தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 322

மார்ச் 7, 2023

மனிதனிடம் விசுவாசத்தின் நிச்சயமற்ற வார்த்தையே உள்ளது, விசுவாசத்தை எது உருவாக்குகிறது என்றும், அதைவிட அவனுக்கு ஏன் விசுவாசம் இருக்கிறது என்றும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லை. மனிதன் மிகக் குறைவாகவே புரிந்துகொள்ளுகிறான், மற்றும் மனிதன் மிகக் குறைவுள்ளவனாகவும் இருக்கிறான்; என்னிடம் அவனுக்கு விசுவாசம் இருப்பினும், அது அக்கறையற்றதும் அறியாமைகொண்டதுமே ஆகும். விசுவாசம் என்றால் என்னவென்றும், அல்லது அவனுக்கு ஏன் என்னிடம் விசுவாசம் உள்ளது என்றும் தெரியாவிட்டாலும், அவன் தொடர்ந்து விடாப்பிடியான ஒரு வெறியோடு என்னை விசுவாசிக்கிறான். நான் மனிதனிடம் கேட்பது என்னவென்றால் இவ்விதம் வீணாக விடாப்பிடியான வெறியோடு என்னை நோக்கிக் கூப்பிட வேண்டாம் அல்லது முறையற்ற வகையில் என்னில் விசுவாசம் கொள்ள வேண்டாம் என்பதே, ஏனெனில் நான் செய்யும் கிரியை மனிதன் என்னைப் பார்ப்பதற்காகவும் என்னைத் தெரிந்துகொள்ளுவதற்காகவுமே அல்லாமல் என்னால் ஈர்க்கப்பட்டு என்னை ஒரு புதிய வெளிச்சத்தில் காண்பதற்காகவல்ல. நான் ஒருகாலத்தில் அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தினேன் மேலும் பல அதிசயங்களைச் செய்துகாட்டினேன் மற்றும் அக்காலத்தின் இஸ்ரவேலர்கள் என்னிடம் மாபெரும் அபிமானத்தைக் காட்டினார்கள் மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளை விரட்டிய என் அசாதாரணமான வல்லமையைப் போற்றிவணங்கினார்கள். அக்காலத்தில், யூதர்கள் என் சுகமளிக்கும் வல்லமை உன்னதமானது, அசாதாரணமானது என்று எண்ணினர்—மற்றும் என்னுடைய பல கிரியைகளின் காரணமாக, அவர்கள் யாவரும் என்னை வணங்கினார்கள், மேலும் என்னுடைய சகல வல்லமைக்காகவும் மிகுந்த அபிமானம் கொண்டார்கள். இவ்வாறு, நான் அதிசயங்களைச் செய்வதைப் பார்த்த பலர் என்னை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார்கள். நான் நோயாளிகளைக் குணப்படுத்துவதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்துகொண்டார்கள். நான் பல அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தினேன், இருப்பினும் மக்கள் என்னை ஒரு கைதேர்ந்த வைத்தியர் போல்தான் பார்த்தார்கள்; அவ்வாறே, அக்காலத்தில் நான் மக்களிடம் பல போதனை வார்த்தைகளைப் பேசினேன், இருந்தாலும் அவர்கள் தமது சீடனை விட மேலான ஒரு வெறும் போதகரைப் போன்றே என்னைக் கருதினார்கள். இன்றும், என் கிரியைகளின் வரலாற்று ஆவணங்களை மனிதன் கண்ட பின்னும், நான் நோயாளிகளைக் குணப்படுத்தும் ஒரு பெரும் வைத்தியர் என்றும், அறியாமையில் இருக்கிறவர்களுக்கு ஒரு போதகர் என்றுமே தொடர்ந்து விளக்கம் அளிக்கிறார்கள், மேலும் அவர்கள் என்னை இரக்கமுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வரையறுத்துள்ளார்கள். வேதவசனங்களை வியாக்கியானம் செய்பவர்கள் குணப்படுத்தலில் என் வல்லமையை விஞ்சியிருக்கலாம், அல்லது தங்கள் போதகரைத் தற்போது விஞ்சியிருக்கும் சீடர்களாகக் கூட இருக்கலாம், ஆயினும் உலகெங்கும் அறியப்பட்ட பெயர்களைக் கொண்ட பெரும் புகழ்பெற்ற இத்தகைய மனிதர்கள், என்னை வெறும் வைத்தியர் என்றே மிகக் கீழாகக் கருதுகின்றனர். என்னுடைய கிரியைகள் கடற்கரை மணலத்தனையாய் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, என்னுடைய ஞானம் சாலோமனின் குமாரர்கள் எல்லோரையும் விட மிஞ்சியிருக்கிறது, எனினும் மக்கள் என்னை ஒரு சாதாரண வைத்தியர் என்றும் அறியப்படாத மக்களின் போதகர் என்றும் மட்டுமே நினைக்கிறார்கள். நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையைப் பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட்செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாகவும் இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது. என் கிருபைக்காக யூதர்கள் என்னைப் பின்பற்றினார்கள், நான் சென்ற இடம் எல்லாம் என்னைப் பின்தொடர்ந்தார்கள். குறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட இந்த அறியாமையில் இருக்கும் மனிதர்கள் நான் வெளிக்காட்டிய அடையாளங்களையும் அற்புதங்களையும் மட்டுமே காண விரும்பினார்கள். மாபெரும் அதிசயங்களைக் செய்யக்கூடிய யூத வீட்டாரின் தலைவராகவே அவர்கள் என்னைக் கருதினர். ஆகவே, மேலும் மனிதர்களிடம் இருந்து நான் பிசாசுகளைத் துரத்தியபோது அது அவர்களிடையே அதிக விவாதத்தை எழுப்பியது: நான் எலியா என்றும், நானே மோசே என்றும், நானே எல்லா தீர்க்கதரிசிகளிலும் முந்தியவர் என்றும், எல்லா வைத்தியர்களிலும் நானே பெரியவர் என்றும் அவர்கள் கூறினார்கள். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்று நானே கூறினேனே அல்லாமல் நான் இருப்பதையோ அல்லது என் அடையாளத்தையோ யாரும் அறிய முடியவில்லை. என் பிதா இருக்கும் இடம் பரலோகம் என்று நான் கூறினேனே தவிர நானே தேவனின் குமாரன் என்றும் நானே தேவன் என்றும் யாரும் அறியவில்லை. எல்லா மனிதகுலத்திற்கும் மீட்பைக் கொண்டுவந்து மனிதகுலத்தை மீட்பேன் என்று நானே கூறினேனே அல்லாமல், மனிதகுலத்தின் மீட்பர் நானே என்று ஒருவரும் அறியவில்லை, மேலும் மனிதன் என்னை ஒரு தயாளமும் இரக்கமும் கொண்ட மனிதர் என்றே அறிந்திருந்தனர். என்னைப் பற்றிய யாவையையும் என்னால் விளக்க முடிந்ததே தவிர, ஒருவரும் என்னை அறியவில்லை, மற்றும் ஒருவரும் நானே ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்று நம்பவில்லை. இதுவே மக்கள் என்னிடத்தில் வைத்த விசுவாசம், மற்றும் அவர்கள் என்னை முட்டாளாக்க முயற்சிசெய்த விதம். என்னைப் பற்றி இத்தகைய எண்ணம் கொண்டிருக்கும் போது அவர்களால் எனக்கு சாட்சியாக எப்படி இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க