தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 321

மார்ச் 21, 2023

உங்களுக்குள் தேவன் மகிழ்ந்திருக்க நீங்கள் ஏங்குகிறீர்கள், ஆனாலும் நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். இங்கே பிரச்சனை என்ன? நீங்கள் அவர் மீது முழு விசுவாசம் வைத்திருக்க அவருடைய வார்த்தைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் அவருடைய கையாளுதலையோ அல்லது கிளைநறுக்குதலையோ அல்ல, அவருடைய ஒவ்வொரு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அப்படியானால், இங்கே பிரச்சனை என்ன? கடைசி ஆய்வில், உங்கள் விசுவாசம் ஒருபோதும் ஒரு கோழிக் குஞ்சை உருவாக்க முடியாத ஒரு வெற்று முட்டைக் கூடாகும். உங்கள் விசுவாசம் உங்களுக்கு சத்தியத்தைக் கொண்டு வரவில்லை அல்லது உங்களுக்கு ஜீவனைக் கொடுக்கவில்லை, மாறாக உங்களுக்கு ஒரு மாயையான வாழ்வாதாரம் மற்றும் நம்பிக்கை குறித்த உணர்வை அளித்துள்ளது. இந்த வாழ்வாதாரம் மற்றும் நம்பிக்கை குறித்த உணர்வுதான் தேவனை விசுவாசிப்பதில் உங்கள் நோக்கமாயிருக்கிறது, சத்தியமும் ஜீவனும் அல்ல. ஆகவே, தேவன்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் முறை, அடிமைத்தனம் மற்றும் வெட்கமின்மை ஆகியவற்றின் மூலம் தேவனுக்கு உகந்தவராக முயற்சிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, இதை எந்த வகையிலும் உண்மையான விசுவாசமாகக் கருத முடியாது. இது போன்ற விசுவாசத்தால் ஒரு கோழிக் குஞ்சு எப்படிப் பிறக்கக் கூடும்? வேறு விதமாகச் சொல்வதானால், இது போன்ற விசுவாசம் என்னத்தைச் சாதிக்க முடியும்? தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம், உங்கள் சொந்த நோக்கங்களை அடைந்திட அவரைப் பயன்படுத்துவதாகும். மேலும், இது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதல் குறித்த உண்மை அல்லவா? நீங்கள் பரலோகத்தில் தேவன் இருப்பதை விசுவாசிக்கிறீர்கள், பூமியில் தேவன் இருப்பதை மறுக்கிறீர்கள், ஆனாலும் உங்கள் கருத்துக்களை நான் அங்கீகரிக்கவில்லை. தரையில் கால்களை வைத்து, பூமியிலுள்ள தேவனைச் சேவிப்பவர்களை மட்டுமே நான் பாராட்டுகிறேன், ஆனால் பூமியில் இருக்கும் கிறிஸ்துவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்ல. அத்தகையவர்கள் பரலோகத்திலுள்ள தேவனிடம் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கடைசியில் அவர்கள் துன்மார்க்கரைத் தண்டிக்கும் என் கைக்குத் தப்பிக்க மாட்டார்கள். இந்த ஜனங்கள் துன்மார்க்கர்கள். அவர்கள் தேவனை எதிர்க்கும் பொல்லாதவர்கள், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதில்லை. நிச்சயமாக, அவர்களின் எண்ணிக்கை கிறிஸ்துவைத் தெரியாத, மேலும் ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் உள்ளடக்கியுள்ளது. நீ பரலோகத்திலுள்ள தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் வரை நீ விரும்பியபடி கிறிஸ்துவுக்காகச் செயல்பட முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? தவறு! கிறிஸ்துவைக் குறித்த உன் அறியாமை பரலோகத்தில் உள்ள தேவனை அறியாமல் இருப்பது ஆகும். பரலோகத்திலுள்ள தேவனிடம் நீ எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், அது