தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 1

மே 11, 2023

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஜீவகாலம் முழுவதும் தேவனை எவ்வாறு விசுவாசித்தீர்கள் என்பதைப் புதிதாக ஆராய வேண்டும். இதன் மூலம் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், நீ உண்மையிலேயே புரிந்துகொண்டிருக்கிறாயா, உண்மையிலேயே கிரகித்துக்கொண்டிருக்கிறாயா, தேவனை உண்மையாக அறிந்துகொள்கிறாயா, பல்வேறு வகையான மனிதர்களிடம் தேவன் என்ன மனநிலையைக் கொண்டிருக்கிறார், தேவன் உன் மீது நடப்பிக்கும் கிரியையை நீ உண்மையிலேயே புரிந்துகொள்கிறாயா, உன் ஒவ்வொரு கிரியையையும் தேவன் எவ்வாறு வரையறுக்கிறார் என்பதை நீ காணலாம். உன் பக்கத்திலிருக்கும் இந்த தேவன், உன் முன்னேற்றத்தின் திசையை வழிநடத்துகிறார், உன் விதியை நிர்ணயிக்கிறார், உன் தேவைகளை வழங்குகிறார் என இவை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இந்த தேவனை எவ்வளவாக நீ புரிந்துகொள்கிறாய். இந்த தேவனைப் பற்றி உனக்கு உண்மையில் எவ்வளவு தெரியும்? ஒவ்வொரு தனிப்பட்ட நாளிலும் உன்மீது அவர் என்ன கிரியை செய்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய ஒவ்வொரு கிரியையிலும் அவர் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி உனக்குத் தெரியுமா? அவர் உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார் என்று தெரியுமா? அவர் உனக்காக எந்த வழியை வழங்குகிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவர் உன்னை வழிநடத்தும் முறைகள் உனக்குத் தெரியுமா? அவர் உன்னிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார், உன்னிடம் அவர் எதை நிறைவேற்ற விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? நீ நடந்துகொள்ளும் பல்வேறு வழிகளைப் பற்றி அவர் வைத்திருக்கும் மனநிலை உனக்குத் தெரியுமா? நீ அவருக்குப் பிரியமான ஒரு மனிதனாக உள்ளாயா என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய மகிழ்ச்சி, கோபம், துக்கம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் பிறப்பிடம், அவற்றின் பின்னால் உள்ள எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் மற்றும் அவருடைய சாராம்சம் பற்றி உனக்குத் தெரியுமா? இறுதியாக, நீ நம்பும் இந்த தேவன் எந்த வகையான தேவன் என்று உனக்குத் தெரியுமா? இந்தக் கேள்விகள் மற்றும் பிற கேள்விகள் எல்லாம் நீ ஒருபோதும் புரிந்துகொள்ளாத அல்லது சிந்திக்காத ஒன்றா? தேவன் மீதான உன் விசுவாசத்தைப் பின்பற்றுவதில், தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான புரிதல் மற்றும் அனுபவத்தின் மூலம், அவரைப் பற்றிய உன் தவறான புரிதல்களை நீக்கிவிட்டாயா? தேவனுடைய ஒழுக்கத்தையும் சிட்சையையும் பெற்ற பிறகு, உண்மையான கீழ்ப்படிதலையும் அக்கறையையும் அடைந்துவிட்டாயா? தேவனுடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மத்தியில், மனிதனுடைய கலகத்தனத்தையும் சாத்தானுக்குரிய தன்மையையும் அறிந்து, தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி சிறிதளவு புரிதலையாவது பெற்றிருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதல் மற்றும் வெளிச்சத்தின் கீழ், நீ ஜீவன் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்தை வைத்திருக்கத் தொடங்கியிருக்கிறாயா? தேவன் அனுப்பிய சோதனைகளுக்கு மத்தியில், மனிதனுடைய குற்றங்களுக்கான அவருடைய சகிப்பின்மையையும், அவர் உன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதையும், அவர் உன்னை எவ்வாறு இரட்சிக்கிறார் என்பதையும் உணர்ந்திருக்கிறாயா? தேவனைத் தவறாகப் புரிந்துகொள்வது என்றால் என்ன அல்லது இந்தத் தவறான புரிதலை அகற்றுவது எவ்வாறு என உனக்குத் தெரியாவிட்டால், நீ தேவனுடன் உண்மையான ஐக்கியத்திற்குள் ஒருபோதும் நுழைந்ததில்லை, தேவனைப் புரிந்துகொள்ளவில்லை என்று ஒருவர் கூறலாம் அல்லது குறைந்தபட்சம் நீ அவரைப் புரிந்துகொள்ள ஒருபோதும் விரும்பவில்லை என்று சொல்லலாம். தேவனுடைய ஒழுக்கம் மற்றும் சிட்சை என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், கீழ்ப்படிதல் மற்றும் அக்கறை என்னவென்று உனக்கு நிச்சயமாகவே தெரியாது அல்லது குறைந்தபட்சம் நீ உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அல்லது அவர் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பாய். தேவனுடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் நீ ஒருபோதும் அனுபவித்திருக்கவில்லை என்றால், அவருடைய பரிசுத்தம் என்னவென்று உனக்குத் தெரியாமல் போகும் மற்றும் மனிதனுடைய கலகம் என்ன என்பதும் உனக்குத் தெரியாமல் போகும். நீ ஒருபோதும் ஜீவன் குறித்த சரியான கண்ணோட்டத்தை கொண்டிராமல் அல்லது ஜீவிதத்தில் சரியான குறிக்கோளைக் கொண்டிராமல், ஜீவிதத்தில் உன் எதிர்காலப் பாதையைப் பற்றி இன்னும் குழப்பமாக மற்றும் முன்னேறத் தயங்கும் அளவிற்கு சந்தேக மனநிலையில் இருந்தால், தேவனுடைய ஞானத்தையும் வழிகாட்டலையும் நீ ஒருபோதும் பெறவில்லை என்பதையே அது உறுதிப்படுத்தும். உண்மையிலேயே தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் உனக்கு வழங்கப்படவில்லை அல்லது நீ நிரப்பப்படவில்லை என்றும் ஒருவர் கூறலாம். நீ இன்னும் தேவனுடைய சோதனைகளுக்கு ஆளாகவில்லை என்றால், மனிதனுடைய குற்றங்களுக்கு தேவனுடைய சகிப்பின்மை என்ன என்பதை நீ நிச்சயமாக அறிய மாட்டாய் அல்லது முடிவாக தேவன் உன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை நீ புரிந்துகொள்ள மாட்டாய் மற்றும் மனிதனை நிர்வகிக்கும் மற்றும் இரட்சிக்கும் அவருடைய கிரியை என்ன என்பதையும் நீ புரிந்துகொள்ள மாட்டாய் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மனிதர் எத்தனை வருடங்கள் தேவனை நம்பினாலும், அவர் ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளில் எதையும் அனுபவித்திருக்கவில்லை அல்லது உணர்ந்திருக்கவில்லை என்றால், அவர் நிச்சயமாக இரட்சிப்பை நோக்கிய பாதையில் நடக்கவில்லை, நிச்சயமாகவே தேவன் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசம் உண்மையான உள்ளடக்கம் இல்லாத ஒன்றாக இருக்கும், நிச்சயமாகவே தேவனைப் பற்றிய அவருடைய அறிவும் பூஜ்ஜியமாக இருக்கும் மற்றும் தேவனிடம் பயபக்தியுடன் இருப்பது என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. "முகவுரை" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க