கிறிஸ்தவ பாடல் | ஒவ்வொரு தேசமும் சர்வவல்லமையுள்ள தேவனை ஆராதிக்கிறது | Praise the Return of the Lord

செப்டம்பர் 22, 2020

நட்சத்திரங்கள் நிறைந்த, மௌனமான மற்றும் அமைதியான இரவு வானத்தின் கீழ், இரட்சகர் திரும்பி வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கூட்ட கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியான இசைக்கு ஆடிப் பாடி நடனமாடுகின்றனர். "தேவன் திரும்பி வந்துள்ளார்" மற்றும் "தேவன் புதிய வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்ற மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் கேட்கும்போது, அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர் மற்றும் உற்சாகமடைகின்றனர். அவர்கள் நினைக்கின்றனர்: "தேவன் திரும்பி வந்துள்ளார்? அவர் ஏற்கனவே தோன்றியிருக்கிறார்?" ஆர்வத்துடனும், நிச்சயமின்மையுடனும், ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் தேவனுடைய புதிய வார்த்தைகளைத் தேடும் பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றனர். அவர்களுடைய கடினமான தேடுதலில், சிலர் கேள்வி கேட்கின்றனர், அதேவேளையில் மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்கின்றனர். சிலர் விமர்சனம் இல்லாமல் பார்க்கின்றனர், மற்றவர்கள் பரிந்துரைகள் செய்கின்றனர் மற்றும் வேதாகமத்தில் பதில்களைத் தேடுகின்றனர். அவர்கள் பார்க்கின்றனர், ஆனால் இறுதியில் அது பலனற்றதாய் இருக்கிறது…. அவர்கள் சோர்ந்துபோகும்போது, ஒரு சாட்சி அவர்களுக்கு ராஜ்யத்தின் கால வேதாகம பிரதி ஒன்றைக் கொண்டு வருகின்றார், அவர்கள் புத்தகத்திலுள்ள வார்த்தைகளால் ஆழமாக கவர்ந்திழுக்கப்படுகின்றனர். இது உண்மையிலேயே என்ன விதமான புத்தகம்? அத்தப் புத்தகத்தில் தேவன் வெளிப்படுத்தியுள்ள புதிய வார்த்தைகளை அவர்கள் உண்மையிலேயே கண்டுபிடித்திருக்கின்றார்களா? தேவன் தோன்றியிருப்பதை அவர்கள் வரவேற்றிருக்கின்றார்களா?

ஒவ்வொரு தேசமும் சர்வவல்லமையுள்ள தேவனை ஆராதிக்கிறது

1 இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

2 அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம்.

3 கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பரலோகத்திலுள்ள தேவன் பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழ்வதைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார்.

4 இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?

5 இறுதியில் ஒவ்வொரு தேசமும் இந்தச் சாதாரண மனிதரை ஆராதிப்பதோடு, இந்த முக்கியமற்ற மனிதருக்கு நன்றி செலுத்திக் கீழ்ப்படிவார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களையும் இரட்சித்த அவர் கொண்டுவந்த சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக அது இருக்கிறது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான மோதலைத் தளர்த்தியது, இருவருக்கும் இடையேயான தூரத்தையும் குறைத்தது, தேவன் மற்றும் மனிதனுடைய நினைவுகளுக்கு இடையிலான தொடர்பைத் திறந்து கொடுத்தது. தேவனுக்காக இன்னும் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவரும் அவரே. இது போன்ற ஒரு சாதாரண மனிதர் உன் நம்பிக்கை மற்றும் போற்றுதலுக்கு தகுதியற்றவரா? அத்தகைய சாதாரண மாம்சம் கிறிஸ்து என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமாக இல்லையா? அத்தகைய சாதாரண மனிதர் மனிதர்களிடையே தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாதா? மனிதகுலத்தைப் பேரழிவிலிருந்து இரட்சித்த அத்தகைய மனிதர், உங்களுடைய அன்பிற்கும், அவரைப் பற்றிக்கொள்ளுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் தகுதியற்றவரா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்" என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க