தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 113

செப்டம்பர் 16, 2022

யோனா 3 யேகோவா இரண்டாவது முறையாக யோனாவிடம்: எழுந்திரு, மாநகரமான நினிவேக்குச் சென்று, நான் உனக்குச் சொல்லும் பிரசங்கத்தை அந்நகருக்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். ஆதலால், யோனா எழுந்து, யேகோவாவின் வார்த்தையின்படி நினிவேவுக்குச் சென்றான். அந்நகரின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும். நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா. ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள். அப்போது ஒரு வேளை நாம் அழிந்துபோகாதபடி, தேவன் மனம்வருந்தி, தம் கடுமையான கோபத்தைவிடுத்துத் திரும்பினாலும் திரும்புவார். தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.

நினிவே ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தில் இருந்த உண்மையான மனந்திரும்புதலை தேவன் பார்க்கிறார்

தேவனுடைய அறிவிப்பைக் கேட்டபின், நினிவேயின் ராஜாவும் அவரது குடிமக்களும் சில தொடர் செயல்களைச் செய்தனர். இந்தச் செயல்கள் மற்றும் அவர்கள் நடத்தையின் தன்மை என்ன? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் நடத்தையின் முழுமையான சாரம் என்ன? அவர்கள் செய்ததை அவர்கள் ஏன் செய்தார்கள்? அவர்கள் தேவனுடைய பார்வையில் உண்மையிலேயே மனந்திரும்பினார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனிடம் மனப்பூர்வமான மன்றாடுதல்களை ஏறெடுத்ததோடு, அவர்கள் முன் செய்த பாவங்களை அறிக்கையிட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் பொல்லாத நடத்தையைக் கைவிட்டார்கள். அவர்கள் இந்த வழியில் செயல்பட்டதின் காரணம் என்னவென்றால் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டபின், அவர்கள் நம்பமுடியாத அளவிற்குப் பயந்து, அவர் தாம் சொன்னபடியே செய்வார் என்று நம்பினார்கள். உபவாசத்தாலும், இரட்டை உடுத்திக்கொண்டும், சாம்பலில் உட்கார்ந்தும் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்திருத்துவதற்கான, துன்மார்க்கத்தைவிட்டு விலகுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த விரும்பினர். மேலும் யேகோவா தேவனிடம் அவர் தனது கோபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள ஜெபித்தனர், அவருடைய தீர்மானத்தையும், அவர்கள் மேல் வேகமாய் வந்து கொண்டிருக்கும் பேரழிவையும் அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மன்றாடினர். அவர்களின் நடத்தை அனைத்தையும் நாம் ஆராய்ந்தால், அவர்களுடைய முந்தைய பொல்லாத செயல்களை யேகோவா தேவனுக்கு அருவருப்பானவைகள் என்பதை அவர்கள் ஏற்கனவே புரிந்துகொண்டதைக் காணலாம். மேலும் அவர் விரைவில் அவர்களை அழிப்பதற்கான காரணத்தை, அவர்கள் புரிந்துகொண்டதையும்கூட நாம் காணலாம். இதனால்தான் அவர்கள் அனைவரும் முழுமையாக மனந்திரும்ப, தங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திரும்பி, தங்கள் கைகளிலுள்ள கொடுமையைக் கைவிட விரும்பினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யேகோவா தேவனின் அறிவிப்பை அவர்கள் அறிந்து கொண்டவுடன், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களில் பயத்தை உணர்ந்தனர்; அவர்கள் தங்கள் பொல்லாத நடத்தைகளை நிறுத்திவிட்டு, யேகோவா தேவன் மிகவும் வெறுக்கும் செயல்களைப் பின்பு செய்யாமல் விட்டனர். மேலும், அவர்களின் கடந்த கால பாவங்களை மன்னிக்கவும், கடந்த காலச் செயல்களுக்கு ஏற்ப அவர்களை நடத்த வேண்டாம் என்றும் அவர்கள் யேகோவா தேவனிடம் மன்றாடினார்கள். யேகோவா தேவனை மீண்டும் ஒருபோதும் கோபப்படுத்தாமல் இருக்கக் கூடுமென்றால், அவர்கள் மீண்டும் ஒருபோதும் துன்மார்க்கத்தில் ஈடுபடாதிருக்கவும், யேகோவா தேவனின் அறிவுறுத்தல்களின்படி செயல்படவும் தயாராக இருந்தனர். அவர்களின் மனந்திரும்புதல் நேர்மையானதாக மற்றும் முழுமையானதாக இருந்தது. அது அவர்களின் இருதயங்களுக்குள்ளிருந்து வந்தது. மேலும் பாசாங்கற்றதும் மற்றும் நிலையானதுமாக இருந்தது.

