின் சுற்றுப்பாதைகளின் வேகம் மற்றும் வடிவங்கள், மேலும் அவை பல்வேறு இடங்களில் நிலைகொண்டிருக்கும் நேரங்கள் என இவை அனைத்தும் துல்லியமாக அளவிடப்பட்டு விஷேசித்த விதிகளால் விவரிக்கப்படலாம். பல யுகங்களாக சிறிதளவுகூட விலகல் இல்லாமல், கோள்கள் இந்த விதிகளைப் பின்பற்றியுள்ளன. எந்தவொரு வல்லமையாலும் அவற்றின் சுற்றுப்பாதைகளை அல்லது அவை பின்பற்றும் வழிமுறைகளை மாற்றவோ, சீர்குலைக்கவோ முடியாது. அவற்றின் இயக்கத்தை நிர்வகிக்கும் விஷேசித்த விதிகளும் அவற்றை விவரிக்கும் துல்லியமான தரவுகளும் சிருஷ்டிகருடைய அதிகாரத்தால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்பதால், அவை சிருஷ்டிகருடைய சர்வவல்லமை மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் தங்களது சொந்த விருப்பப்படி இந்தவிதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. அந்த பிரமாண்டமான சூழலில், சில வழிமுறைகளையும், சில தரவுகளையும், சில விசித்திரமான மற்றும் விவரிக்க முடியாத விதிகள் அல்லது நிகழ்வுகளையும், மனிதன் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. தேவன் இருக்கிறார் என்பதை மனிதகுலம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சிருஷ்டிகர் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சிருஷ்டிகருடைய அதிகாரம் இருப்பதை அங்கீகரிக்கவில்லை என்றாலும், மனித விஞ்ஞானிகளும், வானியலாளர்களும், இயற்பியலாளர்களும், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள அனைத்தையும், அத்துடன் அவை இயங்குவதற்கு ஆணையிடும் அனைத்து கொள்கைகளைளையும் வழிமுறைகளையும் ஒரு பரந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத இருண்ட ஆற்றல் நிர்வகித்துக் கட்டுப்படுத்துகின்றது என்பதையும் மட்டுமே மேலும் மேலும் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த உண்மையானது, அந்த இயக்கமுறைகளுக்கு மத்தியில் ஒரு வல்லமை வாய்ந்தவர் இருப்பதையும், அவர் அனைத்தையும் திட்டமிட்டு இயக்குகிறார் என்பதையும் மனிதன் எதிர்க்கொண்டு ஒப்புக்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது. அவருடைய வல்லமை அசாதாரணமானது. அவருடைய மெய்யான முகத்தை யாராலும் பார்க்க முடியாது என்றாலும், அவர் ஒவ்வொரு நொடியிலும் அனைத்தையும் நிர்வகித்துக் கட்டுப்படுத்துகிறார். எந்தவொரு மனிதனும் அல்லது வல்லமையும் அவருடைய சர்வவல்லமை மிஞ்ச முடியாது. இந்த உண்மையைக் கேட்பதன் மூலம், எல்லாவற்றின் இருப்பையும் நிர்வகிக்கும் விதிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும், யாராலும் மாற்ற முடியாது என்பதையும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்; இந்த விதிகளை மனிதர்களால் முழுமையாகப் புரிந்துக்கொள்ள முடியாது என்பதையும், அவை இயற்கையாகவே நிகழ்கின்றன என்பதையும், ஆனால் அவை ஒரு சர்வவல்லவரால் கட்டளையிடப்படுகின்றன என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் தேவனுடைய அதிகாரத்தின் வெளிப்பாடுகள் என்று ஒரு பிரமாண்டமான சூழலில் மனிதகுலத்தால் உணர முடியும்.

