தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 78
அக்டோபர் 20, 2022
"நியாயத்தீர்ப்பு" என்று குறிப்பிடுகிற வார்த்தையில், யேகோவா ஒவ்வோரு பகுதியிலுமுள்ள ஜனங்களுக்குப் போதிக்க பேசிய வார்த்தைகளையும், பரிசேயர்களைக் கடிந்துகொள்ள இயேசு பேசிய வார்த்தைகளையும் நீ நினைவுகூர்வாய். அவை தீவிரத்தன்மையுள்ளவையாக இருந்தாலும், இந்த வார்த்தைகள் மனிதனுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு அல்ல; அவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அதாவது வெவ்வேறு பின்னணியில் தேவன் பேசிய வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள், கடைசி நாட்களில் மனிதனை நியாயந்தீர்க்கும்போது கடைசி நாட்களின் கிறிஸ்து பேசும் வார்த்தைகளைப் போன்றதல்ல. மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். நீ இந்தச் சத்தியங்களை முக்கியமானதாகக் கருதவில்லை என்றால், மேலும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தவிர்த்து வேறு எதையும் நீ சிந்திக்காமல் இருக்கிறாய் என்றால், அல்லது அவை சம்பந்தப்படாத ஒரு புதிய வழியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தால், நீ ஒரு மாபெரும் கொடும் பாவி என்று நான் சொல்கிறேன். நீ தேவன்மீது விசுவாசம் வைத்திருந்து அதேவேளையில், சத்தியத்தையோ தேவனுடைய சித்தத்தையோ தேடாமல், அல்லது உன்னைத் தேவனிடம் நெருங்கிக் கொண்டு வரும் வழியை நேசிக்கவில்லை என்றால், நீ நியாயத்தீர்ப்பைத் தவிர்க்க முயற்சிப்பவன் என்று நான் சொல்கிறேன், மேலும் நீ ஒரு பொம்மை மற்றும் பெரிய வெள்ளை சிங்காசனத்திலிருந்து தப்பி ஓடும் ஒரு துரோகியும் கூட. தம்முடைய கண்களுக்குக் கீழுள்ள கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முயலும் கலகக்காரர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். அத்தகைய மனிதர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள். நியாயந்தீர்க்கப்பட தேவனுக்கு முன்பாக வந்து சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள். நிச்சயமாக, இது எதிர்காலத்திற்குச் சொந்தமான ஒன்றாக இருக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்