தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 18
செப்டம்பர் 16, 2022
தேவனுக்குப் பயப்படுவதற்கான தொடக்கப் புள்ளியானது அவரை தேவனைப் போலவே நடத்துவதாகும்
சிறிது நேரத்திற்கு முன்பு, ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: யோபுவை விட தேவனைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருந்தாலும், நம்மால் ஏன் அவருக்குப் பயபக்தியாயிருக்க முடியாது? இந்த விஷயத்தை நாம் சற்று முன்னர் விவாதித்தோம், அல்லவா? இந்தக் கேள்வியின் சாராம்சத்தை நாம் முன்பே விவாதித்தோம். அதாவது யோபு தேவனை அப்போது அறியவில்லை என்றாலும், யோபு அவரை தேவனைப் போலவே நடத்தினார் மற்றும் வானங்களுக்கும் பூமிக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் அவரை எஜமானராகவும் கருதினார். தேவனை எதிரியாக யோபு கருதவில்லை. மாறாக, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவராக அவரை வணங்கினார். இப்போதெல்லாம் ஜனங்கள் தேவனை ஏன் எதிர்க்கிறார்கள்? அவர்களால் அவரை ஏன் வணங்க முடியவில்லை? ஒரு காரணம் என்னவென்றால், அவர்கள் சாத்தானால் ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் ஆழமாக வேரூன்றிய சாத்தானிய இயல்புடன் அவர்கள் தேவனுடைய எதிரிகளாகிவிட்டார்கள். இவ்வாறு, அவர்கள் தேவனை நம்புகிறார்கள், தேவனை ஏற்கிறார்கள் என்றாலும், அவர்களால் அவரைத் தடுக்கவும், அவரை எதிர்த்து நிற்கவும் முடிகிறது. அது மனித இயல்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. மற்ற காரணம் என்னவென்றால், தேவன் மீது நம்பிக்கை இருந்தபோதிலும், ஜனங்கள் அவரை தேவனாகவே கருதுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அவரை மனிதகுலத்திற்கு எதிரானவர் என்று கருதுகிறார்கள், அவரை தங்கள் எதிரி என்று கருதுகிறார்கள் மற்றும் தங்களை தேவனுடன் சமரசம் செய்யமுடியாதவர்கள் என்று உணர்கிறார்கள். அது அவ்வளவு எளிமையானதாகும். நமது முந்தைய அமர்வில் இந்த விஷயம் விவரிக்கப்படவில்லை? இதைப் பற்றி சிந்தியுங்கள்: அதுவே காரணம் அல்லவா? நீ தேவனைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கலாம். ஆனால் இந்த அறிவு எதைக் குறிக்கிறது? எல்லோரும் பேசுவது அதுவல்லவா? தேவன் உன்னிடம் சொன்னது அதுவல்லவா? அதன் தத்துவார்த்த மற்றும் கோட்பாட்டு அம்சங்களை மட்டுமே நீ அறிந்திருக்கிறாய்—ஆனால் தேவனுடைய உண்மையான முகத்தை நீ எப்போதாவது கிரகித்திருக்கிறாயா? உனக்கு உள்ளுணர்வு சார்ந்த அறிவு இருக்கிறதா? உனக்கு நடைமுறை அறிவும் அனுபவமும் உள்ளதா? தேவன் உன்னிடம் சொல்லியிருக்கவில்லை என்றால், உன்னால் அறிந்திருக்க முடியுமா? உன் தத்துவார்த்த அறிவு உண்மையான அறிவைக் குறிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், நீ எவ்வளவு அறிந்திருந்தாலும் அல்லது அதை எப்படி அறிந்துக்கொண்டாலும், நீ தேவனைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறும் வரை, அவர் உன் எதிரியாக இருப்பார். நீ உண்மையில் தேவனை தேவனாகக் கருதத் தொடங்கும் வரையில், அவர் உன்னை எதிர்ப்பார். ஏனென்றால் நீ சாத்தானின் உருவகமாக இருக்கிறாய்.