நுண்ணிய அளவில், பூமியில் மனிதன் காணக் கூடிய அனைத்து மலைகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள் மற்றும் நிலப்பரப்புகளும், அவன் அனுபவிக்கும் அனைத்து பருவங்களும், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் தேவனுடைய சர்வவல்லமை மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். தேவனுடைய சர்வவல்லமை மற்றும் கட்டுப்பாட்டின்கீழ், அனைத்துமே அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப உருவாகின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. அவற்றின் இருப்பை நிர்வகிக்கும் விதிகள் எழுகின்றன. மேலும் அவை விதிகளுடனேயேவளர்ந்து பெருகுகின்றன. எந்தவொரு மனிதனும் அல்லது விஷயமும் இந்த விதிகளுக்கு மேற்படவில்லை. இது ஏன்? ஒரே பதில் இதுதான்: இதற்குகாரணம் தேவனுடைய அதிகாரமாகும். அல்லது, இதை வேறு விதமாகக் கூறினால், இதற்குகாரணம் தேவனுடைய எண்ணங்களும், அவருடைய வார்த்தைகளும், அவருடைய தனிப்பட்ட செயல்களுமாகும். இதன் பொருள் என்னவென்றால் தேவனுடைய அதிகாரமும் தேவனுடைய எண்ணமும் தான் இந்த விதிகளுக்கு வழிவகுக்கின்றன. அவை அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப மாறுகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் அவரது திட்டத்தின் நிமித்தம் நிகழ்கின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. உதாரணமாக, தொற்றுநோய்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவை எச்சரிக்கையின்றி வருகின்றன. அவற்றின் தோற்றமோ அவை ஏன் நிகழ்கின்றன என்பதற்கான சரியான காரணங்களோ யாருக்கும் தெரிவதில்லை. மேலும் ஒரு தொற்றுநோய் ஒருகுறிப்பிட்ட இடத்தை அடையும்போதெல்லாம், அங்குள்ளவர்கள் பேரழிவிலிருந்து தப்பமுடியாது. தீய அல்லது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் பரவலால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை மனித அறிவியல் புரிந்துகொள்கிறது. அவற்றின் வேகம், பரவும் தூரம் மற்றும் பரவும் முறை ஆகியவற்றை மனித அறிவியலால் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஜனங்கள் தொற்றுநோய்களை ஒவ்வொரு வழியிலும் எதிர்க்கிறார்கள் என்றாலும், தொற்றுநோய்கள் வரும் போது, மனிதர்கள் அல்லது விலங்குகள் தவிர்க்க முடியாமல் பாதிப்படைகின்றன என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மனிதர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்ப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் எடுக்கும் முயற்சி மட்டுமே ஆகும். ஆனால் எந்தவொரு தனிப்பட்ட தொற்றுநோயின் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கும் மூலக்காரணங்கள் யாருக்கும் தெரிவதில்லை, அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு தொற்றுநோயின் எழுச்சி மற்றும் பரவலை எதிர்க்கொள்ள, மனிதர்கள் எடுக்கும் முதல் நடவடிக்கை ஒரு தடுப்பூசியை உருவாக்குவதே ஆகும். ஆனால் தடுப்பூசி தயாராகும் முன்பே தொற்றுநோய் தானாகவே மறைந்துவிடுகிறது. தொற்றுநோய்கள் ஏன் மறைகின்றன? கிருமிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் பருவங்களின் மாற்றத்தால் மறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்... இந்த கண்மூடித்தனமான யூகங்கள் நியாயமானவையா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, விஞ்ஞானம் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது. துல்லியமான பதிலையும்கொடுக்க முடியாது. மனிதகுலம் இந்த யூகங்களை மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் தொற்றுநோய்களைப் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் பயத்தையும் கணக்கிடவேண்டும். இறுதி ஆய்வில், தொற்றுநோய்கள் ஏன் தொடங்குகின்றன அல்லது அவை ஏன் முடிவடைகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் மனிதகுலத்திற்கு அறிவியலில் மட்டுமே நம்பிக்கை உள்ளது, அதை முழுவதுமாக நம்பியுள்ளது. மேலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை அல்லது அவருடைய சர்வவல்லமையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் அவர்கள் ஒருபோதும் ஒரு பதிலையும் பெறமாட்டார்கள்.

