தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 19

செப்டம்பர் 16, 2022

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படாத ஜனங்கள்

தேவனுடைய இருதயத்திற்குள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்படாத சிலருடைய விசுவாசம் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தம்மைப் பின்பற்றுபவர்களாக அவர்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய நம்பிக்கைகளை அவர் புகழ்வதில்லை. இந்த ஜனங்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனைப் பின்பற்றினாலும், அவர்களுடைய கருத்துக்களும் பார்வைகளும் ஒருபோதும் மாறவில்லை. அவர்கள் அவிசுவாசிகளைப் போன்றவர்கள். அவர்கள் அவிசுவாசிகளின் கொள்கைகள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான வழிகள் மற்றும் அவிசுவாசிகளின் பிழைப்பு மற்றும் விசுவாச விதிகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையைத் தங்கள் ஜீவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. தேவனுடைய வார்த்தை சத்தியம் என்று அவர்கள் ஒருபோதும் நம்பவில்லை. தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தேவனைத் தங்கள் தேவனாக அவர்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேவனை நம்புவதை ஒருவித கற்றுக்குட்டித்தனமான பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள். அவரை வெறும் ஆவிக்குரிய ஜீவாதாரமாகக் கருதுகிறார்கள். எனவே, தேவனுடைய மனநிலையையோ சாராம்சத்தையோ முயற்சி செய்து புரிந்துகொள்வது மதிப்புக்குரியது என்று அவர்கள் நினைக்கவில்லை. உண்மையான தேவனுடன் ஒத்துப்போகிற அனைத்திற்கும் இந்த ஜனங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறலாம். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை மற்றும் செவிசாய்க்க அவர்கள் கவலைப்படவுமில்லை. ஏனென்றால், அவர்களுடைய இருதயங்களின் ஆழத்தில், "தேவன் கண்ணுக்குத் தெரியாதவர், தொட முடியாதவர் மற்றும் அவர் ஜீவிப்பதில்லை" என்று எப்போதும் சொல்லும் ஒரு தீவிரமான குரல் இருக்கிறது. இத்தகைய தேவனைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது என்பது அவர்களுடைய முயற்சிகளுக்கு ஏற்புடையது அல்ல என்றும், அவ்வாறு செய்யும்போது அவர்கள் தங்களைத் தாங்களே முட்டாளாக்குவார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எந்தவொரு உண்மையான நிலைப்பாட்டையும் எடுக்காமல் அல்லது எந்தவொரு உண்மையான செயலிலும் தங்களை முதலீடு செய்யாமல் தேவனை வார்த்தைகளால் ஒப்புக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்களைப் பெரிய புத்திசாலிகள் என்று நம்புகிறார்கள். அத்தகையவர்களை தேவன் எப்படிப் பார்க்கிறார்? அவர் அவர்களை அவிசுவாசிகளாகவே கருதுகிறார். சிலர் கேட்கிறார்கள், "அவிசுவாசிகள் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க முடியுமா? அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியுமா? 'நான் தேவனுக்காக ஜீவிப்பேன்' என்ற வார்த்தைகளை அவர்களால் சொல்ல முடியுமா?" மனிதர்கள் அடிக்கடி பார்ப்பது ஜனங்கள் மேலோட்டமாகக் காண்பிக்கும் காட்சிகளாகும். அவர்கள் ஜனங்களுடைய சாராம்சங்களைக் காணவில்லை. இருப்பினும், தேவன் இந்த மேலோட்டமான காட்சிகளைப் பார்ப்பதில்லை; அவர் அவர்களுடைய உள்ளார்ந்த சாராம்சங்களை மட்டுமே பார்க்கிறார். ஆகவே, இதுவே இந்த ஜனங்கள் மீது தேவன் வைத்திருக்கும் மனநிலை மற்றும் வரையறை ஆகும். இந்த ஜனங்கள், "தேவன் இதை ஏன் செய்கிறார்? தேவன் ஏன் அதைச் செய்கிறார்? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, அது மனிதக் கருத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை, அதை நீ எனக்கு விளக்க வேண்டும்…" என்று சொல்கிறார்கள். இதற்குப் பதிலாக, நான் கேட்கிறேன்: இந்த விஷயங்களை உனக்கு விளக்க வேண்டியது அவசியமானதாகுமா? உண்மையில் இந்த விஷயங்களுக்கும் உனக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நீ யார் என்று நினைக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்? தேவனுக்கு வழிகாட்டுமளவிற்கு நீ உண்மையில் தகுதியுள்ளவனா? நீ அவரை நம்புகிறாயா? அவர் உன் விசுவாசத்தை ஒப்புக்கொள்கிறாரா? உன் விசுவாசத்திற்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், உன்னுடைய எந்த காரியங்கள் தேவனுடைய செயல்களாக இருக்கின்றன? தேவனுடைய இருதயத்தில் நீ எங்கு நிற்கிறாய் என்றே உனக்குத் தெரியாது, இந்நிலையில் அவருடன் உரையாடலில் ஈடுபடுவதற்கு நீ எவ்வாறு தகுதி பெற முடியும்?