நினிவேயின் ஜனங்கள் அனைவரும், ராஜா முதல் சாமானியர்கள் வரை, யேகோவா தேவன் அவர்கள்மீது கோபமாய் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன், அவர்கள் ஒவ்வொருவருடைய அடுத்தடுத்த செயல்களையும், அவர்களின் நடத்தை முழுவதையும், அவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் தெரிவுகளையும் தேவன் தெளிவாகவும் வெளிப்படையாகவும் காண முடிந்தது. அவர்களின் நடத்தைக்கு ஏற்ப தேவனுடைய இருதயம் மாறியது. அந்த நேரத்தில் தேவனின் மனநிலை என்ன? உனக்காக அந்த கேள்விக்கு வேதாகமம் பதிலளிக்க முடியும். பின்வரும் வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன: "தேவன் அவர்கள் செய்ததைக் கண்டார், அவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகியதைக் கண்டார்; தேவன், தாம் அவர்களுக்குச் செய்வதாய்ச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்." தேவன் தனது மனதை மாற்றிக்கொண்டாலும், அவருடைய மனநிலையில் குழப்பம் எதுவும் இல்லை. அவர் தெளிவாக தனது கோபத்தை வெளிப்படுத்துவதில் இருந்து மாறி தனது கோபத்தை அமைதிப்படுத்தினார், பின்னர் நினிவே நகரத்தில் பேரழிவை ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். நினிவே ஜனங்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனுடைய முடிவு மிகத் துரிதமாய் இருந்த காரணம் என்னவென்றால், நினிவேயிலிருந்த ஒவ்வொருவரின் இருதயத்தையும் தேவன் கவனித்தார். அவர்கள் இருதயத்தின் ஆழத்தில் இருந்த அவர்களின் உண்மையான மனந்திரும்புதல் மற்றும் பாவ அறிக்கை, அவர்மீது அவர்கள் கொண்ட உள்ளார்ந்த நம்பிக்கை, அவர்களுடைய பொல்லாத செயல்கள் அவருடைய மனநிலையை எவ்வாறு கோபப்படுத்தின என்பதைப் பற்றிய ஆழமான உணர்வு, இதன் விளைவாக யேகோவா தேவனின் வரவிருக்கும் தண்டனையைப் பற்றிய பயம், ஆகியவற்றை அவர் கண்டார். அதே சமயம், யேகோவா தேவனும் இந்தப் பேரழிவைத் தவிர்க்கத்தக்கதாய், இனிமேல் தங்கள்மீது கோபப்பட வேண்டாம் என்று அவரிடம் மன்றாடின அவர்கள் இருதயங்களின் ஆழங்களிலிருந்து வந்த ஜெபங்களைக் கேட்டார். இந்த உண்மைகளைத் தேவன் உற்று நோக்கியபோது, அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. முன்பு அவருடைய கோபம் அவர்கள் மேல் எவ்வளவு பெரிதாய் இருந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தில் இருந்த உண்மையான மனந்திரும்புதலை அவர் பார்த்த போது, அவருடைய இருதயம் தொடப்பட்டது. மேலும் அவரால், அவர்கள் மேல் பேரழிவைக் கொண்டு வர இயலவில்லை, அவர்களிடத்தில் கோபமாய் இருப்பதை அவர் நிறுத்திக் கொண்டார். மாறாக அவர் தன்னுடைய இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கி, அவர்களைத் தொடர்ந்து வழிநடத்தவும் போஷிக்கவும் செய்தார்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க