தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 106

ஆகஸ்ட் 9, 2022

ஆதி. 19:1-11 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

ஆதி. 19:24-25 அப்பொழுது யேகோவா, சோதோம் மீதும் கொமோராவின் மீதும் வானத்திலிருந்த யேகோவாவிடமிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியப்பண்ணி; அந்த நகரங்களையும், சகல சமவெளிகளையும், அந்நகரங்களின் சகல குடிகளையும், பூமியில் வளர்ந்தவற்றையும் அழித்துப்போட்டார்.

தேவனுக்கு விரோதமான சோதோமின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் விரோதப்போக்கிற்குப் பின்னர் தேவன் அதை முற்றிலும் அழிக்கிறார்

ஒரு மனிதக் கண்ணோட்டதிலிருந்து பார்க்கையில், சோதோம் பட்டணமானது மனிதனுடைய விருப்பத்தையும், மனிதனுடைய தீமையையும் முற்றிலும் திருப்திப்படுத்துகிற ஒரு பட்டணமாகும். இசையோடும் மற்றும் ஒவ்வொரு இரவிலும் நடனத்தோடும் நயங்காட்டி, மயக்குகிற அதன் செழிப்பு ஆண்களை மோகத்திற்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் தூண்டியது. அதனுடைய தீமை ஜனங்களுடைய இருதயத்தைச் சிதைத்து அவர்களை சீரழிவிற்குள் மயக்கியது. இந்தப் பட்டணம் அசுத்தமும் மற்றும் அசுத்த ஆவிகளாலும் கட்டுக்கடங்காமல் இருந்தது; இது பாவம் மற்றும் கொலை ஆகியவற்றால் சூழப்பட்டு மற்றும் அதன் காற்று இரத்தக்களரியாகவும் துர்நாற்றத்துடனும் தடிமனாக இருந்தது. இது ஜனங்களுடைய இரத்தத்தைக் குளிரச் செய்த ஒரு பட்டணம், இந்தப் பட்டணத்திலிருக்கிற ஒருவர் திகிலுடன் ஒடுங்குகிற ஒரு பட்டணம் இது. இந்தப் பட்டணத்திலிருக்கிற எந்தவொரு மனிதனோ அல்லது மனுஷியோ, இளைஞனோ அல்லது முதியோரோ—மெய் வழியைத் தேடவில்லை; ஒருவரும் வெளிச்சத்திற்காக வாஞ்சிக்கவில்லை அல்லது பாவத்தை விட்டு விலகி நடக்கும் ஏக்கம் கொள்ளவில்லை. அவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள்ளும், சாத்தானுடைய சீர்கேடு மற்றும் வஞ்சகத்தின் கீழேயும் வாழ்ந்தனர், அவர்கள் தங்கள் மனிதத்தன்மையை இழந்திருந்தார்கள், அவர்கள் தங்கள் உணர்வை இழந்திருந்தார்கள், மற்றும் அவர்கள் மனிதனுடைய உண்மையான இலக்கை இழந்திருந்தார்கள். அவர்கள் தேவனுக்கெதிராக எண்ணற்ற பொல்லாத கிரியைகளை செய்திருந்தார்கள்; அவர்கள் அவருடைய வழிநடத்துதலை மறுத்தார்கள் மற்றும் அவருடையச் சித்தத்தை எதிர்த்தார்கள். இந்த ஜனங்களையும், பட்டணத்தையும் மற்றும் அதிலுள்ள ஒவ்வொரு உயிரினங்களையும் அவர்களுடைய பொல்லாத கிரியைகளே அவர்களை அழிவின் பாதைக்குள் படிப்படியாகக் கொண்டுச் சென்றன.

