தேவனுடைய அனுதின வார்த்தைகள் | "சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்" | பகுதி 317

செப்டம்பர் 8, 2021

மனிதன் காலம் காலமாக இருளின் அதிகாரத்தின் மறைவில், சாத்தானின் அதிகாரம் எனும் அடிமைத்ததிற்குள் அடைபட்டு, அதிலிருந்து தப்பிக்க முடியாமல் வாழ்ந்து வந்துள்ளான், மேலும் சாத்தானால் பீடிக்கப்பட்ட அவனது மனநிலையும் மிகவும் சீர்கெட்டுப் போகிறது. மனிதன் எப்போதுமே தனது சீர்கேடான சாத்தானின் மனநிலைக்கு நடுவில்தான் வாழ்கிறான், மேலும் அவனால் தேவனை உண்மையாக நேசிக்க முடிவதில்லை என்று சொல்லலாம். இது இப்படியிருக்க, மனிதன் தேவனை நேசிக்க விரும்பினால், அவனது சுய-நீதி, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆணவம், தற்பெருமை, மற்றும் சாத்தானின் மனநிலையிலுள்ள அனைத்தும்ம் அவனிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லை என்றால், அவனது அன்பு தூய்மையற்ற அன்பாக, சாத்தானின் அன்பாக, தேவனின் அங்கீகாரத்தை முற்றிலும் பெற முடியாததாகவே இருக்கும். பரிசுத்த ஆவியினால் நேரடியாக பரிபூரணப்படுத்தப்படாமல், சரிகட்டப்படாமல், நொறுக்கப்படாமல், திருத்தப்படாமல், ஒழுங்குபடுத்தப்படாமல், சிட்சிக்கப்படாமல் மற்றும் சுத்திகரிக்கப்படாமல், ஒருவராலும் தேவனை உண்மையாக அன்பு செய்ய முடியாது. உனது மனநிலையின் ஒரு பகுதி தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதனால் உன்னால் தேவனை உண்மையாக அன்பு செய்ய முடிகிறது என்று நீ சொன்னால், உனது வார்த்தைகளில் கர்வம் நிறைந்துள்ளது, நீ விபரீதமானவன். அதுபோன்றவர்கள் தான் பிரதான தேவதூதர்கள்! மனிதனின் சுபாவங்கள் தேவனை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்த தகுதியானவை அல்ல; அவன் தேவனின் பரிபூரணத்தின் மூலமாக தனது சுபாவங்களைக் கைவிட வேண்டும், அப்போதுதான் தேவனின் சித்தத்தில் அக்கறை காட்டுவதன் மூலம், தேவனின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம், மற்றும் பரிசுத்த ஆவியின் செயலுக்கு உட்படுத்துவதன் மூலமும், அவன் வாழ்கின்ற வாழ்க்கை தேவனின் அங்கீகாரத்தைப் பெறும். பரிசுத்த ஆவியினால் ஒரு மனிதன் பயன்படுத்தப்பட்டாலே தவிர, மாம்சத்தால் ஆன உடலில் வாழ்கின்ற எவர் ஒருவராலும் நேரடியாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. எனினும், இதுபோன்ற ஒரு நபருக்கு கூட, அவனது மனநிலை மற்றும் அவன் வாழும் விதம் முழுமையாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று சொல்ல முடியாது; அவன் வாழ்கின்ற வாழ்க்கை பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும். அத்தகைய ஒரு மனிதனின் மனநிலை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தாது.