நீ கிறிஸ்துவுடன் ஒன்றாக இருக்கும்போது, ஒரு நாளைக்கு நீ அவருக்கு மூன்று வேளை ஆகாரம் பரிமாறலாம் அல்லது அவருக்குத் தேநீர் பரிமாறலாம் மற்றும் அவருடைய ஜீவிதத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யலாம். நீ கிறிஸ்துவை தேவனாகவே கருதியிருப்பதாய்த் தோன்றும். ஒவ்வொரு காரியம் நடக்கும்போதும், ஜனங்களுடைய பார்வைகள் எப்போதும் தேவனுக்கு முரணாக இயங்கும். தேவனுடைய பார்வையை ஜனங்கள் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் எப்போதும் தவறிவிடுகிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில், ஜனங்கள் தேவனுடன் பழகுகிறார்கள் என்றாலும், அவர்கள் அவருடன் ஒத்துப்போகிறார்கள் என்று அது அர்த்தப்படுத்துவதில்லை. ஏதேனும் நடந்தவுடன், மனிதகுலத்தின் கீழ்ப்படியாமையின் உண்மைத் தன்மை வெளிப்படுகிறது. இதன் மூலம் மனிதர்களுக்கும் தேவனுக்கும் இடையிலான விரோதப் போக்கை அது உறுதிப்படுத்துகிறது. இந்த விரோதமானது தேவன் மனிதர்களை எதிர்க்கும் ஒன்றோ அல்லது தேவன் அவர்களுக்கு விரோதமாக இருக்க விரும்புவதோ அல்லது அவர் அவர்களை தனக்கு எதிராக நிறுத்தி பின்னர் அவர்களை அப்படி நடத்துகிறார் என்பதோ அல்ல. மாறாக, தேவனுக்கு எதிரான இந்த முரண்பாடான சாராம்சம் மனிதர்களின் மனதின் சித்தத்திலும் அவர்களுடைய ஆழ் மனதிலும் பதுங்குகிறது. தேவனிடமிருந்து வரும் அனைத்தையும் ஜனங்கள் தங்கள் ஆராய்ச்சிக்கான பொருள்களாக கருதுவதால், தேவனிடமிருந்து வரும் விஷயங்கள் மற்றும் தேவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நோக்கிய அவர்களுடைய பதில், எல்லாவற்றிற்கும் மேலாக, யூகிப்பதும், சந்தேகிப்பதும், பின்னர் முரண்படுவதும் மற்றும் தேவனை எதிர்க்கும் ஒரு மனநிலையை விரைவாக பின்பற்றுவதுமாகும். அதன்பிறகு, அவர்கள் தேவனுடன் சச்சரவுகள் அல்லது போட்டிகளில் எதிர்மறையான மனநிலையை கொண்டு செல்கிறார்கள். அத்தகைய தேவனைப் பின்பற்றுவது மதிப்புள்ளதா என்று கூட சந்தேகிக்கக்கூடிய அளவிற்கு அது செல்கிறது. அவர்கள் இந்த முறையில் தொடரக்கூடாது என்று அவர்களுடைய பகுத்தறிவு அவர்களிடம் கூறினாலும், அவர்கள் தங்களைத் தாங்களே அவ்வாறு செய்யத் தெரிந்துக்கொள்வார்கள். அதாவது அவர்கள் இறுதிவரை தயங்காமல் அதைத் தொடருவார்கள். உதாரணமாக, தேவனைப் பற்றிய வதந்திகளையோ அல்லது அவதூறான பேச்சையோ கேட்கும்போது சிலருக்கு ஏற்படும் முதல் எதிர்வினை என்னவாக இருக்கிறது? அவர்களுடைய முதல் எதிர்வினை இந்த வதந்திகள் உண்மையா இல்லையா, இந்த வதந்திகள் இருக்கிறதா இல்லையா என்று ஆச்சரியப்படுவதும், பின்னர் காத்திருந்து பார்க்கும் மனநிலையை பின்பற்றுவதும் ஆகும். பின்னர் அவர்கள், "இதைச் சரிபடுத்த வழி இல்லை. அது உண்மையில் நடந்ததா? இந்த வதந்தி உண்மையானதா இல்லையா?" என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அது போன்றவர்கள் அதை மேலோட்டமாக காட்டவில்லை என்றாலும், அவர்கள் இருதயத்தில் அவர்கள் ஏற்கனவே சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தேவனை மறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தகைய மனநிலையின் சாராம்சம் மற்றும் அத்தகைய கண்ணோட்டம் என்னவாக இருக்கிறது? அது துரோகம் அல்லவா? இந்த விஷயத்தை அவர்கள் எதிர்கொள்ளும் வரை, இந்த மனிதர்களின் பார்வைகள் என்ன என்பதை நீ பார்க்க முடியாது. அவர்கள் தேவனுடன் முரண்படவில்லை மற்றும் அவர்கள் அவரை எதிரியாக கருதுவதில்லை என்பது போல் தெரிகிறது. இருப்பினும், அவர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டவுடன், அவர்கள் உடனடியாகச் சாத்தானுடன் நின்று தேவனை எதிர்க்கிறார்கள். அது எதைப் பரிந்துரைக்கிறது? மனிதர்களும் தேவனும் எதிர் எதிராக இருப்பதை அது அறிவுறுத்துகிறது! தேவன் மனிதகுலத்தை எதிரி என்று