இந்த இரு வசனப்பகுதிகளும் சோதோம் பட்டணத்துச் சீர்கேட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவில்லையென்றாலும், அவர்களுடைய பட்டணத்திற்குள் பிற்பாடு வந்த இந்த தேவனுடைய இரண்டு ஊழியர்களுடனான அவர்களுடைய நடத்தையைப் பதிவு செய்கிறது, சோதோம் ஜனங்கள் எந்த அளவிற்குச் சீர்கேடடைந்திருந்தார்கள், தீயவர்களாயிருந்தார்கள் மற்றும் தேவனை எதிர்த்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஓர் எளிய உண்மை ஒன்று உள்ளது. இதன் மூலம், அந்தப் பட்டணத்து ஜனங்களுடைய உண்மையான முகமும் சாராம்சமும் வெளிப்பட்டது. இந்த ஜனங்கள் தேவனுடைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததுமல்லாமல், அவருடைய தண்டனைக்கும் பயப்படவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் தேவனுடைய கோபத்தை இகழ்ந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக தேவனை எதிர்த்தனர். அவர் என்ன செய்தார் அல்லது அவர் எப்படிச் செய்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களுடைய பொல்லாத இயல்பு தீவிரமடைந்து, அவர்கள் தேவனை மீண்டும் மீண்டுமாக எதிர்த்தனர். சோதோமுடைய ஜனங்கள் தேவன் இருக்கிறார் என்பதற்கும், அவருடைய வருகைக்கும், அவருடைய தண்டனைக்கும், மற்றும் மற்ற பலவற்றிற்கும், அவருடைய எச்சரிக்கைகளுக்கும் விரோதமாக இருந்தனர். அவர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருந்தனர். அவர்கள் எவர்களை எல்லாம் பட்சிக்க முடியுமோ மற்றும் எவர்களுக்கெல்லாம் தீமை செய்ய முடியுமோ அந்த எல்லா ஜனங்களையும் பட்சித்து, தீமை செய்தனர், மேலும் அவர்கள் தேவனுடைய ஊழியர்களை வேறுவிதமாக நடத்தவில்லை. சோதோம் ஜனங்களால் செய்யப்பட்ட பொல்லாத செயல்களில், தேவனுடைய ஊழியர்களுக்குப் பொல்லாப்புச் செய்வது ஒரு பனிப்பாறையின் நுனியளவு மட்டுமேயாகும், மற்றும் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட அவர்களுடைய பொல்லாத இயல்பின் அளவானது உண்மையில் ஒரு பரந்த சமுத்திரத்தின் ஒரு துளிக்கு மேல் இல்லை. ஆகையால் தேவன் அக்கினியால் அவர்களை அழிக்க முடிவு செய்தார். தேவன் ஒரு ஜலப்பிரளயத்தைப் பயன்படுத்தவில்லை, பட்டணத்தை அழிக்க ஒரு சூறாவளி, பூகம்பம், சுனாமி அல்லது வேறு எந்த முறையையும் தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அக்கினியைப் பயன்படுத்தி இந்தப் பட்டணத்தை அழிப்பது எதைக் குறிக்கிறது? இது ஒட்டுமொத்தப் பட்டணத்தின் அழிவைப் பொருள்படுத்துகிறது; இந்தப் பட்டணம் பூமியின் மீதும் மற்றும் ஒரு பட்டணமாக இருப்பதிலிருந்தும் முற்றிலுமாக மறைந்துப்போனதைப் பொருள்படுத்துகிறது. இங்கே "அழிவு" என்பது பட்டணத்தின் வடிவம் மற்றும் அமைப்பு அல்லது வெளிப்புறத் தோற்றம் ஆகியவைகள் மறைந்துப்போவதை மட்டுமே குறிப்பிடுவதில்லை; அந்த பட்டணத்திலுள்ள ஆத்துமாக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால் அவைகள் இல்லாமல் போய்விட்டதை, முற்றிலும் அழிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. எளிமையாகக் கூறுவதென்றால் பட்டணத்துடன் தொடர்புடைய எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், மற்றும் காரியங்களும் அழிக்கப்பட்டன. அங்கே அடுத்த வாழ்க்கையோ அல்லது மறு ஜென்மமோ இருக்காது; தேவன் அவர்களை அவருடைய சிருஷ்டிப்பிலிருந்து மனிதகுலத்தை முழு நித்திய காலத்திற்கும் அழித்துப்போட்டார். அக்கினியைப் பயன்படுத்துவது இந்த இடத்தில் பாவத்தின் முடிவையும் மற்றும் பாவம் அங்கே கட்டுப்படுத்தப்பட்டதையும் குறிக்கிறது; இந்தப் பாவமானது இல்லாமல் போய், பரவுவது நிறுத்தப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், சாத்தானுடைய தீமையானது அதனை வளர்க்கும் மண்ணையும், அது தங்குவதற்கும், வாழ்வதற்கும் தரப்பட்ட கல்லறையையும் இழந்துவிட்டது. தேவனுக்கும் சாத்தானுக்குமிடையேயான யுத்தத்தில், தேவன் அவருடைய வெற்றியின் முத்திரையாக அக்கினியை பயன்படுத்துகிறார், சாத்தானும் அதனோடுதான் அடையாளப்படுத்தப்பட்டான். மனிதர்களைச் சீர்கெடுத்துப் பட்சிப்பதின் மூலம் தேவனை எதிர்ப்பதற்கான இலட்சியத்தில் சோதோமின் அழிவானது சாத்தானுக்கு ஒரு மிகப்பெரிய மோசமான வீழ்ச்சியாகும், மேலும் மனிதன் தேவனுடைய வழிகாட்டுதலை நிராகரித்துத் தன்னைத் தானே கைவிடும்போது, மனிதகுல வளர்ச்சியில் காலத்தின் ஓர் அவமான அடையாளமாக இருக்கிறது. மேலும், இது தேவனுடைய நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாட்டைக் குறித்த ஒரு பதிவாகும்.

