தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 325

ஏப்ரல் 17, 2023

ஒருசில மக்கள் சத்தியத்தைக் குறித்தோ, நியாயத்தீர்ப்பைக் குறித்தோ சிறிதளவேனும் மகிழ்ச்சியடைவதில்லை. அதற்கு மாறாக அதிகாரத்திலும் ஐசுவரியத்திலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுபோன்ற மக்கள் அதிகாரத்தை நாடித் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தில் உள்ள செல்வாக்கான சபைகளையே தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் வேதாகமக் கல்லூரிகளிலிருந்து வரும் போதகர்களையும் ஆசிரியர்களையும் மட்டுமே தேடி அலைந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் சத்தியத்தின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தாலும், பாதியளவு விசுவாசம் உடையவர்களாவர். அவர்கள் தங்கள் மனதையும் இருதயத்தையும் முழுவதுமாகக் கொடுப்பதற்கு முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாய் தேவனுக்கென்று பயன்படுத்தப்படும் என்று கூறும், ஆனால் அவர்கள் பிரபலமான போதகர்களையும் ஆசிரியர்களையும் கவனித்துக்கொண்டு இருப்பார்கள், மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதில்லை. அவர்களின் இருதயம் புகழின்மீதும் செல்வத்தின்மீதும் மகிமையின்மீதும் நிலைத்து இருக்கும். இதுபோன்ற அற்பமான மனிதனால் அநேக மக்களை ஜெயங்கொள்ள சாத்தியமில்லை என்றும், சாதாரண நபரால் மனிதனைப் பரிபூரணமாக்க சாத்தியமில்லை என்றும் எண்ணுகிறார்கள். புழுதியின்மீதும் குப்பைமீதும் இருக்கும் அற்பமான மனிதர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கச் சாத்தியமில்லை என்று எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தேவனுடைய இரட்சிப்பின் இலக்குகளாக இருந்தார்களானால், வானமும் பூமியும் தலைகீழாகிவிடும் என்றும், எல்லா மனிதர்களும் இத்தகையோரைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒன்றுமில்லாதவர்களை தேவன் பரிபூரணப்படுத்த தெரிந்துகொண்டார் என்றால், இந்தச் சிறந்த மனிதர்கள் தேவனாகவே மாறிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இவர்களுடைய கண்ணோட்டங்கள் அவிசுவாசத்தினால் கறைபடிந்து விட்டது. அவிசுவாசத்திற்கு அப்பால் இவர்கள் ஒரு மதிகெட்ட மிருகங்கள் ஆவார்கள். அவர்கள் தகுதி, அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்கள் பெரிய கூட்டங்களையும் சபைப் பிரிவுகளையும் மட்டுமே மதிக்கிறார்கள். கிறிஸ்துவினால் வழி நடத்தப்படுபவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கிறிஸ்துவுக்கும், சத்தியத்திற்கும், ஜீவனுக்கும் தங்கள் புறமுதுகைக் காட்டுகிற துரோகிகளாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் போற்றுவது கிறிஸ்துவின் தாழ்மையை அல்ல, மாறாக முக்கிய நிலையில் காணப்படும் அந்தக் கள்ள போதகர்களையே போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் அன்பையோ அல்லது ஞானத்தையோ ஆராதிக்கவில்லை. ஆனால் இவ்வுலகின் அழுக்கில் புரண்டுக்கொண்டு இருக்கும் தன்னிச்சைப் பிரியர்களையே ஆராதிக்கிறீர்கள். நீங்கள் தலை சாய்க்க இடமில்லாத கிறிஸ்துவின் வேதனையைப் பார்த்து நகைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்தக் காணிக்கைகளை வஞ்சிக்க தேடி அலைந்து ஒழுக்கக் கேட்டில் வாழும் பிணங்களைப் போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து துன்பம் அனுபவிப்பதை விரும்பவில்லை; ஆனால் அந்திக்கிறிஸ்துக்கள் உங்களுக்கு மாம்சத்தையும், வார்த்தைகளையும், கட்டுப்பாட்டையும் மட்டுமே கொடுத்தாலும், நீங்கள் சந்தோஷமாக அந்தப் பொறுப்பற்ற அந்திகிறிஸ்துவின் கரங்களிலேயே உங்களை ஒப்புக்கொடுக்கின்றீர்கள். இப்போதும்கூட உங்கள் இருதயம் இன்னும் அவர்களுக்கு நேராகவும் அவர்களுடைய பெயர் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவற்றின் பக்கமாகவும் திரும்புகிறது. இருந்தாலும் நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமானது என்றும், இதைச் செய்ய விருப்பம் இல்லை என்ற ஒரு எண்ணத்தையும் உடையவராக இருக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறுகிறேன். இந்த நாட்களில் உங்களுக்கு வேறு வழி இல்லை என்பது மட்டுமே நீங்கள் அவரை இந்நாள் வரையிலும் பின்பற்றியிருக்கிறீர்கள் என்பதற்குக் காரணமாக இருக்கிறது. மிகவும் பிரபலமானவர்களின் உருவங்கள் உங்கள் இருதயத்தில் குவிந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும், கிரியைகளையும் அல்லது அவர்களது செல்வாக்கான வார்த்தைகளையும், கரங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர்கள் உங்களுடைய இருதயத்தில் எக்காலத்திலும் உயர்வானவர்களாகவும், கதாநாயகர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்துவுக்கு அவ்வாறு இடமளிக்கப்படவில்லை. அவர் உங்களுடைய இருதயத்தில் முக்கியமற்றவராக, ஆராதிக்கத் தகுதியற்றவராக இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகவும் சாதாரணமானவராகவும், குறைந்த செல்வாக்கு உள்ளவராகவும், உயர்வற்றவராகவும் இருக்கின்றார்.

எந்த நிலையிலும் சத்தியத்தை மதிக்காதவர்கள் சத்தியத்திற்கு அவிசுவாசிகளாகவும் துரோகிகளாகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்துவின் அங்கீகாரத்தைப் பெறமுடியாது. இப்போது உங்களுக்குள் எந்த அளவிற்கு அவிசுவாசமும், கிறிஸ்துவை மறுதலித்தலும் இருக்கிறது என்று காண முடிகிறதா? நீங்கள் சத்தியத்தின் வழியைத் தெரிந்துகொண்டு இருப்பதால், நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் சேவிக்க வேண்டும்; தெளிவற்றவர்களாகவும், அரை மனதுள்ளவர்களாகவும் இருக்கவேண்டாம் என்று நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவன் இந்த உலகத்திற்கோ அல்லது ஒரு தனிநபருக்கோ உரியவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் யாரெல்லாம் உண்மையாக அவரை விசுவாசிக்கிறார்களோ, அவரைத் தொழுது கொள்ளுகிறார்களோ, பக்தியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கே உரியவர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க