தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 5

ஏப்ரல் 24, 2022

ஓர் உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன், சிருஷ்டிகர் யார், மனிதனுடைய சிருஷ்டிப்பு எதற்காக, ஒரு சிருஷ்டியின் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது மற்றும் எல்லா சிருஷ்டிப்புகளின் தேவனை எவ்வாறு வணங்குவது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் நோக்கங்கள், விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் கவனித்துக்கொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் வழிக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க வேண்டும்.

தேவனுக்கு பயப்படுவது என்றால் என்ன? ஒருவர் எவ்வாறு தீமையைத் தவிர்க்க முடியும்?

"தேவனுக்குப் பயப்படுவது" என்பது பெயரிடப்படாத பயம் மற்றும் திகில் என்று அர்த்தமல்ல, தவிர்த்தலும், தூரத்தில் வைத்தலும் அல்ல மற்றும் விக்கிரகாராதனையோ மூடநம்பிக்கையோ அல்ல. மாறாக, அது போற்றுதல், மரியாதை, நம்பிக்கை, புரிதல், அக்கறை, கீழ்ப்படிதல், பிரதிஷ்டை, அன்பு, அத்துடன் நிபந்தனையற்ற மற்றும் குறைகூறாத வழிபாடு, காணிக்கை மற்றும் ஒப்புக்கொடுத்தல் ஆகியனவாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான போற்றுதல், உண்மையான நம்பிக்கை, உண்மையான புரிதல், உண்மையான அக்கறை அல்லது கீழ்ப்படிதல் இருக்காது. ஆனால் பயம், கவலை, சந்தேகம், தவறான புரிதல், ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு ஆகியவை இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான பிரதிஷ்டை மற்றும் காணிக்கை இருக்காது. தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான வழிபாடும் ஒப்புக்கொடுத்தலும் இருக்காது. குருட்டு வழிபாடு மற்றும் மூடநம்பிக்கை மட்டுமே இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலம் தேவனுடைய வழிக்கு ஏற்ப செயல்படவோ, தேவனுக்குப் பயப்படவோ அல்லது தீமையைத் தவிர்க்கவோ முடியாது. மாறாக, மனிதன் ஈடுபடும் ஒவ்வொரு செயலும் நடத்தையும் கலகம் மற்றும் எதிர்ப்பால் நிரப்பப்படும். அவதூறான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரைப் பற்றிய மோசமான நியாயத்தீர்ப்புகளால் நிரப்பப்படும். சத்தியத்திற்கு மாறாகவும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்கு மாறாகவும் செயல்படும் தீங்கான நடத்தையால் நிரப்பப்படும்.

மனிதகுலம் தேவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்தவுடன், அவர்கள் அவரைப் பின்பற்றுவதில் அவரைச் சார்ந்திருப்பதில் உண்மையானவர்களாக இருப்பார்கள். உண்மையான நம்பிக்கையுடன் இருப்பதாலும், தேவனைச் சார்ந்திருப்பதாலும் மட்டுமே மனிதகுலத்திற்கு உண்மையான புரிதலும் உணர்தலும் இருக்க முடியும். தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுடன் அவர் மீதான உண்மையான அக்கறையும் வருகிறது. தேவன் மீதான உண்மையான அக்கறையுடன் மட்டுமே மனிதகுலம் உண்மையான கீழ்ப்படிதலைக் கொண்டிருக்க முடியும். தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதலால் மட்டுமே மனிதகுலம் உண்மையான பிரதிஷ்டை செய்ய முடியும். தேவனுக்கு உண்மையான பிரதிஷ்டை செய்வதன் மூலம் மட்டுமே மனிதகுலத்திடம் நிபந்தனையற்ற மற்றும் புகார் இல்லாத கைம்மாறு இருக்க முடியும். உண்மையான நம்பிக்கை மற்றும் சார்பு, உண்மையான புரிதல் மற்றும் அக்கறை, உண்மையான கீழ்ப்படிதல், உண்மையான பிரதிஷ்டை மற்றும் கைம்மாறு ஆகியவற்றால் மட்டுமே, தேவனுடைய மனநிலையையும் சாரத்தையும் மனிதகுலம் உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும் மற்றும் சிருஷ்டிகரின் அடையாளத்தை அறிந்துகொள்ள முடியும். சிருஷ்டிகரை அவர்கள் உண்மையிலேயே அறிந்துகொண்டால்தான் மனிதகுலம் தங்களுக்குள் உண்மையான வழிபாட்டையும் ஒப்புக்கொடுத்தலையும் எழுப்ப முடியும். சிருஷ்டிகருக்கு உண்மையான வழிபாடும் ஒப்புக்கொடுத்தலும் இருக்கும்போது மட்டுமே, மனிதகுலத்தால் அவர்களின் தீய வழிகளை ஒதுக்கி வைக்க முடியும், அதாவது தீமையைத் தவிர்க்க முடியும்.