கருதவில்லை, ஆனால் மனிதகுலத்தின் சாராம்சமே தேவனுக்கு விரோதமானதாக இருக்கிறது. ஒருவர் எவ்வளவு காலம் அவரைப் பின்பற்றினார் அல்லது எவ்வளவு பெரிய விலைக்கிரையம் கொடுத்தார், அவர்கள் தேவனை எப்படி துதிக்கிறார்கள், அவர்கள் எப்படி அவரை எதிர்த்து நிற்காமல் இருக்கக்கூடும், தேவனை நேசிக்கும்படி அவர்கள் எவ்வளவு கடுமையாகத் தங்களை வற்புறுத்துகிறார்கள் என்பதல்லாமல், அவர்களால் ஒருபோதும் தேவனை தேவனாக நடத்த முடியாது. அது ஜனங்களுடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படவில்லையா? நீ அவரை தேவனாகக் கருதி, அவர் தேவன் என்று உண்மையாக நம்பினால், இன்னும் அவரைப் பற்றி உனக்கு ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா? அவரைப் பற்றிய ஏதேனும் கேள்விக்குறிகளை உங்கள் இருதயம் இன்னும் வைத்திருக்க முடியுமா? இனி வைத்திருக்க முடியாது, அல்லவா? இந்த உலகத்தின் போக்குகள் மிகவும் தீயனவாகும். இந்த மனித இனமும் தீமையானதாகும். இந்நிலையில், அவர்கள் மீது நீ எந்தக் கருத்தையும் கொண்டிராமல் எவ்வாறு இருக்க முடியும்? நீயே மிகவும் பொல்லாதவனாக இருக்கிறாய். எனவே, எவ்வாறு அதைப் பற்றி உனக்கு ஒரு கருத்தும் இல்லாமல் இருக்க முடியும்? ஆனால், ஒரு சில வதந்திகள் மற்றும் சில அவதூறுகள் தேவனைப் பற்றிய இத்தகைய மகத்தான கருத்துக்களுக்கு வழிவகுக்கும் மற்றும் பல விஷயங்களை நீ கற்பனை செய்யவும் வழிவகுக்கும். அது உன் வளர்ச்சி எவ்வளவு முதிர்ச்சியற்றது என்பதைக் காட்டுகிறது! ஒரு சில கொசுக்கள் மற்றும் ஒரு சில அருவருப்பான ஈக்கள் ஆகியவற்றின் "சலசலப்பு" உன்னை ஏமாற்றுவதற்கு போதுமானதாகுமா? அது எத்தகைய மனிதனைக் குறிக்கிறது? அத்தகையவர்களைப் பற்றி தேவன் என்ன நினைக்கிறார் என்று அறிவாயா? அவர் அவர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்து தேவனுடைய மனநிலை உண்மையில் தெளிவாக உள்ளது. இந்த மனிதர்களை தேவன் நடத்துவது அவர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகும்—அவருடைய மனநிலையானது அவர்களுக்கு எந்த கவனமும் செலுத்தக்கூடாது மற்றும் இந்த அறிவற்ற ஜனங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதாகும். ஏன் அவ்வாறு இருக்கிறது? ஏனென்றால், தேவனுடைய இருதயத்தில், அவர் தன்னிடம் விரோதமாக இருப்பதாக உறுதியளித்தவர்களை இறுதி வரைக்குமாக ஆதாயம் செய்யவும், இணக்கமாக இருப்பதற்கான வழியைத் தேடுவதில் ஒருபோதும் திட்டமிடாதவர்களைப் பெறுவதற்கும் அவர் ஒருபோதும் திட்டமிடவில்லை. ஒருவேளை நான் பேசிய இந்த வார்த்தைகள் ஒரு சிலரைக் காயப்படுத்தக்கூடும். நீங்களும் எப்போதுமே உங்களை இப்படிக் காயப்படுத்த அனுமதிக்கிறீர்களா? நீங்கள் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும், நான் சொல்வது எல்லாம் உண்மையாகும்! நான் எப்போதும் உங்களைக் காயப்படுத்தி, அதுபோன்ற வடுக்களை அம்பலப்படுத்தினால், அது உங்கள் இருதயங்களில் நீங்கள் வைத்திருக்கும் தேவனுடைய உயர்ந்த உருவத்தைப் பாதிக்குமா? (அது பாதிக்காது.) அது பாதிக்காது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால், உங்கள் இருதயத்தில் தேவன் இல்லை. உங்கள் இருதயங்களில் வசிக்கும் உயர்ந்த தேவன்—நீங்கள் வலுவாக மறைத்துப் பாதுகாக்கும் தேவன்—தேவன் அல்ல. மாறாக, அவர் மனிதக் கற்பனையின் ஓர் உருவமாவார். அவர் ஜீவிக்கவே இல்லை. எனவே, இந்தப் புதிருக்கு நான் பதிலை அம்பலப்படுத்துவது நல்லதாகும். அது முழு உண்மையையும் அப்பட்டமாகக் காட்டவில்லையா? உண்மையான தேவன் மனிதர்கள் கற்பனை செய்யும் தேவனைப் போன்றவர் அல்ல. உங்கள் அனைவராலும் இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். தேவனைப் பற்றிய உங்கள் அறிவுக்கு அது உதவும்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்