வானத்திலிருந்து தேவனால் அனுப்பப்பட்ட அக்கினியானது, சோதோமை வெறும் சாம்பலாக விட்டுச் சென்றது. அதாவது சோதோம் என்ற பெயரிடப்பட்ட பட்டணமும் அதிலுள்ள யாவும் இனியும் இல்லாமல் போனது. தேவனுடைய கோபத்தினால் அது அழிக்கப்பட்டு, தேவனுடைய கோபம் மற்றும் மகத்துவத்திற்குள் மறைந்துப்போனது. தேவனுடைய நீதியான மனநிலையின் காரணத்தினால், சோதோம் தன்னுடைய நீதியான தண்டனையையும் அதனுடைய சரியான முடிவையும் பெற்றது. சோதோமினுடைய இருப்பின் முடிவிற்கு அதன் பாவமும், இந்தப் பட்டணத்தையோ அல்லது அதில் வாழ்ந்த ஜனங்களையோ அல்லது அந்தப் பட்டணத்தில் வாழ்ந்த எந்த ஒரு ஜீவனையோ மீண்டும் பார்க்கக்கூடாது என்ற தேவனுடைய விருப்பமும் காரணமாக இருந்தது. "இந்தப் பட்டணத்தை ஒருபோதும் மறுபடியும் பார்க்கக் கூடாது என்ற தேவனுடைய விருப்பமானது" அவருடைய கோபமும் மற்றும் அவருடைய மகத்துவமுமாகும். இந்தப் பட்டணத்தின் துன்மார்க்கமும், பாவமும் அவரைக் கோபப்பட வைத்தப்படியாலும், அதின் மீது வெறுப்பையும் மற்றும் அருவருப்பையும் ஏற்படுத்தினப்படியாலும், தேவன் அதை எரித்துப்போட்டார், மேலும் அதையும் அல்லது அதன் ஜனங்களில் எவரையும் அல்லது அதிலுள்ள உயிரினங்களையும் ஒருபோதும் அவர் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. வெறும் சாம்பலை மட்டும் மீதம் வைத்துவிட்டு, அந்தப் பட்டணம் எரிந்து முடிந்தவுடன், அது தேவனுடைய கண்களிலிருந்து உண்மையாகவே இல்லாமல் போனது; அவருடைய நினைவிலிருந்தும் அது அற்றுப்போனது, அழிக்கப்பட்டது. அதாவது இதன் பொருள் என்னவென்றால் வானத்திலிருந்து அனுப்பப்பட்ட அக்கினியானது சோதோம் பட்டணத்தை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தினால் நிறைந்த அந்தப் பட்டணத்திலுள்ள ஜனங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தினால் கறைப்பட்ட அந்தப் பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் அழித்தது மட்டுமல்லாமல்; இந்தக் காரியங்களுக்கு அப்பால், மனிதனின் தீமையான நினைவையும் மற்றும் தேவனுக்கு விரோதமான எதிர்ப்பையும் அக்கினியானது அழித்துப்போட்டது. பட்டணத்தை எரிப்பதின் தேவனுடைய நோக்கம் இது தான்.