மனிதனின் மனநிலை தேவனால் நியமிக்கப்பட்டது என்றாலும் (இது கேள்விக்கு அப்பாற்பட்டது மேலும் ஒரு நேர்மறையான விஷயமாக கூட கருதலாம்), அது சாத்தானால் செயல்படுத்தப்பட்டுள்ளது, அதனால் மனிதனின் மனநிலைகள் யாவும் சாத்தானின் மனநிலையாகும். செய்யும் செயல்களில் நேர்மையாக இருப்பது தேவனின் மனநிலையாகும், தங்களிடமும் இந்த மனநிலை வெளிப்படுத்தப்படுகிறது, அவர்களது குணமும் இப்படித்தான் இருக்கின்றன, அதனால் தங்களது மனநிலை தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ஒருசில மக்கள் கூறுகின்றனர். இவர்கள் என்ன மாதிரியான மக்கள்? சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த இயலுமா? தங்களது மனநிலை தேவனின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது என்று அறிவிக்கும் யாரும் தேவனை நிந்திக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியை அவமதிக்கின்றனர்! பரிசுத்த ஆவி செயல்படுகின்ற விதமானது, பூமியின் மீது செய்யப்படும் தேவனின் பணி வெற்றிச் சிறக்கும் பணி என்பதைக் காட்டுகிறது. இதுபோல், மனிதனிடம் உள்ள பல்வேறு சாத்தானுக்குரிய மனநிலைகள் இன்னும் சுத்திகரிக்கப்படவில்லை, அவன் வாழும் விதம் இப்போதும்கூட சாத்தானின் சாயலாகத்தான் உள்ளது, இதைத்தான் மனிதன் நல்லது என்று நம்புகிறான், இது மனிதனின் மாம்சத்தின் செயல்களைக் குறிக்கிறது; துல்லியமாகச் சொன்னால், இது சாத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துமே தவிர கண்டிப்பாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தாது. இந்த பூமியின்மேல் பரலோக வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய அளவிற்கு யாராவது ஒருவர் ஏற்கனவே தேவனில் அன்புகூருகிறவராக இருந்தால், "தேவனே! என்னால் உம்மை போதுமான அளவு நேசிக்க முடியாது" என்று அவர்கள் கூறலாம். மேலும் தாங்கள் மிக உயர்ந்த சாம்ராஜ்யத்தை அடைந்துவிட்டனர் என்பன போன்ற வாக்கியங்களை உரைப்பார்கள், இருந்தாலும் அவர்கள் தேவனைப் போல் வாழ்கின்றனர் என்றோ அல்லது தேவனைக் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றோ கூற முடியாது, ஏனெனில் மனிதனின் காரியம் தேவனைப் போன்றதல்ல, மேலும் மனிதன் தேவனாக முடியாது, அவனால் ஒருபோதும் தேவனைப் போல் வாழக்கூட முடியாது. தேவன் மனிதனிடம் எப்படி வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்டாரோ அப்படித்தான் மனிதன் வாழ்வை வாழ வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் கட்டளையிட்டுள்ளார்.

