Christian Praise Song | நல்ல நிலமாகிய கானானில் மகிழ்ச்சி | Bollywood Indian Dance (Tamil Subtitles)

அக்டோபர் 30, 2021

நான் தேவனுடைய வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டேன்,

மிகுந்த சந்தோஷமாய் உற்சாகமாய் இருக்கிறேன்.

நான் என் நேசரைக் கரங்களில் பிடித்தேன்,

ஏற்கனவே என் இதயம் அவருக்குக் கொடுத்தேன்.

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்தேன், தேவனின்அழகைக் கண்டேன்.

அவருக்கான என் நேசம் இன்னும் அதிகரிக்கிறது, அவரால் என் இதயம் மகிழ்கிறது.

அவர் அழகு என்னைக் கவர்கிறது, என் இதயம் அவருக்கு நெருக்கம்.

உள்ளம் துதிப் பாடல்களால் நிறைந்து, தேவனை நேசிக்க என் அன்பு போதாதே.

நல்ல நிலமாகிய கானானில் எல்லாம் புதிது ஜீவனுள்ளது.

அவை ஜீவனால் நிரம்பியிருக்கின்றன.

உண்மைத் தேவனிடமிருந்து ஜீவத்தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

ஜீவனுக்குத் தேவையானவைகளை நான் பெற்று

பரலோக ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறேன்.

நல்ல நிலமாகிய கானானுக்கு நான் வந்திருக்கிறேன்,

இனி ஒருபோதும் தேட வேண்டியதில்லை.

இது மிகுந்த மகிழ்ச்சியளிக்குதே.

தேவனுக்கான அன்பு எல்லையற்ற பெலத்தை வெளிப்படுத்துதே.

பொங்கிவரும் துதிகள் நம் உள்ளான நேசத்தை வெளிப்படுத்துதே.

என் நேசரின் அழகு என் இருதயத்தைக் கவர்ந்ததே;

சுகந்த வாசனை அவரை இன்னும் என்னை நேசிக்கச் செய்யுதே.

என் நேசரின் அழகு என் இருதயத்தைக் கவர்ந்ததே;

சுகந்த வாசனை அவரை இன்னும் என்னை நேசிக்கச் செய்யுதே.

என்னைக் கண்டு நட்சத்திரங்கள் புன்னகைக்கின்றன,

சூரியன் தலையசைக்கிறது.

சூரிய ஒளி மற்றும் தூறலில் நனைந்து, வாழ்வின் கனிகள் வேகம் வளர்கின்றன.

தேவ வார்த்தைகள் ஏராளமே; நம் விருந்து மிக இனிமையானதே.

தேவனின் நிறைவான அபரிமிதமான வழங்குதல்

நம்மை திருப்தியாக்கி வளப்படுத்துகிறதே.

தேவனுடைய வார்த்தைகளின் உலகமே இந்ந நல்ல நிலம்;

அவரின் நேசம் அதிக மகிழ்ச்சியளிக்குதே.

தேவனுடைய வார்த்தைகளின் உலகமே இந்ந நல்ல நிலம்;

அவரின் நேசம் அதிக மகிழ்ச்சியளிக்குதே.

பழக் கொத்துக்கள் தம் வாசனையால் காற்றை மணம் சேர்க்குதே.

கொஞ்ச நாட்கள் இங்கே வாழ்பவர்கள்

இதை மிகவும் நேசித்து வெளியேறத் தயங்குவர்.

பிரகாசிக்கும் சந்திரன் தன் வெளிச்சத்தைக் கொடுக்கிறது;

என் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

என் நேசத்திற்குரியவரே, உம் அழகு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே.

என் இருதயம் இனிமையாய் உம்மை நேசிக்கிறதே;

எப்படி மகிழ்வுடன் நடனமாடாதிருப்பேன்‌?

என் இருதயத்தில் நீர் இருக்கிறீர்;

என் வாழ்நாளெல்லாம் நான் உம்மோடு கூட இருப்பேன்.

என் இருதயம் எப்போதும் உமக்காய் ஏங்குகிறது,

உம்மை நேசிப்பதால் நாள் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

என் நேசத்துக்குரியவரே, என் முழு அன்பையும் உமக்குக் கொடுத்து விட்டேன்.

என் இருதயம் எப்போதும் உமக்காய் ஏங்குகிறது,

உம்மை நேசிப்பதால் நாள்முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

என் நேசத்துக்குரியவரே, என் முழு அன்பையும் உமக்குக் கொடுத்து விட்டேன்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க