தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 319

மார்ச் 21, 2023

நீங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக வெகுமதியைப் பெறவும் மற்றும் தேவனால் தயவைப் பெறவும் விரும்புகிறீர்கள். எல்லோரும் தேவனை விசுவாசிக்கத் தொடங்கும் போது எல்லோரும் இதுபோன்ற காரியங்களை நம்புகிறார்கள், ஏனென்றால் எல்லோரும் உயர்ந்த காரியங்களைத் தேடுவதில் ஆர்வமாக முன்பே எண்ணம் கொண்டிருக்கிறார்கள், யாரும் மற்றவர்களுக்குப் பின்தங்கியிருக்க விரும்புவதில்லை. இப்படித் தான் ஜனங்கள் இருக்கிறார்கள். துல்லியமாக இந்த காரணத்திற்காகத்தான், பரலோகத்திலுள்ள தேவனுக்கு உகந்தவராக இருக்க உங்களில் அநேகர் தொடர்ந்து முயற்சிக்கிறீர்கள், ஆனாலும், உண்மையாகவே, தேவன் மீதான உங்கள் விசுவாசமும், நேர்மையும் உங்கள் மீதான உங்களுடைய விசுவாசத்தையும், நேர்மையையும் விட மிகக் குறைவு. இதை நான் ஏன் சொல்லுகிறேன்? ஏனென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை நான் ஒப்புக் கொள்ளவேயில்லை, ஏனென்றால் உங்கள் இருதயங்களில் தேவன் இருப்பதை நான் மறுக்கிறேன். அதாவது, நீங்கள் தொழுதுகொள்ளும் தேவன், நீங்கள் போற்றும் தெளிவற்ற தேவன் என்பவர் இல்லவே இல்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லக் காரணம், நீங்கள் மெய்யான தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசத்திற்குக் காரணம் உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் விக்கிரகமே. இதற்கிடையில், என்னைப் பொருத்தமட்டில் நீங்கள் பெரியவருமல்ல சிறியவருமல்ல என்று பார்க்கும் தேவனை, நீங்கள் வெறுமனே வார்த்தைகளாலேயே ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள் என்று நான் கூறும்போது, நீங்கள் மெய்யான தேவனிடமிருந்து தொலைவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அப்பொழுது அந்தத் தெளிவற்ற தேவன் அருகில் இருப்பதுபோலத் தெரிகிறது. "பெரியவருமல்ல" என்று நான் கூறும்போது, இந்த நாளில் நீங்கள் விசுவாசிக்கிற தேவன் எப்படிப் பெரிய திறன் இல்லாத ஒரு நபராக, மிக உயர்ந்தவராக இல்லாத ஒரு நபராகத் தோன்றுகிறார் என்பதைக் குறிக்கிறது. "சிறியவருமல்ல" என்று நான் கூறும்போது, இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த நபரால் காற்றை வரவழைத்து மழையைக் கட்டளையிட முடியாது என்றாலும், வானங்களையும் பூமியையும் உலுக்கும் கிரியையைச் செய்ய தேவனின் ஆவியானவரை அவர் அழைத்து, ஜனங்களை முற்றிலும் குழப்பத்தில் ஆழ்த்த முடிகிறது. வெளிப்புறமாக, நீங்கள் எல்லோரும் பூமியில் இந்தக் கிறிஸ்துவுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவர்களாகத் தோற்றமளிக்கிறீர்கள், ஆனாலும் சாராம்சத்தில், நீங்கள் அவரை விசுவாசிக்கவும் இல்லை, நீங்கள் அவரை நேசிக்கவுமில்லை. அதாவது, நீங்கள் உண்மையிலேயே விசுவாசிக்கும் ஒன்று உங்கள் சுய உணர்வுகளின் தெளிவற்ற தேவனே, மற்றும் நீங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒன்று நீங்கள் இரவும் பகலும் ஏக்கம் கொண்டிருக்கிற தேவன், ஆனால் இன்னும் நேரில் பார்த்திருக்கவில்லை. இந்தக் கிறிஸ்துவிடமான, உங்கள் விசுவாசம் ஒரு சிறு பகுதியே தவிர, உங்கள் அன்பு ஒன்றும் இல்லை. விசுவாசம் என்பது நம்பிக்கை மற்றும் சார்ந்திருத்தல் ஆகும். அன்பு என்றால் ஒருவரின் இருதயத்தில் ஒருபோதும் பிரிந்து செல்லாத அர்ப்பணிப்பு மற்றும் போற்றுதல் ஆகும். ஆயினும், இன்றைய தினத்தின் கிறிஸ்துவின் மீதான உங்களுடைய விசுவாசமும் அன்பும் இதற்கு மிகக் குறைவாக இருக்கிறது. விசுவாசம் என்று வரும்போது, நீங்கள் அவரை எவ்வாறு விசுவாசிக்கிறீர்கள்? அன்பு என்று வரும்போது, நீங்கள் அவரை எந்த முறையில் நேசிக்கிறீர்கள்? அவருடைய மனநிலையைக் குறித்த எந்தப் புரிதலும் உங்களுக்கு இல்லை, அவருடைய சாராம்சத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது, எனவே எப்படி அவர் மீது நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள்? அவர் மீதுள்ள உங்கள் விசுவாசத்தின் யதார்த்தம் எங்கே? நீங்கள் அவரை எப்படி நேசிக்கிறீர்கள்? அவர் மீதான உங்கள் அன்பின் யதார்த்தம் எங்கே?

