தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 112

செப்டம்பர் 16, 2022

யேகோவா தேவனின் எச்சரிக்கை நினிவே ஜனங்களை அடைகிறது

யோனாவின் புத்தகம் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள இரண்டாம் பத்தியைக் கவனிப்போம்: "நகரத்தினுள் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் செய்து: இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று கூறினான் யோனா." நினிவே ஜனங்களிடம் சொல்லும்படி தேவன் நேரடியாக யோனாவிடம் சொன்ன வார்த்தைகள் இவை, ஆகவே, இவை நிச்சயமாக நினிவே ஜனங்களிடம் யேகோவா சொல்ல விரும்பிய வார்த்தைகளே ஆகும். ஜனங்களுடைய அக்கிரமம் தேவனுடைய சமுகத்தில் வந்து எட்டினதால், அவர் அந்நகரத்து ஜனங்களை அருவருக்கவும் வெறுக்கவும் தொடங்கி விட்டார் என்பதையும் அவர் அந்தப் பட்டணத்தை அழிக்க விரும்புகிறார் என்பதையும் இவ்வார்த்தைகள் ஜனங்களுக்குச் சொல்கின்றன. ஆயினும், தேவன் நகரத்தை அழிப்பதற்கு முன்பு, அவர் நினிவே ஜனங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டார், அதே நேரத்தில், அவர்களுடைய அக்கிரமத்தினின்று மனந்திரும்பவும், புதிதாகத் தொடங்கவும் அவர்களுக்கு ஒரு தருணத்தைக் கொடுத்தார். இந்தத் தருணம் நாற்பது நாட்கள் நீடிக்கும், அதற்கு மேல் நீடிக்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நகரத்திற்குள் இருந்தவர்கள் நாற்பது நாட்களுக்குள் மனந்திரும்பாமல், தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக மண்டியிடாமல் இருப்பார்களானால், தேவன் சோதோமை அழித்தபடியே நகரத்தை அழிப்பார். இதையே யேகோவா தேவன் நினிவேயின் ஜனங்களுக்குச் சொல்ல விரும்பினார். தெளிவாக, இது சாதாரணமான அறிவிப்பு அல்ல. இது யேகோவா தேவனின் கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், நினிவேயர்கள் மீதான அவருடைய மனப்பான்மையையும் வெளிப்படுத்தி, அதே நேரத்தில் நகரத்தில் வாழும் ஜனங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் செயல்படுகிறது. இந்த எச்சரிக்கை அவர்களுடைய பொல்லாத செயல்கள் யேகோவா தேவனின் வெறுப்பைப் பெற்றன என்றும் விரைவில் அவர்களைத் தங்களுடைய நிர்மூலமாக்கப்படுதலின் விளிம்பிற்குக் கொண்டு வரும் என்றும் சொன்னது. எனவே நினிவேயின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் உடனடி ஆபத்தில் இருந்தது.

யேகோவா தேவனின் எச்சரிக்கைக்கு நினிவேயும் சோதோமும் நடந்துகொண்ட விதத்துக்கு இடையேயான முழுமையான வேறுபாடு

கவிழ்க்கப்பட்டுப்போவது என்பதின் அர்த்தம் என்ன? பேச்சுவழக்கில், இனி இருக்கப் போவதில்லை என்று பொருள்படும். ஆனால் எந்த வழியில்? ஒரு முழு நகரத்தையும் யாரால் கவிழ்த்துப் போட முடியும்? நிச்சயமாக இதுபோன்ற செயலை மனிதனால் செய்ய இயலாது. நினிவே மக்கள் முட்டாள்கள் அல்ல; இந்தப் பிரகடனத்தைக் கேட்டவுடனேயே அவர்களுக்கு யோசனை வந்தது. இந்தப் பிரகடனம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், தேவன் தம்முடைய கிரியையைச் செய்யப் போகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், அவர்களுடைய துன்மார்க்கம் யேகோவா தேவனைக் கோபப்படுத்தியதையும், அவருடைய கோபத்தை அவர்கள் மேல் கொண்டு வந்ததையும், இதனால் அவர்கள் விரைவில் தங்கள் நகரத்துடனேகூட அழிக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். யேகோவா தேவனின் எச்சரிக்கையைக் கேட்டபின் நகர மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? ராஜா முதல் சாமானியர்கள் வரையிலான மக்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைக் குறித்து வேதாகமம் குறிப்பான விளக்கமளிக்கிறது. பின்வரும் வார்த்தைகள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன: "ஆதலால், நினிவேவின் ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர். நினிவேயின் ராஜாவுக்கு இந்தச் செய்தி எட்டியது, அவன் சிங்காசனத்திலிருந்து எழுந்து, தன் ராஜ அங்கியை அகற்றி விட்டு இரட்டுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான். மேலும் ராஜா மற்றும் அவனது பிரபுக்களின் ஆணையினால் அவர் அதை நினிவே முழுவதும் அறிவிக்கவும் வெளியிடவும் செய்து: மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. ஆனால் மனுஷன், மிருகம் என சகலமும் கோணியாடை உடுத்தி, தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்."