வெறும் பேச்சும் மற்றும் பாசாங்கும் தான், ஏனென்றால் பூமியிலுள்ள தேவன் மனிதன் சத்தியத்தைப் பெறுவதிலும் அதிக ஆழமான அறிவைக் கொண்டிருப்பதிலும் கருவியாக இருக்கிறார், ஆனால் அதைவிட அதிகமாக மனிதனைத் தண்டித்தல், பின்னர் துன்மார்க்கரைத் தண்டிப்பதற்கான உண்மைகளைப் பெறுவதில் கருவியாக இருக்கிறார். இங்குள்ள நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நீ புரிந்து கொண்டாயா? நீ அவற்றை அனுபவித்திருக்கிறாயா? ஒரு நாள் இந்த உண்மையை நீங்கள் விரைவில் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவனை அறிய, நீ பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, பூமியிலுள்ள தேவனையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முன்னுரிமைகளில் குழப்பமடைய வேண்டாம் அல்லது இரண்டாம் நிலையானது முதன்மையானதை மீற அனுமதிக்காதீர்கள். இந்த வழியில் மட்டுமே உன்னால் உண்மையிலேயே தேவனோடு ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும், தேவனிடம் நெருங்கி வர முடியும், மேலும் உன் இருதயத்தை அவருக்கு அருகில் கொண்டுவர முடியும். நீ அநேக ஆண்டுகளாக விசுவாசமாக இருந்திருந்தால், என்னுடன் நீண்ட காலமாக இணைந்திருந்தும், என்னிடமிருந்து தொலைவில் இருந்தால், நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் நீ அடிக்கடி தேவனின் மனநிலையைப் புண்படுத்துகிறாய், உன் முடிவு கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். என்னுடன் அநேக ஆண்டுகளாக இணைந்திருப்பது உன்னை மனிதத்தன்மையையும் சத்தியத்தையும் கொண்ட ஒரு நபராக மாற்றத் தவறியது மட்டுமல்லாமல், மேலும், உன் பொல்லாத வழிகளை உன் சுபாவத்துக்குள் பதித்திருந்தால், உங்களுக்கு முன்பு போல இரு மடங்கான அகந்தை மட்டுமல்லாமல், என்னைக் குறித்த உங்கள் தவறானப் புரிதல்களும் பெருகிவிட்டன, அதாவது நீ என்னை உன் சிறிய சேவகனாகக் கருதுகிறாய், அப்படியானால் நான் சொல்கிறேன், உன் நோய் இனி தோல் ஆழத்தில் இல்லாமல், உன் எலும்புகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. உன் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக நீ காத்திருக்க வேண்டும் என்பதே இன்னும் மீதமிருக்கிறது. நீ உன் தேவனாக இருக்கும்படி என்னை மன்றாட வேண்டியதில்லை, ஏனென்றால் நீ மரணத்திற்குத் தகுதியான பாவத்தை, மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துள்ளாய். நான் உன்மீது இரக்கம் காட்ட முடிந்தாலும், பரலோகத்தில் உள்ள தேவன் உன் ஜீவனை எடுக்கும்படி வலியுறுத்துவார், ஏனென்றால் தேவனின் மனநிலைக்கு எதிரான உன் குற்றம் சாதாரண பிரச்சினை அல்ல, ஆனால் மிகவும் கடுமையான இயல்புடையது. நேரம் வரும்போது, உன்னிடம் முன்பே சொல்லாததற்காக என்னைக் குறை கூற வேண்டாம். நீ பூமியிலுள்ள தேவனான கிறிஸ்துவுடன் ஒரு சாதாரண மனிதனாக இணைந்திருக்கும்போது, அதாவது, இந்த தேவன் ஒரு நபரைத் தவிர வேறில்லை என்று நீ விசுவாசிக்கும்போது, அப்போது நீ அழிந்துவிடுவாய் என்ற கருத்துக்கே இது மீண்டும் வருகிறது. இது உங்கள் அனைவருக்குமான எனது ஒரே புத்திமதியாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க