இந்த மனிதத்தன்மையானது சீர்கேட்டின் உச்சநிலைக்கு மாறிப்போயிருந்தது. இந்த ஜனங்கள் தேவன் யாரென்றும், தாங்கள் எங்கிருந்து வந்தவர்களென்றும் அறியவில்லை. நீங்கள் ஒருவேளை அவர்களுக்கு தேவனைப் பற்றி எடுத்துக்கூறினால் அவர்கள் உங்களை தாக்கக்கூடும், அவதூறு செய்யக் கூடும், மற்றும் தூஷிக்கக் கூடும். தேவனுடைய ஊழியர்கள் அவருடைய எச்சரிக்கையைப் பரப்ப வந்தப்போதும் கூட, இந்தச் சீர்கெட்ட ஜனங்கள் மனந்திரும்புதலின் எந்த அறிகுறியையும் காட்டினதுமில்லை, தங்கள் பொல்லாத நடத்தையைக் கைவிடவுமில்லை, ஆனால் அதற்கு மாறாக, தேவனுடைய ஊழியர்களுக்கு வெட்கமில்லாமல் தீங்கு செய்தனர். அவர்கள் அவர்களுடைய இயல்பையும் மற்றும் தேவனுக்கு எதிரான அபரீதமான விரோதத்தின் சாராம்சத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்தச் சீர்கெட்ட ஜனங்களுடைய தேவனுக்கு விரோதமான எதிர்ப்பானது, அவர்களுடைய சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாட்டை விட அதிகமாக இருந்ததை நாம் பார்க்கலாம். இது சத்தியத்தைப் புரிந்துக்கொள்வதின் குறைப்பாட்டிலிருந்து வந்த அவதூறு செய்தல் அல்லது கேலி செய்தல் போன்ற நிழ்வுகளின் சான்றாகும். அவர்களுடைய துன்மார்க்கமான நடத்தைக்கு முட்டாள்தனமோ, அல்லது அறியாமையோ காரணமாகவில்லை; இந்த விதத்தில் அவர்கள் செயல்பட்டது, வஞ்சிக்கப்பட்டதின் காரணத்தால் அல்ல, மற்றும் நிச்சயமாக அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாலும் அல்ல. அவர்களுடைய நடத்தையானது அப்பட்டமான வெட்கக்கேடான விரோத நிலை, எதிர்ப்பு மற்றும் தேவனுக்கு எதிராகக் கூச்சலிடும் நிலையை அடைந்தது. இவ்வகையான மனித நடத்தையானது தேவனைக் கோபப்படுத்தும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை, மேலும் இது அவருடைய மனநிலையைக் கோபப்படுத்தும்—இந்த மனநிலையானது கண்டிப்பாக புண்படுத்தப்படக்கூடாத ஒன்று. ஆகையால் தேவன் தம்முடைய கோபத்தையும், தம்முடைய மகத்துவத்தையும் நேரடியாக மற்றும் வெளிப்படையாகக் கட்டவிழ்த்துவிட்டார்; இது அவருடைய நீதியான மனநிலையின் உண்மையான வெளிப்பாடாகும். பாவத்தினால் நிரம்பி வழிகின்ற ஒரு பட்டணத்தை எதிர்கொண்ட தேவன், அதை விரைவான முறையில் அழிக்கவும் அதினுள்ளிருக்கும் ஜனங்களையும் ஒழிக்கும்படிக்கும், மற்றும் அவர்களுடைய பாவத்தின் முழுமையை ஒரு முழுமையான வழியில் ஒழிக்கவும், இந்தப் பட்டணத்து ஜனங்கள் இல்லாது போகும்படிக்கும் மற்றும் அந்த இடத்திலிருந்து பாவம் பெருகாதபடி தடுக்கவும் விரும்பினார். இதை அவ்வாறு செய்வதற்கான விரைவான மற்றும் முழுமையான வழியானது அதை அக்கினியால் அழித்துவிடுவதாகும். சோதோம் ஜனங்களைப் பற்றிய அவருடைய அணுகுமறையானது கைவிடுவதற்கோ அல்லது புறக்கணிப்பதற்கோ அல்ல. மாறாக அவர் தம்முடைய கோபத்தையும், மகத்துவத்தையும் மற்றும் அதிகாரத்தையும் தண்டிப்பதற்குப் பயன்படுத்தினார், அடித்து கீழே தள்ளி மற்றும் இந்த ஜனங்களை முற்றிலுமாக அழிக்கவும் பயன்படுத்தினார். அவர்கள் மீதான அவருடைய அணுகுமுறையானது வெறும் சரீர அழிவாக மட்டுமல்லாமல், அவர்களுடைய ஆத்தும அழிவாகவும், மற்றும் நித்திய அழிவாகவும் இருந்தது. "இல்லாது போதல்" என்ற வார்த்தைகளால் தேவன் குறிப்பிடும் உண்மையான அர்த்தம் இது தான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க