அநேகர் இன்றுவரை தயங்காமல் என்னைப் பின்தொடர்ந்துள்ளனர். எனவே, கடந்த அநேக ஆண்டுகளாக நீங்கள் அதிக சோர்வைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த குணாதிசயத்தையும் மற்றும் பழக்கவழக்கங்களையும் நான் தெள்ளத் தெளிவுடன் புரிந்துகொண்டிருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்புகொள்வது என்பது வியக்கத்தக்க நிலையில் கடினமானதாக இருக்கின்றது. பரிதாபம் என்னவென்றால், நான் உங்களைப் பற்றி அதிகம் புரிந்து கொண்டிருந்தாலும், நீங்கள் என்னைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு குழப்பமான தருணத்தில் ஒருவரின் தந்திரத்தை நம்பி நீங்கள் அதற்குள் சிக்கியிருக்கிறீர்கள் என்று ஜனங்கள் சொல்வதில் ஆச்சரியமில்லை. உண்மையில், நீங்கள் என் மனநிலையைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, என் மனதில் இருப்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இன்று, என்னைக் குறித்த உங்கள் தவறானப் புரிதல்கள் வேகமாகப் பெருகுகின்றன, மற்றும் என் மீதான உங்கள் விசுவாசம் ஒரு குழப்பமான விசுவாசமாகவே உள்ளது. நீங்கள் என் மீது விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் அனைவரும் எனக்கு உகந்தவர்களாக இருக்கவும், எனனை நோக்கி கெஞ்சவும் முயற்சிக்கிறீர்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனக்கு வெகுமதி அளிக்கக் கூடியவர்களை நான் பின்பற்றுவேன், அவர் தேவனாகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தேவனாகவோ இருந்தாலும், பெரிய பேரழிவுகளிலிருந்து தப்பிக்க யார் எனக்கு உதவுகிறார்களோ, அவர்களை நான் விசுவாசிப்பேன் என்னும் உங்கள் நோக்கங்கள் மிகவும் எளிமையானவை. இவை எதைக் குறித்துமே எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்களிடையே இதுபோன்றோர் அநேகர் உள்ளனர், இந்த நிலை மிகவும் கடுமையானது. ஒரு நாள், உங்களில் எத்தனை பேர் கிறிஸ்துவின் சாராம்சத்தைக் குறித்த நுண்ணறிவால் விசுவாசத்தைக் கொண்டிருந்தார்கள் என்று கண்டறியும் ஒரு சோதனை இருந்திருந்தால், உங்களில் ஒருவர் கூட எனக்குத் திருப்திகரமாக இருந்திருக்கமாட்டீர்களோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வது புண்படுத்தாது. நீங்கள் விசுவாசிக்கிற தேவன் என்னிடமிருந்து மிகவும் வேறுபட்டவர், இது அவ்வாறு இருப்பதால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் சாராம்சம் என்ன? உங்கள் தேவன் என்று அழைக்கப்படுவதை நீங்கள் எவ்வளவு அதிகமாக விசுவாசிக்கிறீர்களோ, அவ்வளவு தூரமாக நீங்கள் என்னிடமிருந்து விலகிவிடுவீர்கள். அப்படியானால், இந்தப் பிரச்சினையின் சாராம்சம் என்ன? உங்களில் யாரும் இதுபோன்ற கேள்வியைச் சிந்தித்துப் பார்த்ததில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் அதனுடைய ஈர்ப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? இந்த வழியில் தொடர்ந்து விசுவாசிப்பதன் விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க