அறிவுரையின் வார்த்தைகள்

இந்தக் கருத்துகளைக் கேட்டபின் உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது அல்லவா? நீங்கள் அவற்றைக் கேட்க விரும்பவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், அவை அனைத்தும் உண்மைகள் ஆகும். ஏனென்றால், கிரியையின் இந்தக் கட்டம் தேவன் செய்ய வேண்டியதாகும். நீ அவருடைய நோக்கங்களைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்டால், அவருடைய மனநிலையைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்டால், அவருடைய சாராம்சத்தையும் மனநிலையையும் புரிந்துகொள்ளாவிட்டால், இறுதியில், நீ இழந்துபோகிறவனாவாய். என் வார்த்தைகள் கேட்பதற்குக் கடினமாக இருப்பதால் குறை சொல்லாதீர்கள். உங்கள் உற்சாகத்தைக் குறைத்ததற்காக அவற்றைக் குறை கூறாதீர்கள். நான் சத்தியத்தைப் பேசுகிறேன். உங்களை அதைரியப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. நான் உங்களிடம் எதைக் கேட்டாலும், அதை நீங்கள் எவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்பதல்லாமல், நீங்கள் சரியான பாதையில் நடந்து தேவனுடைய வழியைப் பின்பற்றுவீர்கள் என்றும் சரியான பாதையிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலக மாட்டீர்கள் என்றும் நான் நம்புகிறேன். நீ தேவனுடைய வார்த்தையின்படி தொடரவில்லை அல்லது அவருடைய வழியைப் பின்பற்றவில்லை என்றால், நீ தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறாய் என்பதிலும், சரியான பாதையிலிருந்து விலகிவிட்டாய் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே, நான் உங்களுக்காகத் தெளிவுபடுத்த வேண்டிய சில விஷயங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். அவற்றைச் சந்தேகத்திற்கு இடமின்றி, தெளிவாகவும், நிச்சயமற்ற தன்மை இன்றியும் நான் உங்களை நம்ப வைக்க வேண்டும் மற்றும் தேவனுடைய மனநிலை, அவருடைய நோக்கங்கள், அவர் எப்படி இருக்கிறார் மனிதர்களை எவ்வாறு முழுமையாக்குகிறார் மற்றும் அவர் ஜனங்களுடைய முடிவுகளை எந்த விதத்தில் தீர்மானிக்கிறார் என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற உங்களுக்கு உதவ வேண்டும். இந்தப் பாதையில் நீ தொடர முடியாத ஒரு நாள் வருமானால், அதற்கு நான் எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டேன். ஏனென்றால், இந்த வார்த்தைகள் உன்னிடம் ஏற்கனவே மிகத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன. உன் சொந்த முடிவை நீ எவ்வாறு கையாளுகிறாய் என்பதைப் பொறுத்தவரையில், அது முற்றிலும் உன்னைப் பொறுத்ததாகும். பல்வேறு வகையான மனிதர்களின் முடிவுகளைப் பொறுத்தவரையில், தேவன் வெவ்வேறு மனநிலைகளைக் கொண்டிருக்கிறார், அவற்றை எடைபோடுவதற்கான தனது சொந்த வழிகளையும், அதேபோல் அவர்களுக்கான அவரின் சொந்தத் தரத்தையும் கொண்டிருக்கிறார். ஜனங்களுடைய முடிவுகளை எடைபோடுவதற்கான அவரது தரம் அனைவருக்கும் நியாயமான ஒன்றாகும்—அதில் எந்தச் சந்தேகமும் இல்லை! எனவே, சிலரின் அச்சங்கள் தேவையற்றவையாகும். நீங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறீர்களா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க