சாத்தானின் அனைத்து செயல்களும் செய்கைகளும் மனிதனிடம் வெளிப்படுகிறது. இன்று மனிதனின் அனைத்து செயல்களும் செய்கைகளும் சாத்தானின் ஒரு வெளிப்பாடாகத்தான் உள்ளது, அதனால் அவன் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனிதன் சாத்தானின் உருவகமாக உள்ளான், அதனால் மனிதனின் மனநிலை தேவனின் மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்த முடிவதில்லை. சில மக்கள் நல்ல குணமுள்ளவர்களாக இருக்கின்றனர்; தேவன் அத்தகைய மக்களின் குணங்களின் மூலமாக சில கிரியைகளைச் செய்யலாம், அவர்கள் செய்யும் செயல்கள் யாவும் பரிசுத்த ஆவியின் கட்டளையின்படி நடக்கிறது. எனினும் அவர்களது மனநிலை தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அவர்கள் மீது தேவன் செய்யும் கிரியையானது ஏற்கெனவே அவர்களுக்குள் உள்ளவற்றுடன் கிரியை செய்து அதை மேம்படுத்துவதுதானே தவிர வேறு எதுவுமில்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளாக இருந்தாலும் சரி அல்லது தேவனால் பயன்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, யாராலும் நேரடியாக அவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மக்கள் சூழ்நிலைகளின் கட்டாயத்தினால்தான் தேவன் மீது அன்பு செலுத்துகின்றனர், ஒரு நபர் கூட தங்களது சொந்த விருப்பத்துடன் ஒத்துழைப்பு அளிக்க முயற்சி செய்யவில்லை. நேர்மறை விஷயங்கள் என்னென்ன? தேவனிடமிருந்து நேரடியாக வருவது அனைத்துமே நேர்மறையானவைதான்; எனினும், மனிதனின் மனநிலை சாத்தானால் செயல்படுத்தப்பட்டுள்ளது, அது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அன்பு, உபத்திரவப்படுவதற்கான மனோதிடம், நீதி, கீழ்படிதல், தாழ்மை மற்றும் மனித உருவில் அவதரித்த தேவன் மறைந்திருத்தல் ஆகியவையே தேவனை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஏனென்றால் அவர் வந்தபோது, அவர் ஒரு பாவ சுபாவம் இல்லாதவராக வந்தார் மேலும் சாத்தானால் செயல்படுத்தப்படாமல் தேவனிடமிருந்து நேரடியாக வந்தார். இயேசு பாவ மாம்சத்தின் தோற்றத்தில் வாழ்ந்தாரே தவிர, அவர் பாவத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; அதனால், சிலுவையில் அறையப்பட்டு அவர் தனது பணியை நிறைவு செய்யும் வரை (அவர் சிலுவையில் அறையப்பட்ட சமயம் உள்பட) அவரது செயல்கள், செய்கைகள், மற்றும் வார்த்தைகள், ஆகிய அனைத்தும் நேரடியாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாக உள்ளன. பாவ சுபாவத்தைக் கொண்ட எந்த நபரும் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனிதனின் பாவம் சாத்தானை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை நிரூபிக்க இயேசுவின் உதாரணமே போதுமானதாகும். தெளிவாக கூறுவதென்றால், பாவம் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, தேவன் பாவமற்றவர். மனிதன் மீது பரிசுத்த ஆவி நடப்பித்த கிரியையைக் கூட, பரிசுத்த ஆவியினால் கட்டளையிடப்பட்டதாகத்தான் கருத முடியும், அது தேவனுக்காக மனிதனால் செய்யப்பட்டது என்று கூற முடியாது. ஆனால், மனிதனைப் பொறுத்தவரை, அவனது பாவமோ அவனது மனநிலையோ தேவனை பிரதிநிதித்துவப்படுத்தாது. கடந்த காலம் முதல் இன்றுவரை பரிசுத்த ஆவியானவர் மனிதன் மீது நடப்பித்த கிரியையைப் பார்க்கும்போது, பரிசுத்த ஆவி அவன் மீது கிரியை செய்த காரணத்தால்தான் மற்ற அனைத்தையும் விட அவன் சிறப்பாக வாழ்வதற்கான அம்சம் அவனில் உள்ளது என்பதை ஒருவர் காண்கிறார். ஒரு சிலரால் தான் பரிசுத்த ஆவியானவரால் சரிகட்டப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்ட பின்னர் வாழ்நாள் முழுவதும் இப்படி உண்மையாக வாழ முடிகிறது. சொல்லப்போனால், பரிசுத்த ஆவியின் கிரியைதான் உள்ளது; மனிதனின் சார்பாக ஒத்துழைப்பே இல்லை. இதை இப்போது உன்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா? இது இவ்வாறு இருக்க, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது அவருடன் முழுமையாக ஒத்துழைத்து உனது பணியை நிறைவேற்ற உன்னால் இயன்றதை நீ எப்படிச் செய்வாய்?

"சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நீங்கள் பிரார்த்தனையில் நகர்த்தபடவில்லை என்றால், பிஸியான வேலையின் காரணமாக தேவனை நெருங்க உங்களுக்கு நேரமில்லை என்றால் என்ன செய்வது? எங்கள் ஆன்லைன் கூட்டுறவில் சேருங்கள்.

பகிர்க

ரத்து செய்க

WhatsApp மூலம் எங்களை அணுகுங்கள்