தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 309

மார்ச் 9, 2023

பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும் உபதேசத்தைக் கொண்டிருப்பதனால், அவர்கள் தேவனை எதிர்க்கவில்லையா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கவில்லையா? இதுபோன்றவர்களின் அனுபவங்கள் மேலோட்டமானவை என்றாலும், அவர்கள் இயல்பாகவே அகந்தையுள்ளவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாவும் இருக்கின்றனர், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியமாகக் கருதுகின்றனர், பரிசுத்த ஆவியானவரின் ஒழுக்கங்களைப் புறக்கணிக்கின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை "உறுதிப்படுத்த" தங்கள் பழைய அற்பமான வாக்குவாதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு செயலைச் செய்கின்றனர், மேலும் தங்கள் சொந்தக் கல்வி மற்றும் புலமையை முழுமையாக நம்புகின்றனர், மேலும் அவர்களால் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லவா, புதிய யுகத்தால் அவர்கள் புறம்பாக்கப்படமாட்டார்களா? தேவனுக்கு முன்பாக வந்து அவரை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அறியாதவர்களாகவும், விவரமறியாத பாதகர்களாகவும் இல்லையா, அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் என்பதைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்கள் அல்லவா? வேதாகமத்தைக் குறித்த மிகக் குறைவான அறிவைக் கொண்டு, அவர்கள் உலகின் "கல்வியாளர்களை" வரம்பு மீறி நடக்கச் செய்ய முயற்சி செய்கிறார்கள்; ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு மேலோட்டமான உபதேசத்தைக் கொண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறார்கள், மேலும் அது தங்களின் சொந்த சிந்தனை முறையைச் சுற்றியே சுழல முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குறுகிய பார்வையுடைவர்களாக இருப்பதனால், 6,000 ஆண்டுகால தேவனுடைய கிரியையை ஒரே பார்வையில் பார்க்க முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கென்று குறிப்பிடத் தகுந்த எந்த அறிவும் கிடையாது! உண்மையில், தேவனைப் பற்றிய அறிவை ஜனங்கள் எந்த அளவுக்கு அதிகமாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மெதுவாக அவருடைய கிரியையை நியாயந்தீர்க்கிறார்கள். மேலும், அவர்கள் தேவனுடைய இன்றைய கிரியையைப் பற்றிய அறிவைக் குறித்து சிறிதளவு பேசுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் நியாயத்தீர்ப்புகளில் கண்முடித்தனமாக இருப்பதில்லை. ஜனங்கள் தேவனை எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாகவும், அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர், அந்த அளவுக்கு அவர்கள் தேவன் இருப்பதை தேவையில்லாமல் பறைசாற்றுகின்றனர், ஆனாலும் அவர்கள் கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், உண்மையான ஆதாரங்கள் எதையும் கொடுப்பதில்லை. இதுபோன்றவர்கள் எந்த மதிப்பும் இல்லாதவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒரு விளையாட்டாகப் பார்ப்பவர்கள் அற்பமானவர்களே! பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையாக இல்லாதவர்கள், தங்கள் வாயால் அலம்புகிறார்கள், விரைவாக நியாந்தீர்க்கிறார்கள், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சரித்தன்மையை மறுக்க தங்கள் மனப்பாங்கிற்கு அளவுக்குமீறிய சுதந்திரம் கொடுக்கிறார்கள் மற்றும் அதை அவமதிக்கிறவர்களாகவும் தூஷிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள், இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அலட்சியம் செய்யவில்லையா? மேலும், அவர்கள் மிகுந்த இறுமாப்புள்ளவர்களாவும், இயல்பாகவே பெருமை கொண்டவர்களாகவும், கட்டுப்பாடில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லவா? இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாள் வந்தாலும், தேவன் அவர்களைச் சகித்துக்கொள்ள மாட்டார். தேவனுக்காகக் கிரியை செய்பவர்களை அவர்கள் குறைத்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தேவனுக்கு எதிராக தேவதூஷணம் செய்கிறார்கள். இதுபோன்ற முரட்டாட்டம் பண்ணுகிறவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள், இந்த யுகத்திலோ அல்லது வரவிருக்கும் யுகத்திலோ, அவர்கள் என்றென்றும் நரகத்தில் அழிந்து போவார்கள்! இதுபோன்ற மரியாதையில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் தேவனை விசுவாசிப்பதாகப் பாசாங்கு செய்கின்றனர். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தேவனுடைய நிர்வாக ஆணைகளுக்கு இடறலுண்டாக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே கட்டுப்பாடில்லாத, ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படியாத இறுமாப்புள்ளவர்கள் அனைவரும் இந்தப் பாதையில் நடக்கவில்லையா? எப்போதும் புதியவரும், ஒருபோதும் முதுமையடையாதவருமான தேவனை அவர்கள் நாளுக்கு நாள் எதிர்க்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க