யேகோவா தேவனின் பிரகடனத்தைக் கேட்டபின், நினிவேயின் ஜனங்கள் சோதோம் மக்களின் மனப்பான்மைக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு மனப்பான்மையை வெளிப்படுத்தினர். சோதோமின் ஜனங்களோ தேவனை வெளிப்படையாக எதிர்த்து, பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறினர், இந்த வார்த்தைகளைக் கேட்ட நினிவே ஜனங்களோ காரியத்தைப் புறக்கணிக்கவில்லை, எதிர்க்கவுமில்லை. மாறாக, அவர்கள் தேவனை விசுவாசித்து உபவாசத்தை அறிவித்தனர். "விசுவாசித்து" என்ற சொல்லுக்கு இங்கே என்ன அர்த்தம்? இந்த வார்த்தையே விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் குறிக்கிறது. இந்த வார்த்தையை விளக்குவதற்கு நினிவே ஜனங்களின் உண்மையான நடத்தையை நாம் பயன்படுத்துவோமானால், அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள் என்றும், தான் சொன்னபடியே தேவனால் செய்ய முடியும் என்றும், செய்வார் என்றும் அவர்கள் நம்பினார்கள், அவர்கள் மனந்திரும்ப ஆயத்தமாக இருந்தார்கள் என்றும் அர்த்தப்படும். நினிவே ஜனங்கள் உடனடிப் பேரழிவை எதிர்கொள்ளும்போது பயத்தை உணர்ந்தார்களா? அவர்களின் விசுவாசமே அவர்களின் இருதயங்களில் பயத்தை ஏற்படுத்தியது. எனவே, நினிவேயர்களின் விசுவாசத்தையும் பயத்தையும் நிரூபிக்க நாம் எதைப் பயன்படுத்தலாம்? வேதம் சொல்லுகிறது: "… உபவாசம் இருக்கும்படி அறிக்கையிட்டனர், பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் இரட்டுடுத்திகொண்டனர்." அதாவது நினிவேயர்கள் உண்மையிலேயே விசுவாசித்தார்கள், இந்த விசுவாசத்திலிருந்து பயம் பிறந்து, பின்னர் அவர்கள் உபவாசிக்கவும் மற்றும் இரட்டுடுத்திக் கொள்ளவும் அவர்களை வழிநடத்தியது. இவ்வாறு தாங்கள் மனந்திரும்பத் தொடங்கியதை அவர்கள் காண்பித்தார்கள். சோதோமின் ஜனங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், நினிவே ஜனங்கள் தேவனை எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் நடத்தை மற்றும் செயல்களின் மூலம் தங்கள் மனந்திரும்புதலையும் தெளிவாகக் காண்பித்தனர். நிச்சயமாக, இது நினிவேயின் சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல, ராஜாவும்கூட விதிவிலக்கில்லாமல் செய்த காரியமாகும்.

