தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 324

ஏப்ரல் 17, 2023

இப்போது நீங்கள் அனைவரும் தேவன் மீதான விசுவாசத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பு நான் பேசிய தேவன் மீதான விசுவாசத்தின் அர்த்தமானது உங்கள் நேர்மறையான துவக்கத்துடன் தொடர்புடையதாகும். இன்று வித்தியாசமானதாக இருக்கிறது. இன்று தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் சாராம்சம் என்னவென்று ஒரு பகுப்பாய்வு செய்யப்போகிறேன். நிச்சயமாகவே இது உங்களை எதிர்மறையான கருத்துகளில் இருந்து விலக்கி வழிநடத்தும். இதை நான் செய்யவில்லையென்றால் நீங்கள் உங்களுடைய உண்மையான சுயரூபத்தை அறியாமல், எக்காலத்திலும் உங்களுடைய பக்தியைக் குறித்தும் விசுவாசத்தைக் குறித்தும் மேன்மை பாராட்டிக்கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் உள்ள அருவருப்பை நான் எடுத்து கூறவில்லையென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு எல்லா மகிமையையும் நீங்களே எடுத்துக் கொள்வீர்கள் என்று சொல்வது நியாயமானதாக இருக்கும். உங்களுடைய ஆணவம், இறுமாப்பான சுபாவங்களினால் உந்தப்பட்டு உங்களுடைய சொந்த மனசாட்சியை மறுதலித்து, கிறிஸ்துவுக்கு விரோதமாகக் கலகம் செய்து, அவரை எதிர்த்து, உங்கள் அருவருப்பை வெளிப்படுத்துகிறீர்கள், இதன் மூலம் உங்கள் உள்நோக்கங்கள், எண்ணங்கள், களியாட்ட வாஞ்சைகள், பேராசை மயக்கம் ஆகியவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இன்னமும் கிறிஸ்துவின் கிரியையைக் குறித்த உங்கள் நீண்ட கால உணர்வுகளைப் பற்றியே பிதற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்; மேலும் கிறிஸ்து நீண்ட காலங்களுக்கு முன்பு பேசிய சத்தியங்களையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். இதுதான் அசுத்தமில்லாத உங்கள் விசுவாசம். நான் மனிதனை முற்றிலும் ஒரு கண்டிப்பான நெறிமுறைக்குள் வைத்துள்ளேன். உங்களுடைய விசுவாசம் உள்நோக்கத்துடனும் நிபந்தனைகளுடனும் வருமானால், நான் அதற்கு மாறாக உங்களுடைய பெயரளவிலான விசுவாசத்தைத் தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் தங்கள் உள்நோக்கத்தினால் என்னை வஞ்சித்து நிபந்தனைகளினால் என்னை மிரட்டி பணியவைப்பவர்களை நான் வெறுக்கிறேன். மனிதன் எனக்கு முற்றிலும் உண்மையாய் இருப்பதையும், விசுவாசம் என்னும் ஒரே வார்த்தையின் பொருட்டு அந்த விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அனைத்து காரியங்களையும் செய்வதையுமே விரும்புகிறேன். நான் உங்களை எப்போதும் நேர்மையுடன் நடத்தியிருப்பதனால், என்னை மகிழ்விக்கும் நோக்கில் முகஸ்துதிகளைப் பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன், அதனால் நீங்களும் என்னிடம் மெய்யான விசுவாசத்துடனே செயல்பட வேண்டுமென்று விரும்புகிறேன். விசுவாசம் என்று வரும்போது அநேகர் தங்களுக்கு விசுவாசம் இருப்பதால் தாங்கள் தேவனைப் பின்பற்றுகிறோம் என்று எண்ணுகிறார்கள், மற்றபடி இதுபோன்ற துன்பங்களை சகித்துக்கொள்ள மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தேவன் உண்டென்று நம்புவீர்களானால் ஏன் அவரை தொழுதுகொள்ளுகிறது இல்லை? ஏன் அவரைப் பற்றி சிறிதளவு பயம் உங்கள் இருதயத்தில் இருப்பதில்லை? நீங்கள் கிறிஸ்துவை மனித அவதாரம் எடுத்த தேவன் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும்போது ஏன் அவரை அவமதிக்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவரிடம் அவபக்தியுடன் நடந்துகொள்ளுகிறீர்கள்? நீங்கள் ஏன் வெளிப்படையாக அவரை நியாயம் தீர்க்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவருடைய ஒவ்வொரு அசைவையும் உளவு பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? ஏன் அவருடைய திட்டங்களுக்கு ஒப்புக்கொடுப்பதில்லை? ஏன் அவருடைய வார்த்தைகளின்படி