இது "தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான" முழு செயல்முறையையும் உருவாக்குகிறது. இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான முழு உள்ளடக்கமாகும். இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கு பயணிக்க வேண்டிய பாதையாகும்.

"தேவனுக்குப் பயப்படுவதும், தீமையைத் தவிர்ப்பதும்" மற்றும் தேவனை அறிவதும் எண்ணற்ற நூல்களால் பிரிக்கமுடியாமல் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையேயான தொடர்பு பிரத்தியட்சமாகத் தெரிகிறது. ஒருவர் தீமையைத் தவிர்ப்பதற்கு விரும்பினால், முதலில் தேவன் மீது உண்மையான பயம் இருக்க வேண்டும். ஒருவர் தேவனைப் பற்றிய உண்மையான பயத்தை அடைய விரும்பினால், முதலில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடைய ஒருவர் விரும்பினால், முதலில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், தேவனுடைய சிட்சையையும் தண்டித்து திருத்துதலையும் அனுபவிக்க வேண்டும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும். ஒருவர் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க விரும்பினால், ஒருவர் முதலில் தேவனுடைய வார்த்தைகளை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், தேவனை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், மற்றும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சூழல்களின் வடிவத்திலும் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்க தேவனிடம் கேட்க வேண்டும். ஒருவர் தேவனோடு, தேவனுடைய வார்த்தைகளோடு நேருக்கு நேர் வர விரும்பினால், முதலில் ஓர் எளிய மற்றும் நேர்மையான இருதயம், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் விருப்பம், மனஉறுதி மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான தைரியம் மற்றும் ஓர் உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக ஆசை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்…. இவ்வாறு, படிப்படியாக முன்னேறும்போது, நீ தேவனிடம் இன்னும் நெருக்கமாக வருவாய், உன் இருதயம் இன்னும் தூய்மையாக வளரும் மற்றும் உன் ஜீவிதத்தையும் உயிருடன் இருப்பதன் மதிப்பையும், தேவனையும் அறிந்துகொள்ளச் செய்யும், இன்னும் அர்த்தமுள்ளவனாகவும், இன்னும் பிரகாசமானவனாகவும் மாறுவாய். ஒரு நாள், சிருஷ்டிகர் இனி ஒரு புதிர் அல்ல என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் மறைக்கப்படவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் முகத்தை மறைக்கவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், சிருஷ்டிகர் இனி உன் எண்ணங்களில் நீ தொடர்ந்து ஏங்கி, உணர முடியாமல் போனவர் அல்ல என்றும், அவர் உன் இடது மற்றும் வலதுபுறம் நிஜமாகவும் உண்மையாகவும் பாதுகாப்பாக நிற்கிறார் என்றும், உன் ஜீவனை வழங்குகிறார் என்றும், உன் விதியைக் கட்டுப்படுத்துகிறார் என்றும், நீ உணருவாய். அவர் தொலைதூர அடிவானத்தில் இல்லை, மேகங்களில் தன்னைத்தானே மறைக்கவில்லை. அவர் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன்னை எல்லாவற்றிலும் வழிநடத்துகிறார். உன்னிடம் உள்ள அனைத்திடமும் உன்னிடமும் அவர் மட்டுமே இருக்கிறார். அத்தகைய தேவன், இருதயத்திலிருந்து அவரை நேசிக்கவும், அவருடன் ஒட்டிக்கொள்ளவும், அவரை நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளவும், அவரைப் போற்றவும், அவரை இழக்க பயப்படுவதற்கும், இனிமேல் அவரைத் துறக்க, அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க அல்லது அவரைத் தவிர்க்க அல்லது தூரத்தில் அவரை தள்ளி வைக்க விரும்பாமல் இருப்பதற்கும் உன்னை அனுமதிக்கிறார். நீ விரும்புவதெல்லாம் அவர் மீது அக்கறைகொள்வதும், அவருக்குக் கீழ்ப்படிவதும், அவர் உனக்குக் கொடுக்கும் அனைத்தையும் திருப்பிக் கொடுப்பதும், அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிவதும் மட்டுமே. நீ இனி வழிநடத்தப்படுவதை, உனக்கு வழங்கப்படுவதை, கவனிக்கப்படுவதை, அவரால் பாதுகாக்கப்படுவதை, அவர் கட்டளையிடுவதை, உனக்காக ஆணையிடுவதை, இனி மறுக்க மாட்டாய். நீ விரும்புவதெல்லாம் அவரைப் பின்பற்றுவதும், அவருடைய துணையுடன் அவரைச் சுற்றியே இருப்பதும், அவரை உன் ஒரே ஜீவனாக ஏற்றுக்கொள்வதும், அவரை உன் ஒரே கர்த்தராக ஏற்றுக்கொள்வதும், உன் ஒரே தேவனாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. "முகவுரை" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க