நினிவே ராஜாவின் மனந்திரும்புதல் யேகோவா தேவனின் பாராட்டைப் பெற்றது

நினிவேயின் ராஜா இந்த செய்தியைக் கேட்டபோது அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். பின்னர் அவன், மனுஷரும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டை உடுத்திக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள் என்று அறிவித்தான். இந்த தொடர்ச்சியான செயல்களை ஆராயும்போது, நினிவேயின் ராஜா தனது இருதயத்தில் உண்மையான மனந்திரும்புதலைக் கொண்டிருந்தான் என்று அறியலாம். அவரது சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தனது ராஜாவின் உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்திருந்ததான அவர் எடுத்த இந்த தொடர் நடவடிக்கைகள், நினிவேயின் ராஜா தனது ராஜ அந்தஸ்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பொது ஜனங்களுடன் இணைந்து இரட்டை உடுத்தியிருந்ததை ஜனங்களுக்குக் கூறுகிறது. யேகோவா தேவனிடமிருந்து அறிவிப்பைக் கேட்டபின், நினிவேயின் ராஜா தனது பொல்லாத வழியையோ அல்லது தன் கைகளிலுள்ள கொடுமையையோ தொடர தனது ராஜ பதவியை வகிக்கவில்லை என்று சொல்லலாம்; மாறாக, அவன் கொண்டிருந்த அதிகாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, யேகோவா தேவனுக்கு முன்பாக மனந்திரும்பினான். இந்த கணத்தில் நினிவேயின் ராஜா ஒரு ராஜாவாக மனந்திரும்பவில்லை; அவன் மனந்திரும்பி, தனது பாவங்களை அறிக்கைச் செய்ய சாதாரண குடிமகனைப் போல தேவனுக்கு முன்பாக வந்திருந்தான். மேலும், முழு நகரத்தையும் மனந்திரும்பவும், தான் செய்ததைப் போலவே அவர்கள் பாவங்களை யேகோவா தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்யவும் சொன்னார்; மேலும், வேதவசனங்களில் காணப்படுவது போல், அதை எப்படிச் செய்வது என்பதற்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை அவர் கொண்டிருந்தார்: "மனுஷனோ மிருகமோ, ஆடு மாடுகளோ யாரும் எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. … தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டும், தம் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டும் திரும்பக்கடவர்கள்." நகரத்தின் அரசனாக, நினிவேயின் ராஜா மிக உயர்ந்த அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார், மேலும் அவர் விரும்பிய எதையும் அவரால் செய்ய முடியும். யேகோவா தேவனின் அறிவிப்பை அவர் எதிர்கொண்டபோது, அவர் இந்த விஷயத்தைப் புறக்கணித்திருக்கலாம் அல்லது மனந்திரும்பி, தனது பாவங்களை மட்டும் அறிக்கை செய்திருக்கலாம்; நகரத்தின் ஜனங்கள் மனந்திரும்ப முடிவு செய்தார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் இந்த விஷயத்தை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்க முடியும். இருப்பினும், நினிவேயின் ராஜா இதைச் செய்யவேயில்லை. அவர் தனது சிங்காசனத்திலிருந்து எழுந்து, இரட்டை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பி, யேகோவா தேவனுக்கு முன்பாக தனது பாவங்களை அறிக்கை பண்ணினது மட்டுமல்லாமல், நகரத்திலுள்ள எல்லா ஜனங்களையும் கால்நடைகளையும் அவ்வாறே செய்யும்படி கட்டளையிட்டார். "தேவனை நோக்கி சத்தமான குரலில் அழைக்கட்டும்." அவர் ஜனங்களுக்குக் கட்டளையிட்டார். இந்தத் தொடர்ச்சியான செயல்களின் மூலம், நினிவேயின் ராஜா ஓர் ஆட்சியாளர் செய்ய வேண்டியதை உண்மையிலேயே நிறைவேற்றினார். அவரது தொடர்ச்சியான செயல்கள் மனித வரலாற்றில் எந்தவொரு ராஜாவிற்கும் சாதிக்கக் கடினமாக இருந்த ஒன்றாகும், உண்மையில், வேறு எந்த ராஜாவும் இந்த விஷயங்களைச் சாதிக்கவில்லை. இந்தச் செயல்கள் மனித வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதவை என்று அழைக்கப்படலாம், மேலும் அவை மனிதகுலத்தால் நினைவுகூரப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் தகுதியானவைகளாகும். மனிதன் தோன்றியது முதல், ஒவ்வொரு ராஜாவும் தேவனை எதிர்க்கவும், விரோதிக்கவுமே தனது குடிமக்களை வழிநடத்தியிருந்தார்கள். தங்களின் துன்மார்க்கத்திற்கான மீட்பைத் தேடவும், யேகோவா தேவனின் மன்னிப்பைப் பெறவும், உடனடி தண்டனையைத் தவிர்க்கவும் தேவனிடத்தில் மன்றாடும்படி, ஒருவர் கூட தங்களின் குடிமக்களை வழிநடத்தவில்லை. இருந்தபோதிலும், நினிவேயின் ராஜா தனது குடிமக்களைத் தேவனிடம் திரும்பப் பண்ணவும், அவரவருடைய பொல்லாத வழிகளை விட்டுவிட்டு, தங்கள் கைகளிலிருந்து கொடுமையைக் கைவிடப்பண்ணவும் அவர்களை வழிநடத்த முடிந்தது. மேலும், அவர் தனது சிங்காசனத்தை ஒதுக்கி வைக்க முடிந்தது, அதற்குப் பதிலீடாக யேகோவா தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார், மனஸ்தாபப்பட்டார், அவருடைய உக்கிரக்கோபத்தைத் திரும்பப் பெற்றார், நகர மக்களை உயிர்வாழ அனுமதித்தார், அவர்களை அழிவிலிருந்து காத்தார். ராஜாவின் செயல்கள், மனித வரலாற்றில் ஓர் அரிய அதிசயம் என்றே கூறப்பட வேண்டும். மேலும் சீர்கேடான மனுக்குலம் மனந்திரும்பி, தங்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கைச் செய்கிறதற்கான ஒரு மாதிரி எடுத்துக்காட்டு என்று கூட சொல்லாம்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க