செயல்படுவதில்லை? ஏன் அவருடைய காணிக்கைகளை கொள்ளையடித்து பறித்துக்கொள்ள எண்ணுகிறீர்கள்? ஏன் கிறிஸ்துவின் ஸ்தானத்திலிருந்து பேச வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? அவருடைய கிரியைகளும் வார்த்தைகளும் சரியானதுதானா என்று ஏன் நியாயம் தீர்க்கப் பார்க்கிறீர்கள்? அவருக்கு பின்னால் ஏன் தைரியமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்? இவைகளும் இன்னும் மற்றவைகளும்தான் உங்களுடைய விசுவாசத்தைக் கட்டி எழுப்புகின்றனவா? என்ற கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடைய வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் கிறிஸ்துவின் மீதுள்ள அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகள் மட்டுமே வெளிப்படுகின்றன. நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் உள்ள உள்நோக்கத்திலும் குறிக்கோள்களிலும் உங்களுடைய அவிசுவாசமே வெளிப்படுகிறது. உங்களுடைய கூர்மையான பார்வையின் தன்மையில் கிறிஸ்துவின்மீதுள்ள அவிசுவாசமே இருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு நிமிடமும் அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகளைப் பற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு வினாடியும் நீங்கள் கிறிஸ்துவை மறுதலிக்கும் ஆபத்தில் இருக்கிறீர்கள், ஏனென்றால் உங்களுடைய உடம்பில் ஓடும் இரத்தம் மானிட உருவெடுத்து வந்த கிறிஸ்துவின் மீது அவிசுவாசத்தினாலே நிரம்பியுள்ளது. ஆகவே தேவன் மீது கொண்டுள்ள விசுவாசப் பாதையில் நீங்கள் விட்டுச்செல்லும் அடிச்சுவடுகள் நிஜமானவை அல்ல என்று சொல்கிறேன். நீங்கள் தேவன் மீதான விசுவாசப் பாதையில் நடந்தாலும், உங்களுடைய பாதங்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கவில்லை—நீங்கள் சிரத்தையற்று மட்டுமே இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை ஒருபோதும் முழுமையாக விசுவாசிப்பதில்லை மற்றும் அதை உடனடியாக அப்பியாசிக்க முடியாமல் இருக்கிறீர்கள். உங்களுக்குக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. எப்போதும் கிறிஸ்துவைக் குறித்து கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருக்கிறீர்கள், இதுவே உங்களுக்கு அவர் மீது விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கான மற்றொரு காரணமாகும். கிறிஸ்துவின் கிரியையைக் குறித்து எப்போதும் சந்தேகத்துடன் இருப்பது, கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டும் செவிடன் போல் நடந்துகொள்வது, கிறிஸ்துவால் செய்யப்பட்ட எந்தக் கிரியையாக இருப்பினும் அது குறித்து கருத்துக் கூறுவது, இந்தக் கிரியையைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பது, என்ன விளக்கங்களை கேட்டாலும் உங்களுடைய கருத்தை புறம்பே தள்ள சிரமப்படுவது மற்றும் இதுபோன்ற காரியங்கள் எல்லாம் உங்களுடைய இருதயத்தில் அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகளாக கலந்து இருக்கின்றன. நீங்கள் கிறிஸ்துவின் கிரியையைப் பின்பற்றி, ஒருபோதும் பின்னாக விழுந்துபோகாமல் இருந்தாலும், அதிகமானக் கலகக் குணம் உங்கள் இருதயத்தில் கலந்து இருக்கிறது. இந்தக் கலகக் குணமே தேவன் மீதான உங்கள் விசுவாசத்திலுள்ள பரிசுத்தமற்ற தன்மையாகும். ஒருவேளை நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்கலாம், ஆனால் இதனுள் உள்ள உங்கள் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பீர்களேயானால், நீங்கள் அழிவுக்கான மக்களில் ஒருவராக இருக்கிறீர்கள், ஏனென்றால் தேவன் அவர்மீது சந்தேகம் கொண்டவர்களையோ, அவரை தேவன் என்று ஒருபோதும் விசுவாசியாமல் அவரை ஆர்வமில்லாமல் பின்தொடர்கிறவர்களையோ அல்ல, அவரை உண்மையாய் விசுவாசிக்கிறவர்களை மட்டுமே அவர் பரிபூரணப்படுத்துகிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க