தேவனுடைய சர்வவல்லமையின்கீழ், அவருடைய அதிகாரம் மற்றும் அவரது கட்டுப்பாட்டின் காரணமாக அனைத்துமே பெருகுகின்றன, இருக்கின்றன, மேலும் அழிந்துபோகின்றன. சில விஷயங்கள் வந்து பின்அமைதியாக செல்கின்றன, அவை எங்கிருந்து வந்தன என்பதை மனிதனால் சொல்லவோ அல்லது அவை பின்பற்றும் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவோ முடியாது. அவை ஏன் வந்துசெல்கின்றன என்பதற்கான காரணங்களையும் புரிந்துக்கொள்ள இயலாது. கடந்து செல்வதற்காக வரும் அனைத்தையும் மனிதன் தன் கண்களால் பார்க்க முடிந்தாலும், காதுகளால் கேட்க முடிந்தாலும், அதை அவன் உடலால் அனுபவிக்க முடிந்தாலும்; இவை அனைத்தும் மனிதனின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பல்வேறு நிகழ்வுகளின் ஒப்பீட்டளவில் உள்ள அசாதாரணத்தன்மை, வழக்கமான தன்மை அல்லது விசித்திரத்தன்மை என இவற்றை மனிதன் ஆழ்மனதில் புரிந்துகொண்டாலும், அவற்றின் பின்னால் என்ன இருக்கிறது என்பது பற்றி அவனுக்கு இன்னும் எதுவும் தெரியாது. இது சிருஷ்டிகருடைய சித்தமும் எண்ணமும் ஆகும். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் பலகதைகள் உள்ளன, பல மறைக்கப்பட்ட உண்மைகள் உள்ளன. ஏனென்றால், சிருஷ்டிகருக்கு வெகுதூரத்தில் மனிதன் அலைந்து திரிவதாலும், சிருஷ்டிகருடைய அதிகாரம் அனைத்தையும் நிர்வகிக்கிறது என்ற சத்தியத்தை அவன் ஏற்றுக்கொள்ளாததாலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தின் சர்வவல்லமையின் கீழ்நடக்கும் அனைத்தையும் அவன் ஒருபோதும் அறிந்திருக்கவும் புரிந்துக்கொண்டிருக்கவும் மாட்டான். பெரும்பாலும், தேவனுடைய கட்டுப்பாடு மற்றும் சர்வவல்லமையானது மனித கற்பனை, மனித அறிவு, மனித புரிதல் மற்றும் மனித விஞ்ஞானம் என இவற்றின் எல்லைகளை மீறியதாக உள்ளது. இது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. சிலர், "தேவனுடைய சர்வவல்லமையை நீ கண்டதில்லை என்பதால், அனைத்துமே அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நீ எவ்வாறு விசுவாசிக்கலாம்?" என்று கூறுவர். பார்த்தல் என்பது எப்போதும் விசுவாசித்தல் ஆகாது, எப்போதும் அறிந்துகொள்ளுதல் என்றும், புரிந்துகொள்ளுதல் என்றும் ஆகாது. எனவே, விசுவாசம் எங்கிருந்து வருகிறது? "விசுவாசம் என்பது காரியங்களின் யதார்த்தம் மற்றும் மூலக்காரணங்களைப் பற்றி ஜனங்கள் கொண்டுள்ள எண்ணம் மற்றும் அனுபவத்தின் அளவீட்டிலிருந்தும் ஆழத்திலிருந்தும் வருகிறது" என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். தேவன் இருக்கிறார் என்று நீ விசுவாசித்தும், தேவனுடைய கட்டுப்பாட்டின் சத்தியத்தையும், எல்லாவற்றிலும் தேவனுடைய சர்வவல்லமையையும் நீ அடையாளம் காண முடியவில்லை என்றால், உணர முடியவில்லை என்றால், நீ தேவனுக்கு இந்த வகையான அதிகாரம் உண்டு என்பதையும் தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது என்பதையும் உன் இருதயத்தில் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாய். சிருஷ்டிகரை உன் கர்த்தர் என்றும் உன் தேவன் என்றும், உண்மையில் நீ ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாய்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க