கிறிஸ்தவ பாடல் | தேவனின் மாம்சமாகுதல் ஒரு எளிய விஷயமா? (Tamil Subtitles)

34 |ஜூன் 16, 2021

மனிதர்களுக்கு தேவன் அவர்களால் காண இயலாத

அல்லது தொட்டுணரமுடியாத ஆவியானவராக இருக்கிறார்.

பூமியில் தேவனின் மூன்று கட்ட கிரியைகள் காரணமாக,

சிருஷ்டித்தல், மீட்டெடுத்தல் மற்றும் அழித்தல்,

மனிதனுக்கு நடுவில் கிரியையைச் செய்வதற்கு

அவர் பல்வேறு காலங்களில் தோன்றுகிறார்.

அவரது முதல் வருகை மீட்பின் யுகத்தின் போதாகும்.

அவர் நிச்சயமாக ஒரு யூத குடும்பத்தில் வந்தார்.

தேவன் மனிதனில் கிரியையை செய்வதற்கு அவரது மாம்சத்தில் வந்த மாம்சத்தை

அவரது மீட்பின் கிரியையில் பாவநிவாரணபலியாக பயன்படுத்தினார்.

இவ்வாறு, தேவனை முதலில் கண்டவர்கள் கிருபையின் யுகத்தின் யூதர்கள்தான்.

தேவன் மாம்சத்தில் கிரியை புரிந்தது அதுவே முதல் முறை ஆகும்.

இவ்வாறு, தேவனை முதலில் கண்டவர்கள் கிருபையின் யுகத்தின் யூதர்கள்தான்.

தேவன் மாம்சத்தில் கிரியை புரிந்தது அதுவே முதல் முறை ஆகும்.

ஆட்கொண்டு பரிபூரணப்படுத்துவதே ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையாகும்.

ஆகவே மாம்சத்தில் கிரியையை செய்வதன் மூலம்,

அவர் மீண்டும் ஒருவிசை மேய்க்கிறார்.

முதல் கட்டத்தில் அவர் தொட்டுணர முடியாத ஆவியானவராக இருந்தார்;

இறுதி இரண்டு கட்டங்களில், அவர் மாம்சமாக உணரப்படுகிற ஆவியானவராக இருக்கிறார்.

இவ்வாறு, மனிதனின் பார்வையில், தேவன் மீண்டும் மனிதனாகிறார்

மற்றும் அவருக்கு தேவனுடைய தோற்றம் மற்றும் உணர்வு எதுவுமில்லை.

மனிதன் தேவனை ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் பார்க்கிறான்,

இது அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் தருகிறது.

மீண்டும் மீண்டும், தேவனது அசாதாரண கிரியை

ஆண்டுகளாக கொண்டிருந்த நம்பிக்கைகளைச் சிதறடித்து

யாவரையும் திகைத்துப்போகச் செய்தது!

மீண்டும் மீண்டும், தேவனது அசாதாரண கிரியை

ஆண்டுகளாக கொண்டிருந்த நம்பிக்கைகளைச் சிதறடித்தது.

தேவன் வெறுமனே பரிசுத்த ஆவியாக மட்டும் இல்லை,

ஏழு மடங்கு அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய ஆவியாக இருக்கிறார்,

அவர் ஒரு சாதாரண மனிதராகவும் இருக்கிறார்.

அவர் ஆணாகவோ பெண்ணாகவோ மாறமுடியும்.

இரண்டு மாம்சமாதலும் மனிதனுக்கு பிறந்திருக்கிறது,

ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றல்ல.

ஒருவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார்,

மற்றொருவர் ஆவியிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்டிருந்தார்.

மனுஉருவான மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்கின்றார்கள்,

ஆனால் ஒருவர் மீட்பின் கிரியையைச் செய்யும்போது,

மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கிறார்.

இருவரும் பிதாவாகிய தேவனையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்,

ஆனால் ஒருவர் அன்பும் இரக்கமும் நிறைந்த மீட்பர்,

மற்றொருவர் கோபமும் நியாயத்தீர்ப்பும் நிறைந்த நீதிபரர்.

ஒருவர் மீட்பின் கிரியையைத் தொடங்கிய தலைமை தளபதியாக இருக்கும்போது,

மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கின்ற நீதியுள்ள தேவனாக இருக்கிறார்.

மனுஉருவான மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்கின்றார்கள்,

இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்கின்றார்கள்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

சிரமங்களை அல்லது துன்பங்களை எதிர்கொள்ளும்போது, ​​தேவன் மீது நம்முடைய நம்பிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க